சுகம் பெற....
எனது மருத்துவ அனுபவத்தில், நான் கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக, சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி பலரும் குணம் பெறுவதை கண்டிருக்கிறேன்.அவற்றில் சில எளிய முறைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:
நஞ்சு நீக்கி அல்லது அமுதம் பெருக்கி:
இது பெயருக்கேற்றார் போல் உடலில் தேங்கியுள்ள அனைத்து நஞ்சுக்களையும் மென்மையாக வெளியேற்றக் கூடியது.
.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.
.இதில் கலந்துள்ள மூலிகைகள் நாம் சாப்பிடும் உணவில் உள்ள எஞ்சிய நஞ்சுகளின் (வணிகர்கள் நிலத்தில் கொட்டும் நஞ்சினால் உணவுப்பொருள்களில் தேங்கும்) பாதிப்புகளை நீக்கி வெளியேற்றுகிறது.
அதேபோல, உமிழ் நீரை அறுசுவைகளையும் சீரணிக்கத் தக்கதாக தேவையான அளவு சுரக்கச் செய்கிறது. உமிழ் நீரையே அமுதம் என்கின்றனர் சான்றோர். உமிழ் நீரே சீரணத்துக்கு அடிப்படை.
உடலில் வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம், உடல் செல்களுக்கு போதிய ஆற்றல் இல்லாமையே. செல்களுக்கு ஆற்றல் தருவது உடல் உணவிலிருந்தும், நீரிலிருந்தும், காற்றிலிருந்தும், விண்ணிலிருந்தும் உடல் பிரித்தெடுக்கும் எரிசத்தியே. இந்த எரிசத்தி நமது உடலினால் மிக நுட்பமாகlத் தயாரிக்கப்பட்டு, பலத்த தரச் சோதனைக்குப் பின் தரமானதாக அறிவது பயன்படுத்தப்படுகிறது – எஞ்சுவது சேமித்து வைக்கப்படுகிறது. இது தேவையான போது உடலினால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது

பொருந்தாத உணவினாலோ, சுவைத்து உண்ணாததாலோ, உணர்வுகளின் பாதிப்பினாலோ, அல்லது உடல் சீரண உறுப்புகளின் பலவீனத்தாலோ தரமற்றதாக முடியும் எரிசத்தி- உடல் செல்களுக்கு ஏற்றதல்ல என்பதால்; உடல் அதைப் புறக்கணித்துக் கழிவுகளாக உடலை விட்டு வெளியேற்றுகிறது.
இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.
இந்த வகையில் உடலின் சீரணத்தை முறைப்படுத்தி, கழிவுகளையும் வெளியேற்றி நஞ்சுநீக்கி என்ற அமுதம் பயன் படுகின்றது.
இந்த மருந்தில் உள்ள மூலிகைகள் மற்றும் செய்முறை;
1. அவுரி - 1 பங்கு (உதாரணம் 20 கிராம்)
2. அதிமதுரம் - 2 பங்கு (40 கிராம்)
3. அமுக்கரா - 1 பங்கு
4. மிளகு - 1 பங்கு
5. கடுக்காய் - 1 பங்கு
6. தான்றிக்காய் - 1 பங்கு
7. விளாமிச்சம் வேர் - 1 பங்கு
8. நன்னாரி - கால் பங்கு (5 கிராம்)
இவற்றை தனித்தனியே கைபார்த்துப் பொடிசெய்து பின் சேர்த்து வைத்துக் கொள்க.

- இந்த மருந்துக்கான அடிப்படை எனது ஆசான்களில் ஒருவரான சாமீ. அழகப்பனால் எனக்கு கிடைத்தது. இது அவரது தாத்தாவின் முறை இதை அவர் பாசாணங்களின் முறிவுக்கும், கடிநஞ்சு முறிவுக்கும் பயன்படுத்தி வந்தார்.
- இதில் சிறு மாறுதல்கள் செய்து நான், அனைத்து நோய்களுக்கும் முதல் மருந்தாகப் பயன்படுத்துகிறேன். இதில் கிடைத்த நன்மைகளின் சிறப்புக் கருதி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
- இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தி சில வகைப் புற்றுநோய்கள், மூலம், கடும் தோல் நோய்கள், பலவகையான சுரங்கள் போன்றவற்றை முழுமையாகக் குணமாக்கிய அனுபவம் பல உண்டு.
- பொதுவாக என்னிடம் சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இதன் சிறப்பு தெரியும்.
- முன்பு உணவுக்குப் பின் இதை பயன்படுத்தினோம். தற்போது பெற்ற அனுபவத்தால் இதை தொடர்ந்து சிறிதளவு உணவுக்கு முன் பயன்படுத்துவதால் மிகச் சிறப்பான பலனைப் பெற முடிகிறது.
- நோயுள்ளவர்கள் பயன்படுத்தினால் அந் நோய்கள் சுகம் தந்து மறையும். நலமானவர்கள் பயன்படுத்தினால் எந்த நோயும் அணுகாது.
பயன்படுத்தும் முறை
மூன்று வேளையும் உணவுக்கு முன் ஒரு சிட்டிகை அளவு. (இரண்டு விரலால் எடுக்கும் அளவு) நாக்குக்கு அடியில் இட்டு சுவைக்கவும். நன்கு உமிழ் நீர் சுரக்கும். இதில் மருந்து கரைந்து முழுவதும் மறைந்தபின், உணவை வாயைமூடி சுவைத்துச் சாப்பிட்டால் போதும். இத்துடன் அடிப்படை நோயணுகா விதிகளையும் கடைப்பிடித்தால் எல்லா சுகமும் உங்களுக்கே.
நண்பர்களே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேளுங்கள் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நீங்கள் சுகம் பெற்ற அனுபவங்களை இங்கு பதிவு செய்தால் – பிறரிடம் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் நலம் பெறுவர்.
செய்முறை மிக எளிதே. தானே செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்னிடம் கேட்டால் செய்து அனுப்பி வைக்கிறேன்.
தொடர்பு முகவரி.
ந. தமிழவேள், மரபுவழி நலவாழ்வு மையம், எண்;31. அண்ணா தெரு, காந்தி நகர், ஆவடி, சென்னை-600054.
கைபேசி-93458 12080, 94447 76208.

No comments:
Post a Comment