Tuesday, 29 July 2014

இயற்கை வைத்தியம்!!!

தமிழர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் ஒரு தீர்க்க தரிசனம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பல இயற்கை வைத்தியம், அன்றைய கால மனிதர்களுக்கு பெரிதும் தேவைப்பட்டு இருக்குமா ? என்பது சந்தேகமே. ஏனென்றால் நமது முன்னோர்கள் வாழ்க்கை முறை நம்மை போல் அல்லாமல் உடல் நலனிற்கு ஏற்றவாறு இருந்தது, ஆனால் இப்பொழுது நாம் அதை தவறவிட்டுவிட்டோம்,விவசாயம் பொய் கணினி முன்னே வேலையும்,வீர விளையாட்டுக்கள் போய், வீடியோ கேம் இல் மட்டும் விளையாட்டு என்று ஆகிவிட்டதால். சிறுவயதிலேயே பலருக்கு இடுப்புவலி, முதுகு வலி என்று வலி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது, இப்படி இப்பொழுது உருவாகும் இந்த வலிகளுக்கும், நோய்களுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவு தீர்க்கதரிசனம் என்றதில் தவறில்லையே ?
அறிகுறி :
மூட்டுகளில் சோர்வை உணருதல்.
அமர்ந்திருக்கும் பொழுது முதுகில் ஒரு அசௌகாரியத்தை உணருதல்.
தேவையான பொருள் :
வெற்றிலை .
தேங்காய் எண்ணை
செய்முறை :
வெற்றிலை இலையை நன்கு கசக்கி அதன் சாற்றை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து வலி ஏற்ப்படும் மூட்டு, மற்றும் இடுப்பு, முதுகு பகுதிகளில் தடவி வர, அனைத்துவகையான இடுப்பு,மூட்டு, முதுகு வழிகள் தீரும்.

No comments:

Post a Comment