யானை பசிக்கு சோள பொரியா என எல்லாரும் சொல்வதுண்டு . அது எதுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆன்ட்ராய்ட் போனுக்கு பொருந்தும். எதுக்கு இவ்ளோ விளம்பரம் என கேட்கிறீர்களா?
எவ்ளோ தான் சார்ஜ் போட்டாலும் பஞ்சா பறந்து போய்விடுகிறது என புலம்புபவர்களும் இருக்கிறார் கள். ஒரே ஒரு முறை ஆஃப் செய்து ஆன் செய்தால் கூட 3%அல்லது 4% சார்ஜ் குறைந்து விடக் கூடிய அளவில் பேட்டரிகள் இருக்கின்றன என்பது கஷ்டமான ஒன்று தான். பல வசதிகள் இருந்தாலும், இந்தப் பேட்டரி தொல்லையால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் தொல்லை படுகிறோம் . நிறைய அப்ளிகேஷன் முயற்சி செய்து பலனில்லை என்ற நேரத்தில் தான் இந்த அப்ளிகேஷன் கிடைத்தது. உண்மையாக இந்த அப்ளிகேஷன் உங்கள் சார்ஜைவெகு நேரத்திக்கு நீடிக்க உதவுகிறது. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவருக்கு இது மிகவும் அவசியமான அப்ளிகேஷன்.
பயன்படுத்தாத நேரங்களிலும் நெட் செயல்பட்டுக்கொண்டே இருப்பதாலும் நம் போன் சார்ஜை உடனே இழந்து விடுகிறது.
ஆனால் இது பயன்படுத்துவதன் மூ லம், நம் போன் நாம் உபயோகிகிக்கும் நேரத்தில் மட்டு மே
நெட் பயன்படுத்தப் படுகிறது. போன் டிஸ்ப்ளே ஆஃப் ஆகும் போது நெட்டும் ஆஃப் ஆகிவிடும்.
இதில் 4 வகையான மோட்கள் இருக்கின்றன
1 . Basic Saving Mode
2. Smart Saving Mode
3. Ultimate Saving mode
4. Sleep mode.
கீழே உள்ள படங்களில் அவைகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
No comments:
Post a Comment