Sunday, 8 May 2016

Kitchen Tips

கோதுமை ரவையை ஒரு மணி நேரம் மோரில் ஊற வைத்து மிளகாய், பெருங்காயம் போட்டு அரைத்து தோசை வார்த்து, மிளகாய் சட்னியுடன் பறிமாறினால் சுவை பிரமாதம். • வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டால் ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் போதும். ரஸ்க் இல்லையென்றால் பிரட் தூளையும் உபயோகிக்கலாம். • அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்புடன் ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் ஊற வைத்து அரைத்து அடை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும். • இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும். • உளுந்து வடை செய்யும் போது உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து மாவுடன் கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் இருக்கும். • இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அதனுடன் சிறிது அவல் சேர்த்து ஊற வையுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment