Wednesday 5 November 2014

தவலை அடை!!!

தவலை அடை சாப்பிட வாங்க!

தவலை அடைக்குத் தேவையான சாமான்கள்:

(பச்சரிசியாகவே இருக்கட்டும்.)அரிசி  இரண்டு கிண்ணம்

து.பருப்பு  ஒரு கிண்ணம்

க.பருப்பு  அரைக்கிண்ணம்

உ.பருப்பு அரைக்கிண்ணம்

மிளகு, சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்(தேவையானால்)

இவற்றைக் களைந்து காய வைத்து மெஷினில் கொடுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.  மிளகு, சீரகம் போட்டாலும் போடலாம். போடலைனாலும் பரவாயில்லை.  ஊறவைத்துக் களைந்து நீரை வடிகட்டி மிக்சியில் கூட உடைத்துக் கொள்ளலாம்.  மொத்தம் மூன்று கிண்ணம் வரும். கொஞ்சம் கூடவோ குறையவோ இருக்கலாம். அவரவர் அளக்கும் முறை மாறுபடும்.

தாளிக்க

எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்

கடுகு,  ஒரு டீஸ்பூன்,

உ.பருப்பு ஒரு டீஸ்பூன்

க.பருப்பு ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

பச்சை மிளகாய்  மிளகு போட்டிருப்பதால் காரம் கொஞ்சம் குறைவாக இருக்கட்டும் என்றால் மூன்று அல்லது நான்குக்குள் போதுமானது.

இஞ்சி ஒரு துண்டு(தேவையானால்)

கருகப்பிலை, கொத்துமல்லி

தேங்காய் ஒரு மூடி. கீறிப் பல்லுப் பல்லாகக் கீறிக் கொள்ளவும்.

வேகவிடத் தேவையான நீர்

உப்பு தேவைக்கு


இப்போது இதைக் கொஞ்சமாக எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும்.  அதற்கு எண்ணெய் ஒரு சின்னக் கிண்ணம்.

வாணலி அல்லது உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடேற்றி  ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். தாளிக்கும் பொருட்களைக் கொடுத்திருக்கும் வரிசைப்படி போட்டுத் தாளிக்கவும்.  கருகப்பிலையைத் தாளிதத்தில் போட்டுவிட்டு, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.  பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

தாளித்ததும் தேவையான நீரை விட்டு உப்பைப் போட்டுக் கொதிக்கவிடவும்.  ரவை போல் உடைத்த மாவைக் கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும்.  தேங்காய்க் கீற்றுகளையும் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரவேண்டும்.  அதே சமயம் குழையவும் கூடாது.  வெந்ததும் கீழே இறக்கிக் கொத்துமல்லியைச் சேர்த்துக் கிளறவும்.  உப்புமா பதத்துக்கு இருத்தல் நலம்.

அடுப்பில் வெண்கல உருளி அல்லது வெண்கலப் பானை அல்லது திருச்சூர் உருளியைப் போட்டு சின்னக் கிண்ணம் எண்ணெயில் பாதி அளவுக்கு அதில் விட்டுக் காய வைக்கவும். கிளறிய மாவை ஒரு ஆரஞ்சு அளவுக்கு எடுத்து உருட்டி.  வாழை இலையில் வைக்கவும்.  வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.  அதை அப்படியே காயும் எண்ணெயில் நிதானமாகப் போடவும்.  வாழை இலையை அப்படியே உருளியில் மாவோடு வைத்தும் தட்டலாம். சூடு பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.   ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஒரு தட்டால் மூடவும்.  ஒரு ஈடுக்கு நான்கு அல்லது ஐந்து தவலை அடைகளைப் போடலாம். தட்டால் மூடி இருபக்கமும் பொன் முறுவலாக வந்ததும் வெளியே எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.
------

தவலை அடை!


இது ஒரு பாரம்பரிய சிற்றுண்டிஎன் மாமியாரிடமிருந்து தான் இதை கற்றுக் கொண்டேன். அந்த காலத்தில் வெண்கலத் தவலையில்(பானை) இதை செய்திருப்பார்கள். அதனால் இந்த பெயர் வந்திருக்கிறது. நாம் இன்று தோசைக்கல்லில் தான் போட்டு செய்யப் போகிறோம். இது கட்லட்டின் முன்னோடி என்று சொல்லலாம்

தேவையானப் பொருட்கள்:-

பச்சரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பல்லு பல்லாக கீறியது – தேவையான அளவு

தாளிக்க:-

எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ¼ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 3 (அ) 4
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:-



அரிசிதுவரம்பருப்புகடலைப்பருப்புமிளகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்வாணலியில் எண்ணெய் காயவைத்துதாளிக்க கொடுத்துள்ள பொருட்களான கடுகுகடலைப்பருப்பு,உளுத்தம்பருப்புபெருங்காயம்கிள்ளிய வரமிளகாய் துண்டங்கள்,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.. வறுபட்டதும் 21/2 தம்ளர் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்த் துண்டங்களையும்தேவையான அளவு உப்பையும்சேர்க்கவும்.. தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள அரிசி கலவையை போட்டு கிளறவும்உதிர் உதிராக வரும் அளவுக்கு கிளற வேண்டாம்தண்ணீர் சுண்டி கொஞ்சம் கெட்டியாக வந்தால் நிறுத்தி விடலாம்.



கை பொறுக்கும் சூட்டில் ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டிவைத்துக் கொள்ளவும்.. தோசைக்கல்லை காயவைத்து உருண்டைகளை உள்ளங்கை அளவு அடைகளாக கைகளில் வைத்தோ அல்லது வாழையிலை,பிளாஸ்டிக் ஷீட் இவற்றில் வைத்தோ தட்டிக் கொள்ளவும்மெலிதாகதட்டவேண்டாம். நான் கைகளில் வைத்தே தட்டுவது தான் வழக்கம்.



ஒரு சமயத்தில் ஏழு அடைகள் வரை தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும்எண்ணெய் விட்டு மூடி போட்டு மூடவும். நிதானமான தீயிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்துகவனமாக அடைகளை திருப்பிப் போட்டுமீண்டும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். இருபுறமும் முறுவலாக வந்த பின்னர் எடுத்து பரிமாறவும். இதற்கு சட்னிசாம்பார் இவையெல்லாம்தேவைப்படாது. உங்களுக்கு விருப்பமிருப்பின் அவற்றோடோ அல்லது இட்லி மிளகாய்ப்பொடியுடனோ சாப்பிடலாம்.

சுவையான தவலை அடைருசிக்க தயார்….


No comments:

Post a Comment