சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான
பொருட்கள் :
· துவரம் பருப்பு – 1 கப்
· வெங்காயம் – 1
· தக்காளி – 1,
பச்சை தக்காளி – 2 பெரியது
· பச்சைமிளகாய் – 4
கடைசியில்
தாளிக்க :
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· கடுகு, வெந்தயம் – தாளிக்க
· கருவேப்பில்லை – 4 – 5 இலை
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
·
வெங்காயம் + தக்காளி + பச்சை தக்காளி + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பினை கழுவி கொள்ளவும்.
· குக்கரில் துவரம்பருப்பு + காய்கள் + மஞ்சள் தூள் + உப்பு + தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவைக்கவும். (குறிப்பு : விரும்பினால் 2 - 3 பூண்டு பலினை
தோலுடன் சேர்த்து வேகவைத்தால் நன்றாக இருக்கும்.)
· குக்கரினை திறந்து
வேகவைத்த பொருட்களை சிறிது மசித்து கொள்ளவும்.
· தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை தாளித்து இதில் சேர்க்கவும்.
· சுவையான எளிதில் செய்யகூடிய தக்காளி டிபன் சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, சாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment