சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
. புளி - சிறிய கொட்டைபாக்கு அளவு (அல்லது ) புளி பேஸ்ட் - 2 சிட்டிகை அளவு
. எண்ணெய் - 2 மேஜை கரண்டி அளவு
. கருவேப்பிலை - 5 - 6 இலை (கடைசியில் தூவ)
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
. மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
. சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
. கருணைகிழங்கின் தோலினை நீக்கி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
. வெட்டிய துண்டுகளை கழுவி கொள்ளவும். அது முழ்கும் அளவு தண்ணீரில் போட்டு Microwaveயில் 3 - 4 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.
(கவனிக்க : Microwaveயிற்கு பதிலாக பாத்திரத்தில் போட்டு அடுப்பிலும் வேகவைத்து கொள்ளலாம். அதிகம் வேகவைக்க வேண்டாம். )
. பிறகு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் நீக்கிவிடவும். அத்துடன் புளி பேஸ்ட் அல்லது கெட்டியாக கரைத்த புளி கரைசல் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
. இதனை 3 - 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தோசை கல்லினை (அ) Non-stick Panயினை சூடுபடுத்தி கொள்ளவும்.
. அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த துண்டுகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைத்து வேகவிடவும்.
. ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.
. கடைசியில் கருவேப்பிலை தூவி விடவும். சுவையான கருணைகிழங்கு வறுவல் ரெடி. இதனை சாம்பார், குழம்பு, கலந்த சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment