Sunday 8 May 2016

Tips!!!

வீட்டுக்குறிப்புக்கள் 1. எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்துக் கொண்டால் ருசி கூடும். 2. பருப்புபொடி அரைக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாகவும் இருக்கும்.ஜீர்னத்திற்கும் நல்லது. 3. சர்க்கரை டப்பாவை எறும்புகளிடம் இருந்து காப்பாற்றுவதற்க்கு நாலு கிராம்பை டப்பாவில் சர்க்கரையின் மீது போட்டு மூடி வைத்தால் எரும்புகள் ஓடி விடும். 4. நீங்காத மஞ்சல் கறையைப் போக்க,எலுமிச்சையால் அவ்விடத்தைத் தெய்த்த பின் சோப் போட்டுத் துவைத்து வெயிலில் காய விடவும். 5. காப்பிப் பொடியை, சம்படத்தில் (அ) பாட்டிலில் கொட்டி வைக்காமல்,'பேக்கட்டுடன்' அப்படியே சம்படத்தில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் காப்பிப் பொடியின் வாசனை சிறிது கூடக் குறையது. 6. முட்டையை வேகவைத்தபின் அந்த நீரைக் கீழே கொட்டமல் நன்கு ஆற்ய பின் செடிகளுக்கு ஊற்றினால், செடியின் வெர்களுக்கு ஊட்டம் கிடைக்கும். 7. பலகாரம் செய்ய எண்ணெய் வைக்கும்போது சிறிது இஞ்சி, வாழைப்பட்டையை அம்மியில் நசுக்கி போட்டுப் பொரித்து எடுத்த பிறகே உபயோகிக்க வேண்டும்.இதனால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. எண்ணெயும் பொங்கி வழியாது. எண்ணெய் புகையினால் வாந்தி, தலைச்சுற்றல் வரவும் செய்யாது. 8. தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி செர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான, மெல்லியதான தோசை வரும். 9. எலுமிச்சம் பழத்தைப் பிழிந்த பிறகு அதன் தோலினை தண்ணீர் நிரம்பி இருக்கும் அண்டவில் போடுங்கள். கை, கால்கள், முகம் கழுவும் போது வாசனையக இருக்கும். 10. கட்லெட் செய்ய ரஸ்க் தூள் தேவை (ரஸ்க் தூல் காலியாகிவிட்டதா) பயப்பட தெவையில்லை. மக்காசோளமாவில் புரட்டி கட்லெட்டை பொரித்து எடுங்கள். பொன்னிறமாகவும் கொஞ்சம் கூட கல்லில் ஒட்டமலும் பிரமதமக இருக்கும். 11. உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவைக் கலந்து, வடை தட்டினால், மொறுமொறுவென்று சூப்பராக வரும். எண்ணெய் குடிக்காது. 12. சமையலுக்கு காய்கறிகள் நறுக்கும்பொது கைவிரல் வெட்டுப்பட்டால், அந்த காயங்களில் இரத்தம் வழியும் இடங்களில் தேனைட் தடவினால், உடனடியாக இரத்தம் கசிவது நின்றுவிடும். காயமும் சீக்கிரம் ஆறும். ஏனெனில் தேன் ஒரு அற்புதமான கிருமிநாசினியாகும். 13. குக்கரில் பச்சைப் பட்டணியை (ஊறவைத பட்டாணி) வேக வைக்கும் பொது, கொஞ்சம் அதிகமாக வெந்து விட்டால் பட்டாணி மேல், சில்லென்ற ஐஸ் வாட்டரை ஊற்றி 5 நிமிடம் கழித்து எடுத்தால் பக்குவமாக மாறியிருக்கும் பின்பு பட்டாணி சுண்டல் செய்யலாம். 14. vaalai தண்டை நறுக்கிப் பொட, மோர் இல்லையெனில் புளிட்தண்ணீரிலும் நறுக்கிப் பொடலாம். கறுக்காது. சமயத்திற்குக் கைகொடுக்கும் புளி. 15. இட்லிக்குட் தேஙாய்ச் ச்ட்னி அரைக்கும் பொது இரண்டொ,மூன்றோ புதினா இலைகழைச் சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையகவும், மணமாகவும் இருக்கும். 16. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்துப் பாருங்கல். சும்மா பாலீஷ் போட்டது பொல வெள்ளி சாமான்கள் டாலடிக்கும். 17. தேங்காய் பர்பி செய்யும்பொழுது பழுத்த மாம்பழம் ஒன்றை கலந்து விட்டால் கலர்புல் பர்பியாக இருக்கும். 18. வத்தக்குழம்பு மற்றும் காரக்குழ்ம்பில் காரம் அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம், சிறிது தக்காளியை அரைத்து ஊற்றினால் காரம் குறைவதுடன் வாசனையுடன் இருக்கும். 19. வாய்வினால் வரும் நெஞ்சுவலி மற்றும் வயிற்றுவலிக்கு தோசைக்கல்லை சூடாக்கி அதன் மேல் ஒரு துணியால் ஒத்தி சூடுபண்ணி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி உடனே பறந்து விடும். 20. தயிரை உடம்பில் தேய்த்து குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 21. ரவா தோசை செய்யும் பொழுது இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறு மொறு வென இருக்கும். 22. கேசரி செய்யும் போது நீரின் அளவைக் குறைத்து அதே அளவு பால் கலந்து செய்து பாருங்கள். சுவையும் ருசியும் அதிக படுத்தும். 23.துணிகளில் ஹேர்டை பட்டுவிட்டால் உடனே சிறிது நெயில் பளீஷ் ரிழுவரால் டை படிந்த பகுதியை துடைத்தால் போதும் டை கறை காணாமல் போய்விடும். 24. வெண்டைக்காயை பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் காய்வைத்த பிற்கு பொரியல் செய்தால் வழவழப்பு நீங்கிவிடும். 25. ஷாம்புவிற்க்கு பதில் செம்பருத்தி இலைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் பள்பளப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment