Tuesday, 18 November 2014

வரவு – செலவு கணக்கு… கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!!!

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? இந்த மாதிரியான ஒரு வேலையைத்தான் இன்றைய பல ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் செய்கின்றன. அவற்றுள் ஒரு சில ஆஃப்ஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மை பட்ஜெட் புக்!
Rating   4.6
இந்த ஆப்ஸ் ஒருவரது செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன் மூலம் அவரது நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரி செலவை பதிவு செய்துவந்தாலே போதும்; இந்த மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னமும் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இந்த ஆப்ஸ் தானாகவே திரட்டி, திட்டம் போட்டுத் தந்துவிடும். அதற்கேற்ப உங்கள் செலவுகளை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை. இதனை ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டின் பணமாக இருந்தாலும், அதற்கேற்ப இந்த பட்ஜெட் புக் சரியான திட்டமிடலைச் செய்யும் திறன்கொண்டதாக இருக்கிறது.
இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிகப் பாதுகாப்புடன் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸ்எல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாங்கலாம். இந்த ஆப்ஸின் விலை 212 ரூபாய் மட்டுமே. புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன. 5-க்கு 4.6 ரிவியூ பெற்றிருக்கும் இந்த ஆப்ஸ் நிதித் திட்டமிடலுக்கான சிறந்த ஆப்ஸாக உள்ளதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். இதன் கடைசி அப்டேட் ஆகஸ்ட் 2014-ல் வெளிவந்துள்ளது.
ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்!
Rating 4.3 
சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இஎம்ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து கடனைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது பல ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போன்களில் வரத் துவங்கிவிட்டன. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் எனும் இந்த ஆப்ஸ் ஒருவரது அனைத்து ஃபைனான்ஷியல் கணக்குகளையும் கணக்கிட்டுச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நமது முதலீடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால் அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.3 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் ஃபைனான்ஷியல் கணக்கீடுகளுக்கு உதவும் சிறந்த ஆப்ஸ் என பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
தினசரி செலவுகளைச் சமாளிக்கும் ‘டெய்லி எக்ஸ்பென்ஸ்’!
Rating    4.5
தினசரி நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலே செலவு செய்கிறவர்களுக்குத் தடுப்புக்கட்டை போடுகிற ஆப்ஸ்தான் இது. இதன்மூலம் ஒருவர் தனது மாத வருமானத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார், அதன் மூலம் மாத வருமானம் எப்படி குறைந்திருக்கிறது, இந்த விகிதத்தில் செலவழித்தால், இந்த மாதம் அவரது வருமானத்தில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும் என்பதைக் கணித்துத் தரும் வகையில் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸை பயன்படுத்தி தினசரிக் கணக்குகளுக்கான வார, மாத விவரங்களை கிராபிக்ஸ் படங்களாக பெற முடியும். இதில் நாம் பயன்படுத்தும் நாட்டின் பணத்துக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இதற்கு 5-க்கு 4.5 ரிவியூ பெற்றிருக்கிறது.
தினசரி வரவு – செலவுகளைக் கணக்கிட இது மிகவும் உதவியாக இருப்பதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!
Rating   4.4
பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.4 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் வருமான வரித் திட்டமிடலுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆப்ஸாக கருதப்படுகிறது என்கின்றனர் இதைப் பயன்படுத்துகிறவர்கள்.
கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த ஆப்ஸை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன

நீங்களும் உருவாக்கலாம் பார்கோட்!!!

வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.

 பார்கோட் வடிவில் நதிக்கரை

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கீழே எண்களுடன், தடிமனான கோடு, மெல்லிய கோடு என்று பலவிதமான வடிவங்களில் செங்குத்து வரிசையில் கோடுகள்  சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இக் கோடுகளின் தொகுப்பையே பார்கோட்(Barcode) என்கின்றனர். இது ஒரு சர்வதேச குறியீட்டு முறையாகும்.

இம்முறை முதன்முதலில் ரயில் போக்குவரத்திற்காக 1949களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றுள்ள பார்கோட் முறை உருவாக்கப்பட்டது.

PDF417 வடிவில் நதிக்கரை

ஒரு பொருளில் பதியப்படும் பார்கோடை வைத்து அப்பொருளைத் தயாரித்தவர், தயாரிப்பு தேதி, அதன் விலை, பொருள் எந்த வகையைச் சார்ந்தது, வரிசை எண் ஆகிய விபரங் களை எளிதில் தெரிந்து கொள்ளமுடியும்.

இக்குறியீட்டைப் படிக்க பார்கோட்ஸ்கேனர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. பார்கோடுகளின் மீது லேசர் ஒளிக் கற்றையை செலுத்திய விநாடி யில் அப்பொருள் குறித்த விபரம் கணினியில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.

பார்கோட்களின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் நான்கு பிரிவு
களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முதல் பிரிவு விற்கப்படும் பொருளின் வகையைக் குறிப்பதாகவும், இரண்டா வது பிரிவு தயாரிப்பாளரைக் குறிப்பதா கவும், மூன்றாவது பிரிவு பொருளின் தனித்த விபரத்தைக் குறிப்பதாகவும், நான்காவது பிரிவு மேற்கண்ட மூன்று பிரிவு விபரங்களும் சரிதானா என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

பல வகையான பார்கோட் முறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பார்கோட்கள் பொதுவாக வர்த்தகப் பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றினாலும், வேறு பல வகையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

பார்கோட் முறையில் சாதாரண நேரோட்ட பார்கோட் மற்றும் 2டி பார்கோட் என இருவகை உண்டு.

வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள பார்கோட்கள் பொதுவாக யூ.பி.சி. என்ற வகை சார்ந்ததாக இருக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த விபரம், நோய் மற்றும் சிகிச்சை தகவல்களைப் பதிந்து வைக்கவும், வங்கிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் கோட்பார் என்ற பழைய பார்கோட் குறியீட்டு முறை சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பார்கோடில் இன்டர் லீவ்ட் 2 என்ற ஒரு வகை உண்டு. இது நூலகங்கள், மொத்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நான் இன்டர்லீவ்ட் 2 எனப்படும் மற்றொரு முறையை தொழில் துறையில் பின்பற்றுகின்றனர்.  இவை யனைத்தும் நேரோட்ட பார்கோடு வகை சார்ந்தவை.
QR Code வடிவில் நதிக்கரை

இதுபோல க்யூ.ஆர். குறியீடு (Q.R. Code) வகை ஒன்று உண்டு. இது டெயோட்டா நிறுவனத்தால் கார் பாகங்களை பிரித்துணர உருவாக்கப்பட்டது. தற்போது எவரும் பயன்படுத்திக் கொள்ள பொதுப் பயன்பாட்டில் உள்ளது.

க்யூ.ஆர்.கோடில் பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் பகுதிக்கான பாகை அளவு எனப் பல விபரங்களைப் பதிந்திட முடியும். க்யூ.ஆர்.கோடில் அமைக்கப்பட்ட தகவலை அறிய மற்ற பார்கோடுகளுக்கு உள்ளதுபோல தனியாக ஸ்கேனர் கருவிகள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களே போதும். பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கான க்யூ.ஆர். கோடு ரீடர் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

யூ.பி.சி., க்யூ.ஆர். உள்ளிட்ட பார் கோடுகளை எளிதாக உருவாக்க இலவச இணையதளங்களும் உள்ளன.

பார்கோடு, கியூ.ஆர்.கோட் உருவாக்க
http://www.barcode-generator.org/
http://www.barcoding.com/upc/ 
http://zxing.appspot.com/generator/
http://barcode.tec-it.com/ 
http://www.racoindustries.com/barcodegenerator/2d/qr-code.aspx 

பார்கோடு, கியூ.ஆர்.கோட் தகவல்களைப் படிக்கும் இணையதளங்கள்
http://www.onlinebarcodereader.com/ 
http://zxing.org/w/decode.jspx 

மேற்கண்டவை அல்லாமல் மேலும் பல வகை பார்கோடு குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் உள்ளன.
பார்கோடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள

en.wikipedia.org/wiki/Barcodeen.wikipedia.org/wiki/QR_code 
www.barcodesinc.com 
en.wikipedia.org/wiki/Barcode_reader 

விண்டோஸ் -- பைல்களின் வகைகள்!!!

விண்டோஸ் -ஒவ்வொரு பைல்களின் வகைகள் விளக்கங்களுடன


நாம் விண்டோஸ் இயக்கத் தொகுப்பினைப் பயன்படுத்துகையில் ஒரு பைலைத் திறந்து இயக்க அது என்ன வகை பைல், அதனைத் திறக்க எந்த புரோகிராமினைத் திறக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல் பைல் பெயர் மீது அல்லது அதன் ஐகான் மீது இருமுறை கிளிக் செய்கிறோம்.
டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்: 
கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.
.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும்.
.ppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.
.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.htm / .html : ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.

சுருக்கப்பட்ட பைல்கள்:
கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.
.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

பட பைல்கள்:
விண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களை உருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப் பெயர்கள் தரப்படுகின்றன.
.psd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும் உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம் அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழி செய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன் பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின் அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும் புரோகிராம் www.herculesoft.com என்னும் முகவரியில் கிடைக்கிறது.
.psp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலை அதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.
.bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும் அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம் மூலமும் இதனைத் திறக்கலாம்.
.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடு இன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ் பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதி நவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ் புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.
.gif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்து பார்ப்பது எளிது.
.tif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில் திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் எளிமையானதாகும்.
.scr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்று டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத் தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர் பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.

ஆடியோ பைல்கள்:
இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.
.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.
aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.
.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள்:
சில பைல்களை அதன் மீது டபுள் கிளிக் செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்த பைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.
.exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம் இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்து இயங்கும்.
.bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள் தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்திடலாம்.
.vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம் புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களை வடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களை எழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ் புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன் உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனை ஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்

Interesting Links!!!

1)இன்னைக்கு எதற்கு எடுத்தாலும் கூகிள் சென்று தேடுவது வழக்கம் ,ஆனால்நாங்கள் தேடும் விஷயம் தனி தனி யாக இருந்தால் எப்படி ,உதாரணமாக mp3 அல்லது pdf போன்றவற்றை இலகுவாக தேடலாம் ,எப்படி ? அதை பத்திய பதிவுதான் இன்றைக்கு என்னுடைய பதிவில்
முதலில் இலகுவாக mp3 ,avi ,mpeg போன்ற வற்றை இலவுவாக தேடிக்கொல்லாம்.இதில் உங்களுக்கு தேவையான file கள் தரவிறக்கம் சையும் வகையில் hotfile .rapidshare ,megaupload ,போன்றவற்றில் கிடைக்கிறது
file tube link click here


2)pdf இது இலவுவாக எங்களுக்கு வேண்ட்டிய e book ,மற்றும் அணைத்து விதமான pdf க்களும் தரவிறக்கம் செய்துகொல்லாம் நீங்களும்
முயற்சி பனி பாருங்க search pdf

3)எல்லாவிதமான free software உம் ஒரே இடத்தில கிடைத்தால் எப்படி ,கிடைக்கிறது ,நீங்கள் கூகிள் தேடவேண்டிய அவசியம் இல்லை ,அத்தனை சாப்ட்வேர் உம் வகை வகையாக குடுத்து இருக்கிறார்கள் உதாரணமாக avast , avira ,c - clean இதொபோன்றநிறைய நிறைய மென்பொருள் இங்கு கிடைக்கேறது Free software click here
4)ஒரு serial உக்காக கூகிள் போன்ற வலைதளங்களில் தேடி வைரஸ் வாங்கி காட்டிக் கொள்ளாமல் இலகுவாக தேடிக்கொள்ளலாம் ,கூகிள் லில் வைரஸ் இருக்கும் என சொல்ல வரல ஆனால்,கூகிள் தரும் தளங்களில் வைரஸ் இல்லை என சொல்ல முடியாது இல்லையா ,ஆனால் இப்போது கூகிள் பீட்டா வில் செக்யூரிட்டி அதிகம் என சொல்லப்படுகிறது பீட்டா version இக்கு https://www.google.com/ கூகிள் லோகோவின் பக்கத்தில் பூட்டு போன்ற ஒன்று இருக்கும் ,http பக்கத்தில் ஒரு s இருக்கும் மேலே தந்த லிங்க் இ கிளிக் பண்ணி பாருங்க You serials click here

Tuesday, 11 November 2014

Ask மால்வேர் நீக்குவது எப்படி!!!

இணையத்தில் ஏதாவது ஒரு மென்பொருளைத் தரவிறக்கும் செய்யும்பொழுதோ, அல்லது ஏதேனும் ஒரு வலைத்தளத்தை திறந்து பார்க்கும்பொழுதோ, இவலசமாக விளம்பர தளங்கள், டூல்பார்கள், அத்தளத்திற்கான பிளகின்கள் (Plugins) தானாகவே உங்கள் கணினியில் தரவிறக்கம்செய்யப்பட்டு, பிரௌசரில் இணைந்துவிடும். 

அவ்வாறு இணையும் ஒரு தேவையற்ற சர்ச் என்ஜின் தளம்தான் ASK. 

உங்களுடைய பிரௌசரில் தானாகவே Home Page - மாற்றிவிடும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பிரௌசரை திறக்கும்பொழுது Default home page ஆக இந்த ஆஸ்க் தளமே காட்டப்படும்.

Aks-Malware-program-removal-methods
Ask  மால்வேர் நீக்குவது எப்படி?


இதை நீக்குவது எப்படி?

வழிமுறை 1: 


உங்கள் பிரௌசர்களில் Settings ஆப்சனைத் திறக்க வேண்டும். 

நீங்கள் குரோம் பிரௌசர் பயன்படுத்தினால் , 

வலது மேல் மூலையில் உள்ள செட்டிங்ஸ் ஐகானை (three bar icon)கிளிக் செய்யுங்கள்...
தோன்றும் விண்டோவில் டூல்ஸ் கிளிக் செய்து Extensions பெறலாம்..

நீங்கள் பயர்பாக்ஸ் பிரௌசர் பயன்படுத்தினால்,

இடது மேல் மூலையில் உள்ள ஆரஞ்சு வண்ண பட்டனை அழுத்தி Add ons என்பதை கிளிக் செய்து Extensions பெறலாம்..

Extensions என்பதை கிளிக் செய்யும்பொழுது, நீங்கள் இதுவரைக்கும் பயன்படுத்திக்கொண்டிருந்த, உங்கள் பிரௌசரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் அனைத்து "எக்ஸ்டென்சன்"களையும் கட்டும். 

அதில் "ASK" எக்ஸ்டென்சன் எனேபிள் (Enable) என டிக் செய்யப்பட்டு இருக்கும். 
அதில் உள்ள டிக்மார்க் எடுத்து Disable செய்துவிடுங்கள்.  

அவ்வாறு செய்யும் பொழுது உங்கள் பிரௌசரில் இருந்து அந்த டூல்பார், எக்ஸ்டென்சன்கள் நீங்கிவிடும். 

ஆனால் உங்கள் கம்ப்யூட்டரை விட்டு இன்னும் அவைகள் நீங்கியிருக்காது.

வழிமுறை 2:

கம்ப்யூட்டரிலிருந்து நீக்க வேண்டுமெனில், கம்ப்யூட்டரில் Start பட்டனை அழுத்தி, Control Panel செல்லவும்.

Add or remove Program அல்லது Programs and Features என்பதை கிளிக் செய்து, அங்கிருக்கும் ASK toolbar, ASK search - ஐ அன்இன்ஸ்டால் கொடுத்து நீக்கவிடலாம். 

இந்த முறையில் நீங்கள் நீக்கிய பிறகு உங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து பாருங்கள். 

அப்பொழுதும் அந்த ஆக்ஸ் டூல்பார் தோன்றினால், கடந்த பதிவில் கூறியபடி, நிச்சயம் அது மால்வேர் வைரஸ் புரோகிராமாகத்தான் இருக்கும். 

வழிமுறை 3:
மால்வேர் புரோகிராமினை நீக்கிட ஒரு சிறந்த மென்பொருள் மால்வேர் பைட்ஸ். இது இலவசமானது. கட்டண மென்பொருளாகவும் கிடைக்கிறது. 

அதுபோன்றதொரு ஆன்டி மால்வேர் புரோகிராம் ஒன்றினை தரவிறக்கம்செய்து இயக்கி, உங்களது கணினியில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்கிடலாம். 

மால்வேர் பைட்ஸ் Anti-Malware புரோகிராமினை தரவிறக்கம் செய்ய சுட்டி: 


இந்த புரோகிராம் ஆஸ்க் டூல்பார், ஆஸ்க் சர்ச் (ASK Toolbar) போன்ற மால்வேர் புரோகிராம் இருப்பினும் அவற்றை நீக்கிவிடும். 

அவ்வாறு மால்வேர்கள் நீக்கப்பட்டவுடன் உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.

மீண்டும் அதுபோன்ற மால்வேர் புரோகிராம்களின் தளங்கள் தோன்றாது.


RAM Optimizer!!!

கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.

இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.

ram-optimizer-for-your-pc


விண்டோஸ் இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது. இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது. 


இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:

http://www.maxpcsecure.com/maxramoptimizer/ 



  1. Max RAM Optimizer provides fully Automation option. You don’t need to monitor your pc continuously. Max RAM Optimizer does this for you. 
  2. Whenever your pc’s memory goes below to a limit selected by you, it will increase available physical memory automatically moreover you have also option to optimize your pc’s memory on regular intervals.
  3. Max RAM optimizer provides several features to facilitate optimization process. You can start optimizing when you start windows. You can move it to system tray at your option, being in system tray it continuously monitors your pc. 
  4. After optimization process, you can see in the optimization report how much memory has been released in this optimization process. Option for clearing clipboard content also has been provided.
  5. Ultimately, Max RAM Optimizer is very user friendly which removes the tension of your pc’s memory from your memory. So use the Max Ram Optimizer and free your memory from the problems of your pc’s memory.  

Monday, 10 November 2014

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
Like

ஜாதகம் பார்பது ஏன் தெரியுமா!!!

ஜாதகம் பார்பது ஏன் தெரியுமா?

ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு. இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில், 
விவரங்களை எழுதி வைப்பார்கள். நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்துகிறது. ராசி என்பது 12 பாகத்தில் ஒரு பகுதி, இப்போதைக்கு ராசி என்றால் என்ன என்பதை இந்த அளவிற்கு புரிந்து கொண்டால் போதுமானது.

உடனே, என்னுடைய ராசி சிம்மம் என்று ஜோதிடர் சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன தலைவா? என்று கேட்கத் தோன்றும். பொதுவாக ஜோதிடர் சொல்லும், உங்களுடைய ராசி, பத்திரிக்கையில் வரும் வார ராசிபலன், மாத ராசிபலன் எல்லாம் எதனைக் குறிக்கிறது என்றால், “ஜென்ம ராசி”யைக் குறிக்கும். அடுத்த கேள்வி, ஜென்ம ராசி என்றால் என்ன?

ஜென்ம ராசி என்பது, பிறந்த நேரத்தில் ராசி சக்கரத்தில், எந்த ராசியில் சந்திரன் நிற்கிறாரோ, அந்த ராசி தான் உங்கள் ஜென்ம ராசியாகும். அதனால் இன்று முதல், உங்கள் ராசியை, ஜென்ம ராசி என்று கூறி பழகுங்கள். அப்படி என்றால் கோவில்களில், அர்ச்சனை செய்யும் பொழுது, அர்ச்சகர் உங்க நட்சத்திரம் சொல்லுங்கோ! என்று கேட்கிறாரே, அது என்ன?

நமக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் சந்திரன். அருகில் உள்ளதால், அதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும், அதனால் அதன் இருப்பை துல்லியமாக கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. துல்லிய கணக்கீட்டிற்காக, மீண்டும் அண்ட வெளியை, 108 பாகமாக பிரித்து (அந்த 1 பாகத்தை, 1 பாதம் என்று இனி சொல்லுவோம்) அதில் எந்த பாகத்தில், (பிறந்த நேரத்தில்) சந்திரன் நிலை கொண்டுள்ளான் என்று குறிப்பார்கள். அதாவது, அண்ட வெளியை 12 பாகங்களாகப் பிரித்தால், அதன் 1 பாகத்தை ராசி என்றும், 108 பாகமாக பிரித்தால், அதன் 1 பாகத்தை, பாதம் என்றும் சொல்லுவோம்.

4 பாதத்திற்கு ஒரு பெயர் சூட்டினால் அது நட்சத்திரம் ஆகும். அப்படியென்றால் 108/4 = 27, அதாவது அண்டத்தை 27 நட்சத்திரமாக பிரித்து பெயர் சொல்லாம். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

27 நட்சத்திரம் தான் வான் வெளியில் உள்ளதா? என்று ஒரு அன்பர் கேட்பது காதில் விழுகிறது. பெயர் அப்படி தனித்தனியாக வைதுள்ளார்களே தவிர, ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரக் கூட்டமாகும். உதாரணத்திற்கு கார்த்திகை என்பது 6 நட்சத்திரங்கள் சேர்ந்த ஒரு கூட்டமாகும். பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் அதனை அறுமீன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நமக்கு அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளார்கள்.

உங்கள் ஜாதகத்தில், 108 பாதத்தில் முதல் 4 பாததிற்குள், சந்திரன் நின்றால் நீங்கள் அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர், அதாவது உங்கள் “ஜென்ம நட்சத்திரம்” அஸ்வினி ஆகும். உதாரணத்திற்கு 3 வது பாதத்தில் சந்திரன் நின்றால், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகத்தில், அஸ்வினி-3 என்று குறிப்பிடுவார்கள். இனி அர்ச்சகர் கேட்கும் போது அஸ்வினி 3-ஆம் பாதம் என்றுதான் கூற வேண்டும்.
சரி நண்பர்களே ! இனி கோவிலில் அர்ச்சகர் கேட்கும் போது உங்கள் ஜென்ம நட்சத்திர, பாதம் என்னவென்று உங்கள் ஜாதகத்தை பார்த்து அதன் படி கூறுங்கள். பாதம் கண்டிப்பாக கூற வேண்டும்.

Nakshatra Names!!!

No Samskritam, Telugu, Kannada, Hindi, Gujarati, MarathiTamilMalayalamFirst Letter of Baby's Name
Aswini
अश्विनि
అశ్విని
Aswini
அசுவினி
AswathiChu, Che, Cho, La
चु, चे, चो, ला
Bharani
भरणी
భరణి
Bharani
பரணி
BharaniLee, Lu, Le, Lo
ली, लू, ले, लो
Krithika
कृत्तिका
కృతిక
Karthigai
கிருத்திகை
KaarthikaA, E, U, Ea
अ, ई, उ, ए
4Rohini
रोहिणी
రోహిణి
Rohini
ரோகிணி
RohiniO, Va, Vi, Vu
ओ, वा, वी, वु
Mrigashiras
म्रृगशीर्षा
మ్రిగాసిర
Mrigasheersham
மிருகசிரீஷம்
MakeeryamWe Wo, Ka, Ki
वे, वो, का, की
Aardhra /
Arudra (Telugu)
आर्द्रा
ఆరుద్ర
Thiruvaathirai
திருவாதிரை
ThiruvaathiraKu, Gha, Ing, chh
कु, घ, ङ, छ
Punarvasu
पुनर्वसु
పునర్వసు
Punarpoosam
புனர்பூசம்
PunarthamKe, Ko, Ha, Hi
के, को, हा, ही
Pushyami
पुष्य
పుష్య
Poosam
பூசம்
PooyyamHu, He, Ho, Da
हु, हे, हो, डा
9Ashlesha
आश्लेषा
ఆశ్లేష
Aayilyam
ஆயில்யம்
AayilyamDe, Du, De, Do
डी, डू, डे, डो
10 Magha/Makha
मघा
మాఘ
Makam
மகம்
MakhamMa, Me, Mu, Me
मा, मी, मू, मे
11 P.Phalguni/PoorvaPhalguni
/Pubba(Telugu)
पूर्व फाल्गुनी
పూర్వ ఫల్గుని
Pooram
பூரம்
PooramMo, Ta, Ti, Tu
मो, टा, टी, टू
12 U.Phalguni/Uthraphalguni
/Uttara(Telugu)
उत्तर फाल्गुनी
ఉత్తర ఫల్గుని
Uthiram
உத்திரம்
UthramTo, Pa, Pe, Pu
टो, पा, पी, पू
13 Hastha
हस्त
హస్త
Hastham
ஹஸ்தம்
AthamPu, Sha, Na, Tha
पू, ष, ण, ठ
14 Chitra
चित्रा
చిత్ర
Chithirai
சித்திரை
ChitraPe, Po, Ra, Re
पे, पो, रा, री
15Swaathi
स्वाति
స్వాతి
Swaathi
சுவாதி
ChothiRu, Re, Ro, Taa
रू, रे, रो, ता
16 Vishaakha
विशाखा
విశాక
Visaakam
விசாகம்
VisaakamTi, TU, Tea To
ती, तू, ते, तो
17Anuraadha
अनुराधा
అనురాధ
Anusham
அனுஷம்
AnizhamNa, Ne, Nu, Ne
ना, नी, नू, ने
18 Jyeshta
ज्येष्ठा
జ్యేష్ట
Kettai
கேட்டை
ThrikkettaNo, Ya Yi, Yu
नो, या, यी, यू
19Moola
मूल
మూలా
Moolam
முலம்
MoolamYe, Yo, Ba, Be
ये, यो, भा, भी
20  P.Shada/Poorvashaada
पूर्वाषाढ़ा
పూర్వాషాఢ
Pooraadam
பூராடம்
PooraadamBhu, Dha, pha Dha
भू, धा, फा, ढा
21U.Shada/Uthrashaada
उत्तराषाढ़ा
ఉత్తరాషాఢ
Uthiraadam
உத்திராடம்
UthraadamBhe, Bho, Ja, Ji
भे, भो, जा, जी
22Shraavan
श्रवण
శ్రవణ
Thiruvonam
திருவோணம்
ThiruvonamJu/khi, Je/khu, Jo/khe, Gha/kho
खी, खू, खे, खो
23Dhanishta
धनिष्ठा
ధనిశ్త
Avittam
அவிட்டம்
AvittamGa, Gi, Gu, Ge
गा, गी, गु, गे
24 Shathabhisha
शतभिषा
శతభిష
Chathayam/Sadayam
சதயம்
ChathayamGo, Sa, Si, Su
गो, सा, सी, सू
25P.Bhadra/Poorvabhadra
पूर्वभाद्र
పూర్వాభాద్ర
Poorattathi
பூரட்டாதி
PoorattadhiSe, So, Da, Di
से, सो, दा, दी
26U.Bhadra/Uthrabhadra
उत्तरभाद्र
ఉత్తరాభాద్ర
Uthirattathi
உத்திரட்டாதி
UthrattathiDu, tha, Jha, Da
दू, थ, झ, ञ
27Revathi
रेवती
రేవతి
Revathi
ரேவதி
RevathiDe, Do, Cha, Chi
दे, दो, च, ची