பாரதியார் பாடல்கள் - http://www.pondy.com/bharathiar/
சமையல் தளங்கள்.
http://www.recipesindian.com/
http://www.arusuvai.com/
http://www.samayal.com/forum/
http://www.recipesindian.com/
http://www.arusuvai.com/
http://www.samayal.com/forum/
அறிவியலில் நாள்தோறும், புதிய துறைகள் வளர்ந்து கொண்டே உள்ளன. அறிவியலில் இன்றைய உண்மைகளை, நாளைய ஆராய்ச்சி களின் முடிவுகள் பொய்யாக்கி விடுகின்றன. அறிவியலின் பிளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் இது தான் உள்ளது. www.newscientist.com என்ற வெப்சைட், அறிவியலின் நவீன துறைகள், புதிய கருத்துருகள் குறித்த அடிப்படை தகவல்களை, எளிய முறையில் தருகிறது. இந்த வெப்சைட் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
"உயர்ந்த லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும்" என்றார் அப்துல்கலாம். கனவுகளை ஆழ்மனதின் வெளிப்பாடுகள் என்று சிக்மன்ட் பிராய்டு கூறினார். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் இயற்கைக் கனவாக இருந்தாலும், லட்சியக்கனவாக இருந்தாலும், அவற்றை பகிர்ந்து கொள்ளwww.dreamdiary.in என்ற வெப்சைட் உதவுகிறது. விசித்திரமான கனவுகளின் பலன்களை, இந்த வெப்சைட்டில் அறியலாம்.
நாம் அகராதிகளைப் பயன்படுத்தும் போது, எப்போதும் புதிய பதிப்புகளையே பயன்படுத்த வேண்டும். ஆங்கில மொழி அகராதிகளில், ஆண்டு தோறும் புதிதாகச் சேர்க்கப்படும் வார்த்தைகளை, புதிய பதிப்பில் தான் பார்க்க முடியும். அவ்வப் போது புதிய பதிப்புகள் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காண, சைபர் வெளியில்www.thefreedictionary.com என்ற வெப்சைட் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் புதிதாக சேரும் வார்த்தைகள், இந்த வெப்சைட்டில் உடனடியாக அப்-டேட் செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment