Thursday, 28 November 2013

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”!!!

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது.

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லி மலை, சேர்வ ராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப்படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.


என்றும் இளமையோடு வாழ!!!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.


வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்!!!

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்

பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும் 
வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும்
வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும்
வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும்
வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும்
என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர்.

எனவே வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.

40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும்.

நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..

வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.

வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.


அறுவகைச் சுவை!!!

அறுவகைச் சுவை என்ன என்ன??

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா!!!

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதயஇரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


பல்பொடி!!!

தந்த ரோகம் - பல்பொடி

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு 
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.


Tuesday, 26 November 2013

: பயனுள்ள தளங்கள்!!!

இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள தளம்.

http://www.indianchild.com/                                                                                                                          
பாரதியார் பாடல்கள் - http://www.pondy.com/bharathiar/                                                                    


சமையல் தளங்கள்.

http://www.recipesindian.com/

http://www.arusuvai.com/

http://www.samayal.com/forum/                                                                  


இலவச மென்பொருட்கள்.

http://www.nchsoftware.com/software/index.html                                   


தமிழ் தேடு பொறி.

http://www.searchko.in/


  

கணினி விளையாட்டுகள்.

http://www.miniclip.com/

http://www.zapak.com/

http://www.mofunzone.com/
கணினி விளையாட்டுகள்.

http://www.miniclip.com/

http://www.zapak.com/

http://www.mofunzone.com/       


தொழில்நுட்பம்.

http://www.thozhilnutpam.com/    


குழந்தைகளுக்கான தளங்கள்.

www.fun4child.com

www.encyclopedia.com

www.britannica.com


அறிவியலில் நாள்தோறும், புதிய துறைகள் வளர்ந்து கொண்டே உள்ளன. அறிவியலில் இன்றைய உண்மைகளை, நாளைய ஆராய்ச்சி களின் முடிவுகள் பொய்யாக்கி விடுகின்றன. அறிவியலின் பிளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் இது தான் உள்ளது. www.newscientist.com என்ற வெப்சைட், அறிவியலின் நவீன துறைகள், புதிய கருத்துருகள் குறித்த அடிப்படை தகவல்களை, எளிய முறையில் தருகிறது. இந்த வெப்சைட் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.    


"உயர்ந்த லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும்" என்றார் அப்துல்கலாம். கனவுகளை ஆழ்மனதின் வெளிப்பாடுகள் என்று சிக்மன்ட் பிராய்டு கூறினார். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் இயற்கைக் கனவாக இருந்தாலும், லட்சியக்கனவாக இருந்தாலும், அவற்றை பகிர்ந்து கொள்ளwww.dreamdiary.in என்ற வெப்சைட் உதவுகிறது. விசித்திரமான கனவுகளின் பலன்களை, இந்த வெப்சைட்டில் அறியலாம்.   


நாம் அகராதிகளைப் பயன்படுத்தும் போது, எப்போதும் புதிய பதிப்புகளையே பயன்படுத்த வேண்டும். ஆங்கில மொழி அகராதிகளில், ஆண்டு தோறும் புதிதாகச் சேர்க்கப்படும் வார்த்தைகளை, புதிய பதிப்பில் தான் பார்க்க முடியும். அவ்வப் போது புதிய பதிப்புகள் வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காண, சைபர் வெளியில்www.thefreedictionary.com என்ற வெப்சைட் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் புதிதாக சேரும் வார்த்தைகள், இந்த வெப்சைட்டில் உடனடியாக அப்-டேட் செய்யப்படுகின்றன.

உங்களது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள!!!


ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர் இருக்கின்றனர்.

இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக தினமும் வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் அவர்களுக்கு தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது. இப்படி ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது.

இந்த வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே போதும். சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும், எந்த தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம்.

ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் தொடங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோ கோப்புகளை காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது.

ஆங்கிலம் கற்றுகொள்ள விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

http://funeasyenglish.com/

அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்!!!

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ளhttp://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.

இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில், ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போது, முக்கிய சொல், தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றி, பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.

இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில், அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்து, அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.

இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும், 1) அறிவியல் சார்ந்த, தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும். 2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள், வல்லுநர்களின் கட்டுரைகள், காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும். 3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக, அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றி, கட்டுரை எழுதியோர், கட்டுரைத் தலைப்பு, அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.

தளங்கள் மட்டுமின்றி, பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும், இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.

அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது.

முத்தான பத்து தளங்கள்!!!

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நாங்கள் நினைவில் கொள்ள முடியவில்லை. எனவே எளிய முறையில் இந்தக் குறிப்புகளைத் தரும் தள முகவரிகளைத் தருமாறு பல வாசகர்கள் கேட்டுள்ளனர். அத்துடன் நவீன தொழில் நுட்ப கருவிகள் குறித்த தளங்களுக்கான முகவரிகளையாவது தாருங்கள் எனப் பலர் கேட்டுள்ளனர். பல தளங்கள் இருந்தாலும், வாசகர்களின் தேவைகளின் அடிப்படையில் பத்து தளங்களின் முகவரிகள் இங்கு தரப்படுகின்றன. அத்துடன் அவை குறித்த சுருக்கமான தகவல்களும் உள்ளன.

1. www.quotedb.com

நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா! அப்படி யானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.

2. www.photonhead.com 

டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள்www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.

3. www.downloadsquad.com 

சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.

4. [url]www.stopbadware.org[/url] 

இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com 

இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.

6. www.gmailtips.com : 

கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. 

7. www.thegreenbutton.com 

விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன் குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு, டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.

8. www.tweakguides.com 

உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

9. www.ilounge.com 

இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன. 

10. www.goaskalice.com 

அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.

ஒரே கிளிக்கில் ஆங்கில அர்த்தத்தை அறிந்துகொள்ள!!!

 ஆன்லைனில் எதாவது படித்து கொண்டிருக்கும் போது ஒரு ஆங்கில வார்த்தையின் சரியான அர்த்தம் புரியாமல் போனால் அதை முழுமையாக படிக்க முடியாமல் போகும்.  ஒரு வார்த்தையின் அர்த்தத்தைத் தேடி அலைய வேண்டாம் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் . எந்த வார்த்தையின் அர்த்தம் வேண்டுமோ அந்த வார்த்தையின் மேல் கர்சரை வைத்து கன்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு மவுசின் இடப்பக்கத்தைக் கிளிக்குங்கள் .  அல்லது அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கொண்டு Ctrl+Alt+W கிளிக் செய்து கூட உங்களுக்கு வேண்டிய ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம்.  ஒரு புதிய பக்கத்தில் அதன் அர்த்தம் நமக்குக் கிடைக்கும்.wordweb

யூடுப் விடியோக்களை ஆன்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோட் செய்ய!!!

இணைய இணைப்பைக் கொண்டு நம்முடைய ஆன்ட்ராய்ட் மொபைலில் பல விடியோக்கள் பார்த்து ரசிக்கிறோம். யூடுபில் இல்லாத விடியோக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அனைத்து மொழி பாடல்கள், காமெடி காட்சிகள், திரைப்படங்கள் அனைத்துமே குவிந்து கிடக்கின்றன. நம்முடைய மொபைலில் கண்டிப்பாக யூடுப் வீடியோ பார்த்து ரசித்திருப்போம். அதை டவுன்லோட் செய்ய முடிந்தால் இன்னும் வசதியாக இருக்கும். இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் நமக்கு பிடித்த விடியோவை ரசிக்கலாம். விடியோவை டவுன்லோட் செய்ய பயன்படும் மென்பொருளைப் பற்றி தான் இந்தப் பதிவு . டவுன்லோட் செய்த விடியோவை MP3 ஆக கூட கன்வெர்ட் செய்து கொள்ளலாம். அதோடு எல்லா வித குவாலிட்டியிலும் விடியோக்கள் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பாகும் . இந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
1. பச்சை வண்ண அம்புகுறி பகுதியைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும்
Screenshot_2013-03-24-01-13-58
2 . வரும் பக்கத்தில் டவுன்லோடை கிளிக் செய்யவும்
Screenshot_2013-03-24-01-14-18
 3. உங்களுக்குத் தேவையான குவாலிட்டி விடியோவைத் தேர்ந்தெடுக்கவும்
Screenshot_2013-03-24-01-14-26
 4. உங்களுக்குத் தேவையான வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கி விட்டது.
Screenshot_2013-03-24-01-14-39




பாடல்கள் கேட்டு மகிழ !!!

இணையத்தில் பாடல்கள் கேட்டு மகிழ நிறைய தளங்கள் ஆன்லைன் எஃம் வசதியினை வழங்கிவருகின்றன. முக்கியமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற‌ த‌ள‌ங்க‌ளால் 24 ம‌ணி நேர‌மும் ந‌ம் செந்த‌மிழைக் கேட்கும் வாய்ப்பு ந‌மக்குக் கிடைத்திருக்கிற‌து.
ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் இசையினை வ‌ழ‌ங்கி வ‌ந்தாலும், நான் பாட‌ல் கேட்க‌ ப‌ய‌ன்ப‌டுத்தும் ஒரு ந‌ல்ல‌ த‌ள‌த்தைப் ப‌ற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.
இத் த‌ள‌த்தில் ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ பாட‌ல்க‌ள் குவிந்துகிட‌க்கின்ற‌ன‌. ம‌ற்ற‌ த‌ள‌ங்க‌ளில் ஒரு பாட‌ல் முடிந்த‌வுட‌ன், விள‌ம்ப‌ர‌ங்க‌ள், உரையாட‌ல்க‌ள் போன்ற‌வைக‌ள் ஒலிப்ப‌ர‌ப்ப‌ ப‌டும்.
ஆனால் இத்த‌ள‌த்தில் பாட‌ல்க‌ளின் ந‌டுவே இது போன்ற‌ இடையூறுக‌ள் இல்லை என்ப‌து சிற‌ப்பு.
ம‌ற்றொரு சிற‌ப்பான‌ அம்ச‌ம், பாட‌ல்க‌ளைத் த‌னித்த‌னியாக‌ப் பிரித்து வைத்திருக்கிறார்க‌ள்,
மேலே எண்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும், ஒவ்வொரு எண்ணுக்கும் த‌னித்த‌னியாக‌ புதிய‌ பாட‌ல்கள், ப‌ழைய‌ பாட‌ல்க‌ள், ர‌ஹ்மான் பாட‌ல்க‌ள், இளைய‌ராஜா பாட‌ல்க‌ள், யுவ‌ன்ச‌ங்க‌ர்ராஜா பாடல்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ப் பாட‌ல்க‌ள் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
இத்தளத்தில் அனைத்து பாட‌ல்க‌ளும் ந‌ல்ல‌ த‌ர‌மான‌ ஒலியில் கிடைப்ப‌து ம‌ற்றுமொருசிற‌ப்பு.
இப்பொழுதே கீழே க்ளிக் செய்து பாடல்கள் கேட்கத் தொடங்குகள் !!!


ஆன்ட்ராய்ட் பேட்டரி பூஸ்டர்!!!

யானை பசிக்கு சோள பொரியா என எல்லாரும் சொல்வதுண்டு . அது எதுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆன்ட்ராய்ட் போனுக்கு பொருந்தும். எதுக்கு இவ்ளோ விளம்பரம் என கேட்கிறீர்களா?
எவ்ளோ தான் சார்ஜ் போட்டாலும் பஞ்சா பறந்து போய்விடுகிறது என புலம்புபவர்களும் இருக்கிறார்கள்.  ஒரே ஒரு முறை ஆஃப் செய்து ஆன் செய்தால் கூட 3%அல்லது 4% சார்ஜ் குறைந்து விடக் கூடிய அளவில் பேட்டரிகள் இருக்கின்றன என்பது கஷ்டமான ஒன்று தான். பல வசதிகள் இருந்தாலும், இந்தப்   பேட்டரி தொல்லையால் சரியாகப் பயன்படுத்த முடியாமல் தொல்லை படுகிறோம் . நிறைய அப்ளிகேஷன் முயற்சி செய்து பலனில்லை என்ற நேரத்தில் தான் இந்த  அப்ளிகேஷன் கிடைத்தது. உண்மையாக இந்த அப்ளிகேஷன் உங்கள் சார்ஜைவெகு நேரத்திக்கு நீடிக்க உதவுகிறது.  மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவருக்கு இது மிகவும் அவசியமான அப்ளிகேஷன்.
Screenshot_2013-04-14-21-07-21
பயன்படுத்தாத நேரங்களிலும் நெட் செயல்பட்டுக்கொண்டே இருப்பதாலும் நம் போன் சார்ஜை உடனே இழந்து விடுகிறது.
ஆனால் இது பயன்படுத்துவதன் மூலம், நம் போன் நாம் உபயோகிகிக்கும் நேரத்தில் மட்டுமே
நெட் பயன்படுத்தப் படுகிறது. போன் டிஸ்ப்ளே ஆஃப் ஆகும் போது நெட்டும் ஆஃப் ஆகிவிடும்.
இதில் 4 வகையான மோட்கள் இருக்கின்றன
1 . Basic Saving Mode
2. Smart Saving Mode
3. Ultimate Saving mode
4. Sleep mode.
கீழே உள்ள படங்களில் அவைகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
Screenshot_2013-04-14-21-07-28

Screenshot_2013-04-14-21-10-14