Wednesday 5 November 2014

C-Cleaner!!!

சி கிளீனர் பெயர் காரணம்:

விண்டோஸ் செயல்பாட்டிற்குத் தொடர்பில்லா கோப்புகளை நீக்கி, விண்டோஸ் இயக்கத்தை நல்ல முறையில் செயல்படுத்திட பயன்படும் மென்பொருள் CCleaner. 

கம்ப்யூட்டரில் C: கோலனில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்குவதற்குப் பயன்படுவதால் இதற்கு "C Cleaner" என பொருத்தமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
duplicate file finder and remover ccleaner software
Registry Cleaning உட்பட கம்ப்யூட்டரில் உள்ள தேவையில்லாத குக்கீஸ்கள், பிரௌசர் குக்கீகள், டெம்ப்ரரி பைல்கள், தேவையற்ற மென்பொருள்கள், ஆகியவற்றை நீக்கப் பயன்பட்ட சி கிளீனர் மென்பொருளில் தற்பொழுது கம்ப்யூட்டரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டு உள்ள ஒரே மாதிரியான டூப்ளிகேட் பைல்களை நீக்கும் வசதியும் வந்துவிட்டது.

புதிய வசதியுடன் வெளிவந்துள்ள  "சி கிளீனரில்" இப்போது டூப்ளிகேட் பைல்களையும் நீக்க முடியும்.

டூப்ளிகேட் பைல்களை ஏன் நீக்க வேண்டும்?

ஒன்றுக்குக்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான கோப்புகள் டூப்ளிகேட் கோப்புகள் எனப்படும்.

இந்தக் கோப்புகள் வசதிக்குத் தகுந்த மாதிரி, கம்ப்யூட்டரில் அங்கங்கே வைத்திருப்போம். உதாரணமாக ஒரு கோப்பை எளிதாக பயன்படுத்த டெஸ்க்டாப்பில் வைத்திருப்போம். அதே கோப்பு பேக்கப்பிற்கு ஒரு போல்டரிலும், பாதுகாப்புக்காக என்று சொல்லி மற்றுமொரு போல்டரிலும் வைத்திருப்போம்.

இவ்வாறு நாம் அவ்வப்பொழுது தேவைப்படுகிறது என்பதற்காக கோப்புகளை கம்ப்யூட்டரில் வெவ்வேறு இடங்களில் சேமித்து வைத்திருப்போம்.

டூப்ளிகேட் கோப்புகளின் தீமைகள்:

டூப்ளிகேட் கோப்புகள் அதிகரிக்க அதிகரிக்க கணினியில் இடம் பற்றாக்குறை ஏற்படுவதோடு கணினி செயல்பாட்டிலும் மந்தம் ஏற்படும். அல்லது வேறு வகையான புதிய கோப்புகளை வைத்திருக்கு தேவையான Space இருக்காது.  அதனால் டூப்ளிகேட் கோப்புகளை நீக்குவது அவசியமாகிறது.

சி கிளீனரில் டூப்ளிகேட் பைல்களை நீக்கும் முறை:


சி-கிளீனர் மென்பொருளின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

 சுட்டி: Download NEW Version of C CLEANER 




டவுன்லோட் செய்யப்பட்ட புரோகிராமினை கணினியில் இன்ஸ்டால் செய்துகொண்டு திறக்கவும்.

செய்முறை: 

1. சீ கிளீனர் மென்பொருளில் Tools டேபினைக் கிளிக் செய்யவும்.
2. File Finder என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3. அதில் Ignore என்பதில்  Modified Date under Match By, File Size Under என்ற இரண்டிலும் டிக் மார்க் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
4. அடுத்து சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்சனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
5. அடுத்து Browse என்பதில் கிளிக் செய்து டூப்ளிகேட் பைல் கண்டறியப்பட வேண்டிய கோப்புறையை தேர்ந்தெடுக்கவும்.
6. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட போல்டரில் டூப்ளிகேட் கோப்புகள் இருப்பின் அவற்றைப் பட்டியலிட்டுக் காட்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான, ஒரே மாதிரியான கோப்புகளை வரிசைப்படுத்திக் காட்டயதிலிருந்துதேவையில்லாத டூப்ளிகேட் கோப்புகளை தேர்ந்தெடுத்து நீக்கிவிடலாம்.   

--
சி கிளீனருக்கான ஓர் external மென்பொருள் click&clean



நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம்.  இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது.



Click& Clean சிறப்பம்சங்கள்: 


  1. இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்  உலவாவின் உள்ளமைக்கப்பட்ட உலாவல் வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரௌசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது. 
  2. உங்கள் கணினியிலிருந்து, browsing history அழிக்க ஒரு சிறந்த மென்பொருள் இந்த click and clean. 
  3. ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது.
  4. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்கள் அழிக்க இம்மென்பொருள் உதவுகிறது. 
  5. மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான பயன்மிக்க தாக்க செயலாற்றுகிறது. 
  6. குக்கீகளை நீக்கும் திறன். 
  7. கேட்சிகளை அழிக்கிறது. 

தரவிறக்கச் சுட்டிhttp://www.hotcleaner.com/bin/click_clean_setup.exe

Click&Clean 5.4
Version: Click&Clean 5.4
Released: May 27, 2011
LicenseFreeware, 100% Spyware FREE
OS: XP / Vista / Windows 7
Integration: IE8 - IE9




நிறுவும் முறை: 



click&clean installation step_1


click&clean installation step_2


click&clean installation step_3


click&clean installation step_4


click&clean installation step_5

குறிப்பு: இம்மென்பொருளை நிறுவ நிச்சயம் உங்கள் கணினியில் c cleaner நிறுவியிருக்க வேண்டும். சி கிளீனர் இருந்தால் தான் இம்மென்பொருள் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

CCleaner எப்படி நிறுவது என்பதை இப்பதிவில் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்..


கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!





No comments:

Post a Comment