இணைய இணைப்பைக் கொண்டு நம்முடைய ஆன்ட்ராய்ட் மொபைலில் பல விடியோக்கள் பார்த்து ரசிக்கிறோம். யூடுபில் இல்லாத விடியோக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அனைத்து மொழி பாடல்கள், காமெடி காட்சிகள், திரைப்படங்கள் அனைத்துமே குவிந்து கிடக்கின்றன. நம்முடைய மொபைலில் கண்டிப்பாக யூடுப் வீடியோ பார்த்து ரசித்திருப்போம். அதை டவுன்லோட் செய்ய முடிந்தால் இன்னும் வசதியாக இருக்கும். இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் நமக்கு பிடித்த விடியோவை ரசிக்கலாம். விடியோவை டவுன்லோட் செய்ய பயன்படும் மென்பொருளைப் பற்றி தான் இந்தப் பதிவு . டவுன்லோட் செய்த விடியோவை MP3 ஆக கூட கன்வெர்ட் செய்து கொள்ளலாம். அதோடு எல்லா வித குவாலிட்டியிலும் விடியோக்கள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பாகும் . இந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
1. பச்சை வண்ண அம்புகுறி பகுதியைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும்
2 . வரும் பக்கத்தில் டவுன்லோடை கிளிக் செய்யவும்
3. உங்களுக்குத் தேவையான குவாலிட்டி விடியோவைத் தேர்ந்தெடுக்கவும்
4. உங்களுக்குத் தேவையான வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கி விட்டது.
No comments:
Post a Comment