Sunday 13 July 2014

உப்பு உருண்டை!!!




உப்பு உருண்டை - Uppu Urundai Recipe- Steamed Rice Balls

..எளிதில் செய்ய கூடிய சத்தான Snack இது...இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  புழுங்கல் அரிசி - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் -  2 மேஜை கரண்டி
  .  கடுகு - 1/4 தே.கரண்டி
  .  கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
  .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  காய்ந்தமிளகாய் - 3 (இரண்டாக உடைத்து கொள்ளவும்)
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக



செய்முறை :
  .  புழுங்கல் அரிசியினை தண்ணீரில் சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  .  அரிசியினை கழுவி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.



 .  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இதில் அரைத்த மாவினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொள்ளவும்.



  .  மாவு கெட்டியாக உருண்டையாக உருட்டும் பதம் வரும் வரை கிளறி கொள்ளவும். (சுமார் 3 - 5 நிமிடங்கள் )



  .  மாவு கிளறிய பிறகு அதனை 3 - 5 நிமிடங்கள் ஆறவிடவும்.மாவு ஆறிய பிறகு அதனை Medium Size உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். (கவனிக்க: அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற போல் உருண்டைகளின் அளவினை பார்த்து கொள்ளவும்.)

  .  உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.



 .  சுவையான சத்தான மாலை நேர சிற்றுண்டி ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

No comments:

Post a Comment