Monday, 7 July 2014

Flower Medicine!!!

வளரும் குழந்தைக்கு வால்நட்
பிறந்த குழந்தைக்கு மட்டுமல்ல குழந்தை வளர வளர குழந்தையின் மனநிலை ஆரோக்கியத் திற்கும் மலர் மருந்துகள் பெரியஅளவில் உதவும்.
குழந்தை குப்புற விழுந்தாலும், தவழ்ந்தாலும், உட்கார்ந்தாலும் எழுந்து நின்று ஏதாவது பிடித்து நடக்க ஆரம்பித்தாலும் குழந்தையின் எந்த வளர்ச்சி கட்டத்திலும் தேவையில்லாத ஒரு பழக்கம் கூடவே வரும்.  குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்தையும் (milestone) பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சில குழந்தைகளிடம் விரல் சப்பும் பழக்கம் (Thumb sucking) இருக்கும்.  தொட்டிலில் படுத்து இருக்கும்போது, பசியின் போது என குழந்தை எந்த நேரமும் விரல்சப்பிக் கொண்டிருக்கும்.  சிறு குழந்தைதானே என்றும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் எனவும் தாய்மார்கள் பெரிது படுத்தாமல் இருந்து விடுவார் கள்.  ஆனால் இப்பழக்கம் குழந்தை வளர்ந்த பின்னும் நீடிக்கும்.  8 வயது, 10 வயது என ஆன பின்பும் கூட சில குழந்தைகளிடம் இப்பழக்கம் விடமுடியாமல் நீடித்திருக் கும்.   படிப்பு, விளையாட்டு மற்றும் இதர செயல்பாடுகள் திறமையாக இருந்தாலும் விரல் சப்பும் பழக்கம் மட்டும் விடமுடியாமல் தொடரும்.  இப்பழக் கத்தை மாற்ற மலர் மருந்துகள் உதவும்.  அது போல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கமும் சில குழந்தைகளிடம் காணப்படுகின்றது.  பெரிய பிள்ளைகளாக வளர்ந்த பின்னரும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் (Bedwetting) என்னும் பழக்கம் நீடிக்குமானால் அதனை மாற்ற மலர்மருந்துகள் உதவி செய்யும்.  தேவையில்லாத பழக்கங்களிலிருந்து விடுபட (Walnut) ‘வால்நட்’ என்ற மலர் மருந்து சிறப்பாகப் பயன்படும்.
சில குழந்தைகளுக்கு வெளியூர் செல்வதால், வேறு தண்ணீர் குடிப்பதால், தட்பவெப்ப மாற்றத் தினால் ஒவ்வாமை ஏற்பட்டு சளி பிடிக்கும்.  பின்பு காய்ச்சல் வரும். இந்த மாதிரியான குழந்தைகளின் தொந்தரவுகளை நீக்கவும் ‘வால்நட்’ பயன்படும்.  மாற்றங்களுக்கேற்ப உடலும் மனமும் ஒத்திசைந்து போகும் ஆரோக்கியத்தை ‘வால்நட்’ வழங்கும்.
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது.  ஆறு மாதத்திற்கு பின்பு தாய்ப்பாலுடன் இணை உணவு, திட உணவு தேவை.  திட உணவு புதியதாக குழந்தைக்கு கொடுக்கும் போது அஜீரணமோ, வயிற்றுப் போக்கோ வேறு தொந்தரவுகளோ இருப்பின் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ‘வால்நட்’ மருந்தும் கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
பொறுமையில்லாத குழந்தைக்கு :
இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு பசி தாங்காது.  பசிக்குது பசிக்குது என அலைபாயும் குந்தைகளிடம் கொஞ்சம் பொறு சாப்பாடு செய்து எடுத்து வருகிறேன் என சொன்னாலும் பசி தாங்காமல் கத்தி கூப்பாடு போடும் தன்மையுள்ள குழந் தைகள். இக்குழந்தைகளுக்கு உணவு வைத்ததும் அவசரம் அவசரமாக சாப்பிடும்.  நிதான மாக மென்று விழுங்கும் பழக் கம் என்பதே இருக்காது.  சாப்பிடும் விஷயத்தில் மட்டு மல்ல எல்லா விஷயத்திலும் பொறுமை இருக்காது.  எல்லா வற்றிலும் ஒரு அவசரதன்மை வெளிப்படும்.  ஒரு இடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும்.  சில குழந்தைகள் அதிவேகமும், அவசரமும், நிதானமின்மை காரணமாக ரோட்டை கடக் கும் போதோ, விளையாடும் போதோ, அடிபட வாய்ப்புள் ளது.  பேசும்போது கூட சில குழந்தைகள் வேக வேகமாக பேசும்.  அதிவேகம் ஆபத்தானது. ஆகை யால் இந்த குழந்தைகளின் அதிவேகத்திற்கு அணை போட்டு நிதானப்படுத்த ‘இம்பேஷன்ஸ்’ என்ற மலர் மருந்து உதவும்.
குழந்தையைக் கெடுக்கும் சுயநல, திருட்டுப்பழக்கம்!
சில குழந்தைகள் பக்கத்து குழந்தைகளிடம் அல்லது பக்கத்து வீடுகளுக்கு சென்றால் எதாவது ஒரு பொருளை எடுத்து வந்துவிடும். பெற்றோர்கள் பார்த்து சத்தம் போட்டு இனிமேல் இதுமாதிரி செய்யக்கூடாது. உரியவரிடம் அந்த பொருளை திரும்ப கொடுக்க சொன்னால் முதல் முறை திரும்ப கொடுத்துவிடும்.  பின்பு இம்மாதிரியான ஏதாவது ஒரு பொருளை எடுத்தாலும் பெற்றோர் களுக்கு தெரியாமல் மறைக்கும்.  எந்த ஒரு  பொருளையோ, அல்லது அடுத்தவர் பொருள் மீது ஆசைப்பட்டு அதை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் சுயநலம் மிக்க மனநிலையை மாற்ற சிக்கரி என்ற மலர்மருந்து உதவும்.  சில குழந்தைகள் தம்பி, தங்கைக்கோ அல்லது வேறு எந்த குழந்தைக்கும் தன்னுடைய எந்த விளையாட்டு பொருளையும் கொடுத்து சேர்ந்து விளையாடாது.  உடன் அந்த குழந்தையிடம் இருந்து பறித்துக் கொள்ளும்.  எல்லா பொருளையும் தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற சுயநலம் மேலோங்கி நிற்கும் மனநிலைக்கு ‘சிக்கரி’ மலர்மருந்து தேவைப்படும் சிறுவயதிலேயே இந்த மாதிரியான எதிர்மறையான குணங்களை மலர்மருந்துகள் மூலம் மாற்றமுடியும்.சூழ்நிலை பாதிப்பிலிருந்து குழந்தையை மீட்க ...
விதை முளைத்து செடியாக வளரும் பருவம் குழந்தைப் பருவம்.  ஒரு செடி நன்கு வளர இயற்கையான உரம், நீர் ஊற்றவேண்டும்.  அதனுடன் பாதுகாப்பும், பராமரிப்பும் தேவை.  செடிக்கு ஏதாவது  ஒரு பாதிப்பு அதாவது நோயினால் பாதிக்கப்பட்டாலோ, தண்ணீர் சரியாக ஊற்றாவிட்டாலோ வாடி பட்டு போகலாம்.  அது போல குழந்தைகளின் உடல், மன பிரச்னைகளுக்கு சரியான சிகிச்சை அவசியம். இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டியுள்ளது.  பொதுவாக நம் குழந்தைகளுக்கு உடல்ரீதியான பிரச்னையென்றால் உடன் கவனித்து சிகிச்சை எடுக்கிறோம்.  ஆனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த அளவிற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்துவது இல்லை.  குழந்தைகளின் மன ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு குறைவு என்று கூட சொல்ல லாம்.  குழந்தைகளின் மன பாதிப்புகளுக்கு மலர் மருந்துகள் பலனளிக்கும்.
குழந்தைகளின் மனதை எழுதப்படாத காகிதம் என்று சொல்லலாம்.  சூழ்நிலை காரண மாக அதில் தவறாக எழுதப்பட்டு இருந்தால் அதை அழித்து சரியாக எழுத மலர்மருத்துவத் தால் முடியும்.  குழந்தைகளின் எதிர்மறை குணங் களை, பழக்க வழக்கங்களை மலர்மருந்துகள் மூலம் சீர் செய்ய முடியும்.
குழந்தையை ஒழுங்குபடுத்த உதவுவது நேர்மறை அணுகுமுறையே!
பெற்றோர்களிடம், நண்பர்களிடம், ஆசிரியர் களிடம் உள்ள குழந்தைகளின் தொடர்பை தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவது அவசியம். 
குழந்தைகளின் நடத்தையை ஒழுங்குபடுத்து வது சம்பந்தமாக பெற்றோர்களுக்கு உளவியல் நிபுணர்கள் சொல்வது “அன்பாக ஒழுங்கு படுத்துங்க”.  அது வெற்றியை கொடுக்கும்.  கடுமை யாக நடந்துகொண்டால் அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். உதாரணமாக படிக்கும் ஆற்றல் குறைந்த குழந்தைகளிடம் “நீ ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை, எதுக்கும் லாயக்கில்லை” என மற்ற குழந்தைகளுக்கு முன் ஆசிரியர் சொன் னால் அது அந்த குழந்தையின் மனநிலையை பாதிக்கும்.  அதனால் படிக்கும் ஆற்றல் மேலும் குறையும்.
பொதுவாக குழந்தைகளிடம் அணுகும் முறையில் கனிவு தேவை.   குழந்தைகளின் திறனை மேம்படுத்த “Positive Approach” தேவை.  அப்படி கையாண்டால் குழந்தைகளின் திறனை மேம்படுத்த முடியும்.
குழந்தைகளின் மனது அன்பு, ஆதரவு, அரவணைப்பு இவற்றை குடும்பத்திலுள்ள வர்களிடம், குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்க ளிடமும் எதிர்பார்க்கிறது.  அன்பு, அரவணைப்பு, ஆதரவு எங்கு குறைகிறதோ அந்த இடங்களில் உள்ள குழந்தைகளின் மனதில் நிறைய பிரச்னைகள் உருவாகும்.
சில குழந்தைகளிடம் பிறப்பிலேயே இயற்கை யாக பயந்த சுபாவம், தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், வெறுப்பு போன்ற எதிர்மறையான மனநிலைகளில் ஏதாவது ஒன்று இருக்கலாம்.  அன்பான சூழலால் இந்த எதிர்மறை மனநிலை மாறும்.  நல்ல சூழ்நிலை அமையவில்லையெனில் பயம், சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு மேலும் அதிகரிக்கும். வீடு பள்ளிக்கூடம், வகுப்பறை, வெளி உலகம், முதலானவை அச்ச மூட்டும் இடங்களாக மாறும்.  குழந்தைகள் தைரியம் நிறைந்தவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, நேர்மையானவர்களாக, நல்ல பண்புகள் நிறைந்தவர்களாக வளர்க்க மலர் மருந்து கள் நூற்றுக்கு நூறு பயன்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
வேண்டாத குணங்களை விரட்ட ...
சில குழந்தைகளிடம் தன்னுடன் படிக்கும் குழந்தையை பற்றி வகுப்பு ஆசிரியரிடம் ஏதாவது சொல்லி அடிவாங்கி கொடுக்கும் சுபாவம் இருக்கும்.  வீட்டிலோ, வெளி இடங் களிலோ எல்லா இடத்திலும் யாரை யாவது பற்றி ஏதாவது குறை சொல் லுவது அதன் சுபாவம்.  ஒருத்தர் பற்றி கூட நல்லவிதமாக சொல்லாது.  மற்றவர்களிடம் குற்றம் கண்டு ஏதா வது குறை சொல்லும் குணத்தை மாற்ற (Willow) ‘வில்லோ’ என்ற மலர் மருந்து உதவும்.
பொறாமை, சந்தேகமும் மனிதனை அழித்து விடும் தன்மையுள்ளது.  சில குழந்தைகளிடம் சிறுவயதிலேயே வெறுப்பு, பொறாமை தென் பட்டால் உடன் அதை நீக்கி சரிசெய்ய வேண்டும்.  இல்லையெனில் வருங்காலத்தில் அந்த  குழந்தை சமூக விரோதியாகவோ, வெறுக்கத்தக்க மனிதனா கவோ மாறும். பொறாமை, வெறுப்பு, மறைய உதவும் மலர் மருந்து ‘ஹாலி’ (Holly).
எந்த நேரமும் விளையாட்டு விளையாட்டு என ஓய்வே இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கும். எல்லா நேரமும் துருதுருவென ஓடிக் கொண்டு, ஆடிக்கொண்டு இருக்கும் குழந்தை களுக்கு ‘வெர்வென்’ (Vervain) மலர்மருந்து உதவும்.  சில குழந்தைகள் வகுப்பறையில் பாடம் கவனிக் காமல் எங்கோ பார்த்தபடி உட்கார்ந்தி ருக்கும்.  தன்னை மறந்து எங்கோ வெறித்தபடி உட்கார்ந்தி ருக்கும் உடல் மட்டும் தான் வகுப்பறையில் இருக்கும்.  சிந்தனைகள் எல்லாம் வகுப்பறையை விட்டு வெளிஉலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக் கும். இந்த குழந்தைகளின்  இந்த நடவடிக்கையை மாற்ற ‘கிளமெடிஸ்’ (Clematis) என்ற மலர்மருந்து பயன்படும்.  குழந்தைகளின் மனநிலைக்கேற்றபடி மலர்மருந்துகள் தேர்ந்தெடுத்து சில மாதங்கள் கொடுக்கும்போது எதிர்மறையான மனநிலை யுடைய குழந்தைகளிடம் நேர்மறையான மன நிலைகள் ஏற்படும்.  அந்த குழந்தையின் ஆளுமைத் திறனும் மேம்படும்.
சிறப்புக் குழந்தைகளுக்கு மலர்மருந்துகள் :
மலர் மருந்துகள் Normal Children மட்டு மில்லாமல் Abnormal Children-களுக்குப் பயன்படும். அதாவது மனவளர்ச்சி குன்றிய நிலை உள்ள குழந்தைகளுக்கும் மனவேகம் அதிகரித்த நிலை உள்ள குழந்தைகளுக்கும் கூட மலர்மருந்து கள் பயன்படும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளாக (Dyslexia) மற்றும் மூளைவாதம் தாக்கப்பட்ட குழந்தைகளாக (Cereparal Palsy) கணிசமான சதவீதத்தில் உள்ளார்கள். இந்த மாதிரி குழந்தைகள் பிறப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.  அதில் ஒரு சில காரணங்கள் என்னவெனில் 1. உறவு முறை திருமணம் 2. தாய்க்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனநிலை பாதிப்பு 3. பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல். இது போன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளன.
இந்த மாதிரியான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அந்த குடும்பம் மட்டுமல்ல சமுதாயமே சுமையாக கருதக்கூடாது.  இவர்கள் சிறப்புடன் கவனிக்கப்பட வேண்டிய கடவுளின் குழந்தைகள்.
இந்த மாதிரி உள்ள குழந்தைகளை ‘மாற்று திறனாளிகள்’ என்று அரசு ஏற்றுக் கொள் வது பெரிய விஷயம் அல்ல.  சமுதாயமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த குழந்தைகளுக்கு மலர் மருந்துகளில் சில மருந்துகள் பயன் படுகிறது.  இவர் களின் புரிந்து கொள் ளும் ஆற்றலை, அறிவு திறனை மேம் படுத்த மலர் மருந்து கள் துணை புரி கின்றன.
கற்கும் திறன் மேம்பட ...
Normal childஒரு முறை அல்லது இரண்டு முறை சொன்னால் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்.  ஆனால் Abnormal Child ஒரு எழுத் தையோ, ஒரு வரியையோ அல்லது ஒரு செயலை யோ செய்ய பலதடவை சொல்லி கற்றுக் கொடுக்கவேண்டும்.  அப்படியும் சில குழந்தை களிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்கும் தன்மையும், தவறுகள் செய்யும் தன்மையும் இருக்கும்.  ‘செஸ்ட் நட் பட்’ (Chestnutbud) என்ற மலர்மருந்து கற்றலில் ஏற்படும் குறைபாட்டை நிவர்த்திக்கும்.  ஞாபகசக்திக்கு அற்புதமான மருந்து.  இந்த மருந்து சீக்கிரம் கற்பதற்கும் தவறுகள் குறைவதற்கும் உதவி செய்யும்.
மிகை இயக்கத்தை சீர்படுத்த ...
 Abnormal Children இன்னொரு வகை ADHD என சொல்லப்படும் (Attenton-deficit Hyperactive disorder  கவனக்குறைவு & மிகை செயல்பாடு உள்ள குழந்தைகள்.  இந்த குழந்தைகளிடம் காணப்படும் முக்கிய பிரச்னை வரம்பு மீறிய செயல்கள் செய்தல், கட்டுப்படுத்த இயலாமை, யாரும் என்ன சொன்னா லும் காதில் வாங்கி கொள்ளாமை, ஒரு வேலையை முடிக்கும்  முன்பே மற்றொரு வேலைக்கு தாவுதல்.  பிறருடன் இணைந்து விளையாடாமை, பொருத்தமற்ற நேரத் தில் பொருத்தமற்ற செயல் செய்தல்.  பிறருடன் இணைந்து செயல்பட முடியா மை.  எல்லா விஷயத் திலும் வேகம், வேகம், புயல்வேகம்.  எந்த ஒன்றிலும் முழு கவனமின்மை.  மனஒருமை என்பது இருக்கவே இருக்காது.  யோசிக்காமல் உடனடி யாக செய்தல்.  தன் நேரம் வரும் வரை காத்திருக்க பொறுமை இல்லாதது. தெருவின் குறுக்கே அவசரக் கோலமாக ஓடுதல்.  யாரும் எதிர்பாராமல் அடித்தல். பின்னாடி இருந்தோ அல்லது எதிர் பாராத நேரத்தில் கீழே தள்ளிவிடுதல்.  பொருட் களை சேதப்படுத்துதல்.  இந்த மாதிரியான நடத்தை கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு மலர்மருந்துகள் கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைகளிடம் காணப்படும் எதிர் மறையான மனநிலைகள் மாறும்.  இந்த குழந்தைகளிடம் காணப்படும்  அதிவேகத்தை கட்டுப்படுத்த ‘இம்பேஷன்ஸ்’ என்ற மலர்மருந்து பயன்படும்.  அடித்தல், பொருட்களை சேதப்படுத் துதல் போன்றவற்றிற்கு ‘ஹாலி’ மருந்து பயன்படும்.
குழந்தைகளின் அதிவேகத்தை கட்டுப்படுத்தி அவர்களின் மனதை ஒருமுகப்படுத்த மலர்மருந்து கள் உதவி செய்யும் Normal குழந்தைகளின் எதிர்மறையான மனநிலை மாற்றங்களை சரிசெய்ய மலர் மருந்துகள் எந்த அளவு பயன்படுகிறதோ அது மாதிரியானAbnormal Children அசாதாரண குணங்களையும் ஒரு குறிப்பிட்டளவு ஒழுங்கு படுத்த மலர்மருந்துகள் உதவுகின்றன.

No comments:

Post a Comment