இணையத்தில் பாடல்கள் கேட்டு மகிழ நிறைய தளங்கள் ஆன்லைன் எஃம் வசதியினை வழங்கிவருகின்றன. முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற தளங்களால் 24 மணி நேரமும் நம் செந்தமிழைக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.
பல தளங்கள் இசையினை வழங்கி வந்தாலும், நான் பாடல் கேட்க பயன்படுத்தும் ஒரு நல்ல தளத்தைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.
இத் தளத்தில் பல தரப்பட்ட பாடல்கள் குவிந்துகிடக்கின்றன. மற்ற தளங்களில் ஒரு பாடல் முடிந்தவுடன், விளம்பரங்கள், உரையாடல்கள் போன்றவைகள் ஒலிப்பரப்ப படும்.
ஆனால் இத்தளத்தில் பாடல்களின் நடுவே இது போன்ற இடையூறுகள் இல்லை என்பது சிறப்பு.
மற்றொரு சிறப்பான அம்சம், பாடல்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள்,
மேலே எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும், ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்தனியாக புதிய பாடல்கள், பழைய பாடல்கள், ரஹ்மான் பாடல்கள், இளையராஜா பாடல்கள், யுவன்சங்கர்ராஜா பாடல்கள் மற்றும் பல பிரிவுகளாகப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இத்தளத்தில் அனைத்து பாடல்களும் நல்ல தரமான ஒலியில் கிடைப்பது மற்றுமொருசிறப்பு.
இப்பொழுதே கீழே க்ளிக் செய்து பாடல்கள் கேட்கத் தொடங்குகள் !!!
No comments:
Post a Comment