ரவா பொங்கல்
.
- மெல்லிய ரவை - ஒரு கப்
- பாசிப்பருப்பு - 1/3 கப்
- பால் - ஒரு கப்
- தண்ணீர் - 2 கப்
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- மிகப் பொடியாக நறுக்கின இஞ்சி - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- முந்திரி - 7
- நெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் பாசிபருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு பொரிய விடவும்.
மிளகு, சீரகம் பொரிந்ததும் முந்திரி, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதனுடன் ரவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
ரவை லேசாக நிறம் மாறியதும் உப்பு, வேக வைத்த பருப்பு, கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
வெந்ததும் இறக்கி வைத்து விடவும். சுவையான ரவை பொங்கல் தயார். இதை சாம்பார், சட்னியுடன் பரிமாறலாம்
.
.
No comments:
Post a Comment