சித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1
திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தெய்வ ஆகர்ஷண சக்திக்காக அருளிச் செய்த ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை.
அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்..
1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 2 கிலோ
2. படிகார பஸ்பம் - 10 கிராம்
3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-
4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-
5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-
7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-
8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-
9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-
10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-
11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-
12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-
இவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.
இது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.
இதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத
வேண்டும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எல்லாம் சரி ... கோ சாலைகளில் பசுஞ்சாண விபூதி வாங்கி விடலாம் . அனால் இந்த பஸ்பம் எல்லாம் எங்கே தேடுவது என்ன விலை இருக்குமோ என நினைக்கலாம் !
அனால் இந்த பஸ்பம் எல்லாம் ஒரே இடத்தில மிக சுலபமாக கிடைக்கிறது . விலையும் குறைவு தான். எல்லா பஸ்பங்களும் சேர்த்து 400 ரூபாய் தான் வருகிறது.
இவை சென்னை அரும்பாக்கம் அரசாங்க சித்தா ஆஸ்பத்திரி அருகில் அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள சித்த மருந்து கடையில் கிடைக்கிறது.
சித்த பார்முலா படி இந்த பஸ்பங்களை தயாரிப்பவர்கள்:
Laurel Siddha Pharma , # 524, Sivaraman street,
Madippakkam, Chennai - 600 091
Laurel Herbal products , # 3, Bajanai koil street,
Velacheri, Chennai - 600 042
Phone 044 - 22450046
அல்லது உங்கள் ஊரில் உள்ள சித்த மருந்து விற்பனையாளர்களிடம் கேளுங்கள்
..
நன்றி மிஸ்டிக் மிஷன்
==============================
======================
சித்தர்கள் திருநீறு தயாரிக்கும் முறை ..2
திருநீறு என்பது ஆன்மிக சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது மிகச்சிறந்த மருந்து. நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.
மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறை
1. பசுமாட்டுச் சாணம்
2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)
3. வில்வப்பழ ஓடுகள்
மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.
நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.
இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகள
ில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.
எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.
நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.
இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.
பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “தந்திரமாவது நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.
மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...
புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு
என்று குரு அகத்தியர் கூறுகிறார்.
இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி சித்தர்தாசன் சுந்தர்ஜி
http://sadhanandaswamigal.blogspot.in/2016/03/
blog-post_37.html
Saturday, 7 May 2016
சித்தர்கள் ஜீவ பஸ்ப விபூதி தயாரிக்கும் முறை ..1
Sunday, 1 May 2016
ஏன் தலையில நீர் கோத்துக்குது..
.?-பாட்டி வைத்தியம் ! தலையில நீர் கோத்துக்குறதுக்கு தலை ஈரம் காயாம இருக்குறது மட்டும்தான்னு ரொம்ப பேரு தப்பா நெனச்சிக்கிட்டு இருக்காங்க.. நிச்சயமா அது இல்ல.. குடல் புண்தான் முக்கியக் காரணம். நேரத்துக்கு சாப்பிடாம இருந்துட்டு, நேரம் தவறி சாப்பிடுறது.. இதுனால குடல்ல புண் உண்டாயி .. அது ரணமாயி உஷ்ணத்த உண்டாக்கும்... இந்த உஷ்ணத்தால நீரு சிரசுக்கு ஏறிக்கும்.. அதுக்கப்புறம் நீ எப்போ தலை குளிச்சாலும் உள்ளே இருக்கும் நீரோட சேந்துக்கும்..” “இதுக்காகத்தான் மூலத்தில் சூடிருந்தால் மூக்குதனில் நீர் வடியும் -னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..” “அதுக்கு மொதல்ல சாப்பாட்டு முறைய ஒழுங்கா வச்சிக்கணும்.. நேரத்துக்கு சரியா சாப்பிட்டாலே இந்த மாதிரி பிரச்சன வராது.. மலச்சிக்கல் இல்லாம பாத்துக்கணும்..” “நீங்க சொல்றது சரிதான் பாட்டி.. பப்ளிக் எக்ஸாம் ங்கறதால சீக்கிரம் சீக்கிரமா பள்ளிக்கூடம் போக வேண்டியிருக்கு.. அதுனால காலயில சாப்பிட முடியல.... மத்தியானமும் டெஸ்டு, பிராக்டிகல்னு லேட்டாயி சாப்பிடறேன்.. இப்பதான் புரியுது பாட்டி...” “இதுக்கு எதாச்சும் மருந்துசொல்லுங்க பாட்டி..” “ம்... ம்... இப்ப புரியுதா.. எதுக்காக சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு தலமூச்சா அடிச்சுக்கிறாங்கன்னு.. சரி சரி.. மருந்து சொல்றேன்.. கவனமா கேட்டுக்கடியம்மா...” “துளசி, கறிவேப்பிலை, நன்னாரி வேர், கொத்தமல்லி கீரை, சீரகம் இது எல்லாத்தையும் 1 கைப்பிடி அளவு எடுத்து நல்லா காயவச்சி லேசா எண்ணெய் போடாம வறுத்து பொடியாக்கி வச்சிக்கிட்டு தெனமும் காலைலயும், சாயந்திரமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா இந்த மாதிரி பிரச்சன வராது...” “வாரம் ரெண்டு தடவ எண்ணெ தேச்சி குளிக்கணும்..”
Wednesday, 9 March 2016
Panacea for All Diseases!!!
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).
இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
Thursday, 3 March 2016
Medical Tips!!!
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.
சிரங்கு
100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.
இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.
சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்
பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது, வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பாலூட்டும் தாய்மார்கள் வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பகத்தின் மீது வைத்துக் கட்டினால் பால் நன்றாகச் சுரக்கும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
Tuesday, 26 January 2016
Granny Medicine!!!
1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
2. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
3. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
4. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
10. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்
<
Friday, 8 January 2016
புழு வெட்டா!!!
குமட்டிக்காய் விஷத்தன்மை கொண்டது.குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம்.மருந்து போட்டவுடன் நீங்களும் கையை நன்றாக கழுவி விடவும்.

சுகம் பெற எளிய வழி !!!
நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:
.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.
உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம், உடல் செல்களுக்கு போதிய ஆற்றல் இல்லாமையே. செல்களுக்கு ஆற்றல் தருவது உடல் உணவிலிருந்தும், நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், விண்ணிலிருந்தும் உடல் பிரித்தெடுக்கும் எரிசத்தியே. இந்த எரிசத்தி நமது உடலினால் மிக நுட்பமாகlத் தயாரிக்கப்பட்டு, பலத்த தரச் சோதனைக்குப் பின் தரமானதாக அறிவது பயன்படுத்தப்படுகிறது – எஞ்சுவது சேமித்து வைக்கப்படுகிறது. இது தேவையான போது உடலினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது
இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.
2. அதிமதுரம் - 2 பங்கு (40 கிராம்)
3. அமுக்கரா - 1 பங்கு
4. மிளகு - 1 பங்கு
5. கடுக்காய் - 1 பங்கு
6. தான்றிக்காய் - 1 பங்கு
7. விளாமிச்சம் வேர் - 1 பங்கு
8. நன்னாரி - கால் பங்கு (5 கிராம்)
இவற்றை தனித்தனியே கைபார்த்துப் பொடிசெய்து பின் சேர்த்து வைத்துக் கொள்க.
நண்பர்களே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேளுங்கள் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் சுகம் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவு செய்தால் – பிறரிடம் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் நலம் பெறுவர்.
செய்முறை மிக எளிதே. தானே செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்னிடம் கேட்டால் செய்து அனுப்பி வைக்கிறேன்.
தொடர்பு முகவரி.
ந. தமிழவேள், மரபுவழி நலவாழ்வு மையம், எண்;31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.
கைபேசி-93458 12080, 94447 76208.

Thursday, 10 September 2015
சளியை விரட்ட ஐந்து மருந்து பொடி!!!
கண்ணொளி(Better Eye-sight)
இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும், பல
பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும்
நீட்டிக்கப்படும்.கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது. நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன. கண்களில்
போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம்,தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள். இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன. ஏனெனில் அவை அளப்பரிய காந்த சக்தியுடன் செயல்படுகின்றன.
இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பார்ப்போம்.
பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இது சித்தர்கள் கண்ட மருந்து. சமீபத்தில் இருந்த சித்தர்
இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள்
நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.
பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப்
பெயரில் அழைக்கப்படுகிறது. கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.
1)வெள்ளை மிளகு (சுத்தி செய்தது)---150கிராம்
2)கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது)-125கிராம்
3)வேப்பம் பருப்பு உலர்ந்தது---------100கிராம்
4)நெல்லி வற்றல்--------------------75கிராம்
5)கஸ்தூரி மஞ்சள்-------------------50கிராம்
மேற்கண்ட ஐந்து சரக்குகளையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் சிறிதும் நோய்களுக்கு இடமில்லாமல் வாழலாம்.
Friday, 7 November 2014
கால் ஆணிக்கு மருந்து!!!
கால் ஆணிக்கு மருந்து என்ன என்று ஒரு சகோதரர் கேட்டிருந்தார். இதோ ஒருநாட்டு வைத்தியம். முயற்சித்துப் பார்க்கலாமே. நாட்டு
வைத்தியம்! பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக...
பித்தவெடிப்பு
சரியாக...
பித்தவெடிப்பு வந்தா... கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி
பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம்
எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரைடம்ளரா
குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு
வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை3, 4
தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு
பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையைபொடி செஞ்சு, ஒரு
சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு
சரியாகும்.
நகச்சுத்து விலக...
நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி
இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம் கிடைக்கும்.
வேப்பிலை கொஞ்சம்
எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு நகச்சுத்து வந்தஇடத்துல
பூசினா... குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா உரியபலன்
கிடைக்கும்.
ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி!
காலத்துக்கு ஏத்த
மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை உண்டு,இல்லைனு
ஆக்கிடும்.
இந்த... கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி
எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள
இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற
அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம்
பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காகஇந்த முரட்டு
வைத்தியம்?
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க.
அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி
வந்தா... அந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு
சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம்
கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும்,
பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு
கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து,
ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும்.
தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்... துணியைக் காணோம்னுபாய்ஞ்சி
ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு
மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவுஎடுத்து
அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணுநாள்ல குணம்
கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும்.
அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும். கால் ஆணி நீங்க ...இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு
மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்
====
கால் ஆணி
கால் ஆணி
தாங்கள் கூறிய மூலிகை மருந்தை எனது வலது காலில் கடைசி இரு விரல்களுக்குமிடையில் மூன்று மாதங்களாக இருந்து வந்த"கால் ஆணி" க்கு காலையில் மட்டும் போட்டு வந்தேன். அதிசயம். ஆனால் ஐந்து நாட்கள் போட்டவுடனேயே, வலியும் குறைந்து,தற்போது ,நன்கு நடக்கவும் முடிகின்றது. இதற்கு முன்பாக பல மருந்துகள் உபயோகித்தும் பலன் கிடைக்கவில்லை. தற்போது
நன்கு குணமடைந்து விட்டேன்.
சென்னை.
இதற்கான மருந்து இமெயிலில் தெரியப்படுத்தப்படும். மருந்து தெரியப்படுத்தும் முன் பல முறை நன்றி சொல்லும் நபர்கள் குணமடைந்த பின் ஒரு இமெயில் கூட அனுப்பாதது தான் நம் தளத்தில் இருந்து பல அரிய நோய்களுக்கு மருந்து தெரிவிக்க இயலாமல் போகிறது. மருத்துவ உலகமே மருந்து தேடிக்கொண்டிருக்கும் பல நோய்களுக்கு ஏற்கனவே சித்தர்கள் மருந்துகண்டுபிடித்து வைத்திருக்கின்றனர், நம் தளத்தின் மூலம் சிலருக்கு மருந்து தெரிவிக்கப்பட்டு முழுமையான குணம் அடைந்துள்ளனர் விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும்.
Sunday, 2 November 2014
நெஞ்சுவலி முதுகுவலி நிவாரணம்!!!
குழந்தைக்கு மூச்சிறைப்பு மற்றும் சளி தொல்லை ஏற்படும் போது மேலே சொன்ன எண்ணெயை மார்பிலும் முதுகிலும் போட்டு நன்றாக அழுத்தாமல் அனல் பறக்க தேய்த்துவிட வேண்டும் இது உடனடியாக நல்ல பலனை தரும் மேலும் இந்த எண்ணெய் ஆஸ்துமா நெஞ்சுவலி முதுகுவலி போன்றவைகளுக்கு நல்ல நிவாரணத்தை தரக்கூடியது
சித்தர்கள் குறிப்பிட்ட இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பாருங்கள்
நரம்பு தளர்ச்சி!!!
Friday, 26 September 2014
மிளகு ரகசியம்!!!
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுடனுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனெ
யுண்டிடத் தொனிதரும் மோதுபிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும் தொன்றையும்
குடி நீர் ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட்டோடுமே "
இந்த மிளகை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு நெய்யுடன் ஒரு சிட்டிகை அதாவது உங்களின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இவற்றால் எடுத்தால் சிட்டிகை எனப்படும் இது சித்த மருத்துவ அளவு வகைகளில் ஒன்றாகும்.இப்படி காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் கரகரப்பு, சளி தொல்லைகள் மறைந்து குரலில் இனிமை உண்டாகும்.
இதை பனக்கற்கண்டு அல்லது வெல்லம் இவைகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்களான தலைவலி,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,தோல் நோய்கள் இவைகள் சரியாகும்.பொதுவாக மிளகைக் குடி நீராக காய்ச்சிப் பருகி வந்தால் ரத்தம் சுத்தியாகும்,த்ரிதோசங்கள் நீங்கும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும், ஆரோக்கியமான வாழ்க்கை உண்டாகும்.
