Sunday 1 May 2016

ஏன் தலையில நீர் கோத்துக்குது..

.?-பாட்டி வைத்தியம் ! தலையில நீர் கோத்துக்குறதுக்கு தலை ஈரம் காயாம இருக்குறது மட்டும்தான்னு ரொம்ப பேரு தப்பா நெனச்சிக்கிட்டு இருக்காங்க.. நிச்சயமா அது இல்ல.. குடல் புண்தான் முக்கியக் காரணம். நேரத்துக்கு சாப்பிடாம இருந்துட்டு, நேரம் தவறி சாப்பிடுறது.. இதுனால குடல்ல புண் உண்டாயி .. அது ரணமாயி உஷ்ணத்த உண்டாக்கும்... இந்த உஷ்ணத்தால நீரு சிரசுக்கு ஏறிக்கும்.. அதுக்கப்புறம் நீ எப்போ தலை குளிச்சாலும் உள்ளே இருக்கும் நீரோட சேந்துக்கும்..” “இதுக்காகத்தான் மூலத்தில் சூடிருந்தால் மூக்குதனில் நீர் வடியும் -னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..” “அதுக்கு மொதல்ல சாப்பாட்டு முறைய ஒழுங்கா வச்சிக்கணும்.. நேரத்துக்கு சரியா சாப்பிட்டாலே இந்த மாதிரி பிரச்சன வராது.. மலச்சிக்கல் இல்லாம பாத்துக்கணும்..” “நீங்க சொல்றது சரிதான் பாட்டி.. பப்ளிக் எக்ஸாம் ங்கறதால சீக்கிரம் சீக்கிரமா பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கு.. அதுனால காலயில சாப்பிட முடியல.... மத்தியானமும் டெஸ்டு, பிராக்டிகல்னு லேட்டாயி சாப்பிடறேன்.. இப்பதான் புரியுது பாட்டி...” “இதுக்கு எதாச்சும் மருந்துசொல்லுங்க பாட்டி..” “ம்... ம்... இப்ப புரியுதா.. எதுக்காக சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு தலமூச்சா அடிச்சுக்கிறாங்கன்னு.. சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்கடியம்மா...” “துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது...” “வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்..”

No comments:

Post a Comment