Tuesday, 29 July 2014

கிச்சன் டிப்ஸ்!!!



* வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
* பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.
* பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் கடாயில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன் பின், டப்பாவில் போட்டு வைத்தால், பூச்சி பிடிக்காது.
* பருப்பு ரசம் செய்றீங்களா? இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போடுங்கள். அதன் சுவை சூப்பராக இருக்கும்.
* தோசை பொடி அரைக்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை வறுத்து, பருப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். இப்படி செய்வதால், வாசனையாக இருப்பதுடன் எளிதில் செரிக்கும்.
* வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்.
* ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.
* முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* பாயசம் செய்யும் போது பால் திரிந்து போனால், இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை போட்டால் திரிந்த பால் சரியாகிவிடும்
* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
* தேங்காய் துருவும் போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக் கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
* துவையல் அரைக்கும் போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு.
* துவரம்பருப்பை வேக வைக் கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.
* பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமை கஞ்சி உண்டு வந்தால், மாதவிலக்கு ஒழுங் காக நடைபெறும்.
கிச்சன் டிப்ஸ் – 3
*காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
* காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.
* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.
* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.
* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.  

கிச்சன் டிப்ஸ் – 4




* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.
*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.
*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.
*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவை தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.
*உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
*பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
*மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
*கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.
*தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
*தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.
*மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.
*வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன் படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.
கிச்சன் டிப்ஸ் – 5
* வீட்டில் உள்ள எலிகள் மற்றும் பூச்சிகளை விரட்ட, அடர்ந்த பெப்பர்மின்ட் மற்றும் ஸ்பியர்மின்ட் ஆயில்களை சுவற்றின் ஓரங்கள், கூரைகளின் விளிம்புகள் மற்றும் மூலை முடுக்குகளிலும் தடவி வைத்தால் போதும்.
* செடிகளை பாதுகாப்பதற்கான ஸ்பிரே தயாரிக்க, 3லி., தண்ணீரில் நான்கு துளிகள் லாவண்டர் மற்றும் தைலம் ஆயில் சேர்த்தால், செடிகளை பாதுகாக்கும் ஸ்பிரே ரெடி.
* மரச்சாமான்களுக்கான பாலீஷ் தயாரிக்க, இரண்டு டம்ளர் சூடான நீரில் கால் பாகம் குளியல் சோப்பை கரைக்க வேண்டும். அதில் இரண்டு டம்ளர் டர்பன் டைன், ஒரு டம்ளர் உருக் கிய தேன் மெழுகு ஆகியவற்றை ஊற்ற வேண்டும். அதன் பின் இறுதியாக 10 துளிகள் சந்தன எண்ணெய் சேருங்கள். மரச் சாமான்களுக்கான பாலீஷ் தயார்.
* பூக்கள் வாட தொடங்கியதும், அவற்றை அப்படியே தூக்கி எறிந்து விடாமல், வாடிய இதழ்களை மட்டும் பிய்த்து விட்டு, வாடாமல் காம்புடன் இருக்கும் இதழ்களை அப்படியே ஒரு செராமிக் கிண்ணத் தில், டிஸ்பிரினை பொடி செய்து கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி வையுங்கள்.
இதில் வெதுவெதுப்பான தண்ணீர் காம்புகள் தண்ணீரை எளிதில் உறிஞ்ச உதவுகிறது. அதில் கலக்கப்படும் டிஸ்பிரின், காம்பு தொடர்ந்து தண்ணீரை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. பின்னர் அவற்றை ஒரு டேபிளில் அழகாக அடுக்கி வைத்தால் பார்க்கவே அழகாக கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.
* இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உங்கள் ஞாபக சக்தி குறைந்து அதிகமாக மறதி ஏற்படுகிறதா அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை மறந்து விடுகின்றனரா?
அப்படின்னா இதப்படிங்க…
உங்கள் வீட்டில் உள்ள ஏதாவது ஒரு ஷெல்ப்பின் கதவை, கரும்பலகையாக மாற்றி விடுங்கள். பின் அதில் உங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் பணிகளை பட்டியலிட்டு எழுதிவிடுங்கள். இதனால் யாரும் தங்களது பணிகளை மறக்க வாய்ப்பில்லை. வேலைகளும் எளிதாக நடைபெறும். முக்கியமான ஒரு விஷயம், கரும்பலகையின் அருகிலேயே ஒரு துடைப்பானும், ஒரு சாக்பீசும் வைக்க மறந்து விடாதீர்கள்.
* அதிகப்படியான படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளிகளை மறைவாக வைப்பதற்கு சிறந்த இடம் கட்டிலின் கீழே காணப்படும் இடம். ஆனால், அங்கி ருந்து பொருள் களை திரும்ப எடுப்பது என்பது சிரமமான ஒன்று. எனவே, படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளிகளை, நகரும் பலகையின் மீது வைத்து கட்டிலின் அடியில் வைத்து விடலாம்.
ஒரு மரப்பலகையில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டால் போதும். நகரும் பலகை தயார். இப்போது பலகையின் மேல், அதிகப்படியான படுக்கை விரிப்புகள் மற்றும் கம்பளிகள் ஆகியவற்றை அடுக்கி, அதன் மீது மெல்லிய துணி அல்லது பிளாஸ்டிக் உறையால் மூடி வைத்து விடுங்கள். இதனால் அதன் மீது தூசி படியாமல் இருப்பதோடு, நமக்கு எடுப்பதற்கும் எளிதாக இருக்கும்.
* உங்கள் சமையலறையில் பாத்திரங்களை அழகாகவும், எடுப்பதற்கு எளிதாகவும் அமைக்க வேண்டுமா… இதோ உங்களுக்கான ஒரு எளிய வழி. உடனே வெல்டரிடம் அல்லது அருகில் உள்ள இரும்பு கடையில், சுழலும் இரும்பு வலை ஒன்றை செய்யச் சொல்லுங்கள். அதை சமையலறை கூரையில் மாட்டி வையுங்கள். “கு’ வடிவில் இரும்பு கம்பிகளை , இரும்பு வலையில் தொங்க விடுங்கள். அதில் கரண்டிகள், பிடியுள்ள பாத்திரங்கள், தோசை ஊற்றும் நான்ஸ்டிக் பாத்திரம் போன்றவற்றை தொங்க விட்டால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment