Thursday, 11 December 2014

HomeoMedicine!!!

தூக்க நோய்களைத் தீர்க்கும் மருந்துகள்

சக்தியளிக்கும் உணவு, சக்திக்கேற்ற உழைப்பு, புத்துணர்வு நல்கும் ஓய்வு, என்பவை மனிதனின் உடல் நலத்திற்கும்,மனநலத்திற்கும் ஆதாரங்கள். இவற்றில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது. சுமார் 50 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு தூக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் இவர்களில் 15 சதவீத மக்களே உதவிகளை நாடுகின் றனர் என்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
Primary Sleep Disorders,Secondary Sleep Disorders,Parasomnias என்று பலவிதங்களில் தூக்கக் கோளாறுகள் காணப்படுகின்றன. தூக்கத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரணச் செயல்பாடுகள் ‘Parasomnias’ என்றழைக்கப் படுகின்றன. தூக்கத்தினூடே அலறி விழிப்பது, சிறுநீர்கழிப்பது, பற்களைக் கடிப்பது, தூக்கத் திலேயே எழுந்து நடப்பது, தூங்கிய நிலையிலே பேசுவது போன்ற அசாதாரணச் செயல்பாடுகளை (குறைபாடுகளை) ஆங்கிலச் சிகிச்சை மூலமா கவோ, வெறும் கலந்தாலோசனை மூலமாகவோ முழுமையாகக் குணப்படுத்த இயலாது.
‘Somnambulism’ என்பது தூக்கத்திலேயே நடப்பதைக் (Sleep walking) குறிக்கும். பெரும்பா லும் தூங்க ஆரம்பித்த முதல் சிலமணி நேரங்களிலேயே இது நடைபெறுகிறது. தூக்கத்திலேயே எழுந்து, வெற்றுப் பார்வையோடு நடைபயிலக் கூடிய இவர்களோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ள இயலாது. இந்த நேரத்தில் இவர்களை விழிக்கச் செய்தலும், உணரச்செய்தலும் குழப்ப மடையச் செய்துவிடும். கோபமடையச் செய்து விடும்; மன நிலையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
இக்குறை உள்ளவர்களில் சிலர் தூக்கத்திலேயே எழுந்து தனது படுக்கையை மட்டும் ஒரு சுற்று சுற்றி ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார் கள். ஒரு சிலர் எழுந்து நின்று விட்டோ அல்லது உட்கார்ந்து விட்டோ மீண்டும் படுத்துக் கொள்வார்கள். வேறு சிலரோ கதவைத்திறந்து வெளியே அருகி லுள்ள சில இடங்களுக்குச் சென்றுவிட்டு வீட் டுக்குத் திரும்பி படுக்கையில் படுத்துக் கொள் வாôர்கள். இத்தகைய பழக்கமுள்ளவர்கள் தூக்கத்திலே எழுந்து, வீடு தாண்டி, நடந்து தெருவை, சாலையைக் கடக்கும் போது ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, உரிய சிகிச்சை மூலம் பூரண குணமடையும் வரை இவர்கள் தூங்கும் சூழ்நிலையைப் பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தூக்கத்தில் எழுந்து நடமாடும் கோளாறுகளைக் குணப்படுத்த ஹோமியோபதியில் கீழ்கண்ட மருந்துகள் சிறப்பாகப் பயன்படுகின்றன. நேட்ரம்மூர், ஓபியம், பாஸ்பரஸ், சிலிகா, சல்பர், ஆர்டிமிசியா வல்காரிஸ், டிக்டேனஸ், காலிபுரோ மேட்டம், ஜிங்கம் மெட், காக்குலஸ். 
தூக்கத்தில் பீதியடைந்து பயங்கர அலறலுடன் (Sleep Terror/Night Mare) படபடக்கும் இதயத்துடன், வியர்த்து விறுவிறுத்து, மூச்சிறைத்து விழிப்பவர்களுக்கும் ஹோமியோபதியில் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். இப்படி விழிப்பவர்களின் பதட்டம் ஒரு நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அந்த நேரத்தில் அவர்களைச் சமாதானப்படுத்தவோ, சாந்தப் படுத்தவோ முயற்சி மேற்கொண்டால் எந்த பலனும் இருக்காது. அவர்களாகவே தூங்கி விழித்தபின் எல்லாவற்றையும் மறந்து போவார்கள்.
சிலர் சிலநேரங்களில் பயங்கரக்கனவு கண்டு விழிப்பதுண்டு அத்தகைய கனவுகள் கொடூரமான தாகவும் தெளிவாகவும் இருப்பதுண்டு. கனவுகளின் பாதிப்பினால் விழித்து பயந்து சத்தமிட முயற்சிப் பார்கள்; ஆனால் சத்தம் வெளியே வராது. கை களை அசைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அசைக்கமுடியாது. ஏதோ இனம்புரியாத ஒன்று நெஞ்சில் அழுத்துவது போல உணர்வார்கள். சில நிமிடங்கள் அசையாமல் இருந்து விட்டு பின் தெளிவடைவார்கள். அதற்குப்பிறகு விழிகள் மூடித்தூங்கவே பயப்படுவார்கள் (பெண் குழந்தைகளிடம் இந்நிலை அதிகளவில் காணப்படு வதாகவும் கூறப்படுகிறது) இத்தகையவர்களுக்கு தகுந்த ஹோமியோபதி சிகிச்சையும், உள்ளத்தை வலிமைப்படுத்தும் பயிற்சிகளும் தேவை. கீழ்கண்ட மருந்துகள் மிகவும் பயனளிக்கக்கூடியவை.
போராக்ஸ் - தூக்கத்தில் திடீரென பயந்து அலறுதல் (குழந்தை தாயை     அல்லது தொட்டிலை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்)
அம்மோனியம் கார்ப் - இருதய வியாதி காரணமாக ஒவ்வொரு  இரவிலும் பீதியும் விழிப்பும் ஏற்படுதல் (நித்திய கண்டம்!)
சாமோமில்லா -  பயங்களூட்டும் கனவுகளால் தூங்கிக் கொண்டே அழத் துவங்குதல்
சீட்ரான் - இறந்து போனவருடன் சண்டையிடும் கனவுகள் காரணமாக பீதியுற்று விழித்தல்
லேடம்பால்     - தொண்டைப் பகுதி வீங்கியது போலவும், மூச்சுத் திணறுவது     போலவும் ஏற்படும் உணர்வால் மூச்சடைத்து விழித்தல், தூக்கத்திலேயே இறந்து போக நேரிடலாம் எனப் பயந்து தூங்கச் செல்லப் பயப்படுதல்.
காலி புரோமேட்டம் - குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு விழித்து கீறிச்சிடல், நடுங்குதல்.
சிலிகா  - தூக்கத்திலிருந்து திடீரென எழுதல்-எழும்போது உடம்பெல்லாம் நடுங்குதல்.
ஓபியம்    - தூக்கத்தில் பயந்து கத்திக் கொண்டு எழுதல்.
பேயோனியா - நெஞ்சுமீது பேயோ, பிசாசோ ஏறி அமுக்குவது போன்ற உணர்வுடன் விழித்தல், முனகுதல்.
நக்ஸ்வாமிகா    - அதிகளவு இரவு உணவாலும், குடிப்பழக்கத்தாலும், ஜீரணக் குளறுபடிகளாலும் அமைதி கெட்டு தூக்கம்  கெட்டு, தூக்கத்தில் ஆளை அமுக்கும் (NightMare), உணர்வோடு விழித்தல்.
கல்கேரியா கார்ப் -     இரவில் அடிக்கடி விழித்தல்,      வாயை மெல்லுதல்,
விழுங்குதல், அதிகளவு தலையில் வியர்த்தல் ,குழந்தைகள் நடுநிசிக்குப் பின்   வீரிட்டுக் கத்துதல்.
கோனியம் -     மூளைச் சோகை (Cerebral Anaemia) காரணமாக பதட்டத்துடன் விழிப்பு.
டிஜிடாலிஸ்     -     உயரத்திலிருந்து கீழே விழுவதாக அல்லது நீரில் விழுவதாகக் கனவு கண்டு கலவரத்தோடு விழித்தெழுதல். தூக்கத்திலேயே தன்னுணர்வின்றி விந்து கழிந்ததும் திடுக்கிட்டு எழுதல்.   
Primary Sleep Disorders’ எனப்படும் தூக்கம் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலை ஒரு பகுதியினரிடம் உள்ளது. இவர்களிடம் தூக்கத்தின் அளவு, தன்மை பாதிப்பு தவிர வேறு பாதிப்புகள் இருப்ப தில்லை. காரணகாரியமற்று வெறுமனே விழித்துக் கொண்டிருப்பது  இவர்களின் வாடிக்கையாகி விடுகிறது. இத்தகையவர் களுக்கு ‘பாசிபு ளோரா’ ‘அவீனாசடீவா’ போன்ற ஹோமி யோ மருந்துகள் மிகவும் பயன் தரக்கூடியவை. “அலோபதியிலுள்ள தூக்க மாத்திரைகளே கதி” என்ற நிலையிலிருப்பவர்களையும் ஹோமியோ மருந்துகள் மூலம் மீட்க முடியும்.
‘Secondary Sleep Disorders’எனப்படும் தூக் கக் கோளாறுகள் பிற காரணங்களால் ஏற்ப டக்கூடியவை. மன எழுச்சிகள், அதிர்ச்சிகள், கவலைகள், தீவிர உடல்நலக்குறைபாடுகள், மனநோய்கள் போன்ற வேறு பல பிரச்சினை களோடு ஒட்டியே தூக்க பாதிப்பும் ஏற்படுகிறது. அடிப்படை காரணங்கள் சரி செய்யப்படும்போது தூக்க ப்பாதிப்பும் சரியாகிவிடுகிறது.
     “என்ன சொல்லுவேன்
     என்னுள்ளம் தாங்கலே!
     மெத்தை வாங்குனேன்
தூக்கத்த வாங்கலே!” என்று சோகம் ததும்ப ஆழ் மனத் துயரங்களில் மூழ்கிக் கிடப்போ ருக்கு அமைதியான தூக்கம் எப்படி அமையும் இவர்களுக்கு ‘இக்னேஷியா‘  ‘நேட்ரம்மூர்‘ போன்ற மருந்து கள் அளித்தால் மனசின் பாரம் குறையும்;  நிம்மதி யான தூக்கம் அரவணைக்கும்.
     “எண்ணிரண்டு வயது வந்தால்
     கண்ணுறக்கம் இல்லையடி
     ஈறேழு மொழிகளுடன்
     போராடச் சொல்லுமடி
     தீராத தொல்லையடி! என்று பருவ
     வயதினரின் காதல் கிளர்ச்சிகளின் போதும்,
     “தூங்காத கண்ணென்று ஒன்று
     துடிக்கின்ற சுகமென்று ஒன்று”    
என்று துள்ளித்துள்ளி மனம் விளையாடி மகிழ்கிற போதும், உடலும் மனமும் கிளர்ச்சி அடைந்த நிலையில் தூக்கம் தூரப்போய்விடும். மணநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் மணமகன், மண மகளுக்கும், சுற்றுலா செல்லத் தயாராகும் சிறுவர் சிறுமியர்களுக்கும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்து மஸ் போன்ற விழாகாலங்களில் அனைத்து வயதின ருக்கும் தூக்கம் தொலைந்து போகிறது. இத்தகைய சூழ்நிலைப் பின்னணியில் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்து ‘கா.பியாகுரூடா’.
     “இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
     இதுதான் எங்கள் உலகம்” என்றும் 
“சோறுன்னா சட்டிதின்போம்சொன்ன பேச்சு கேட்கமாட்டோம ராத்திரிக்குத் தூங்கமாட்டோம் விடியக்காலம் முழிக்கமாட்டோம்”
என்றும் முழக்கமிடும் நபர் களின் முறையற்ற உணவுப் பழக்கங்கள், குடி போதைப் பழக்கங்களால் தூக்கம் கெடு கிறது. தூங்கிவிட்டால், அதி காலை 3 மணிக்கே விழிப்பு ஏற்படுகிறது. இத்தகையவர் களின் தூக்கமின்மை பிரச் சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நக்ஸ்வாமிகா சிறந்தது.
 “அத்தை மடி மெத்தையடி  
 ஆடிவிளையாடம்மா !
 ஆடும் வரை ஆடிவிட்டு
 அல்லி விழி மூடம்மா”
என்று அத்தையோ, மாமாவோ யார்கேட்டுக் கொண்டாலும் தூங்கவே தூங்காத குழந்தைகள் உண்டு. விழித்தபடி விளையாடும் குழந்தைகளும் உண்டு. வீறிட்டு அழுது இரவின் அமைதியைக் கிழித்து நாசப்படுத்தும் குழந்தைகளும் உண்டு. குழந்தைகளின் இத்தகைய தூக்கமின்மைக்கு ‘சாமோமில்லா’ ‘சைபிரிபீடியம்’, ‘சிபிலி னம்’,‘சோரினம்’, போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் காணப்படும் குறிகளுக்கேற்ப பயன்படுத்தி குணப்படுத்த முடியும்.
பயம் மற்றும் அதிர்ச்சி காரணமாகத் தூக்க மின்மை ஏற்பட்டு படுக்கையில் அமைதியற்ற நிலை யில் தவிப்போருக்கு ‘அகோனைட்’ மாதவிடாய் நிற்கும் காலத்தில் கர்ப்பப்பை எரிச்சல், அசௌக ரியம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘செனிசியா’ முதுமையில் ஏற்படும் தூக்கமின் மைக்கு ‘பரிடாகார்ப்’, பின்னிர வில் தூக்க மின்மைக்கு ‘பெல்லிஸ் பெரனிஸ்’, வீட்டு நினைவுத் தூக்கம் வராமைக்கு ‘காப்சிகம்’, கவலையினாலும் கொள்ளையர்கள் குறித்த கனவுக்குப் பின்பும் தூக்கம் வராமைக்கு ‘நேட்ரம்மூர்’, உடற் களைப்பால் உளைச்சலால் ஏற்படும் தூக்கமின் மைக்கு ‘ஆர்னிகா’, பகலில் சிறு தூக்கம் (Catnap sleep - பூனைத்தூக்கம்)
இரவில் தூக்கமின்மைக்கு ‘சல்பர்’ தாங்கமுடியாத வலியால் ஏற்படும் தூக்க மின்மைக்கு ‘சாமோமில்லா’, உறவினர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டிய கவலை கொண்ட மன  நிலையில், விழித்துப் பராமரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘காக்குலஸ்’, எலும்பு வலிகளால் தூக்கமின்மைக்கு ‘டாப்னே இண்டிகா’, தொழில் குறித்த கவலைகளால் ஏற்படும் தூக்கமின்மைக்கு ‘பிரையோனியா’, ‘அம்ப்ரா கிரீஸô’, போன்ற மருந்துகள் தூக்கமின்றித் துயரப்படும் மனிதர் களை நலப்படுத்தும்; இயற்கையான இனிய தூக்கத் தை வழங்கும்.
ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஆறு மணிநேர ஆழ்ந்த தூக்கம் போதும். இதனால் தான் இளம்வயதினர் பகலில் தூங்கும் பழக்கத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ கூடாது. சின்னஞ் சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை மேலும் அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியத் திற்கு அவசியம். இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! கால மிதைத்தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!” என்று அழகிய தமிழில் அர்த்தமுள்ள தாலாட் டைப் பாடினார்.
வயதுக்கேற்ற, பருவத்திற்கேற்ற, உழைப்புக் கேற்ற உறக்கம் அமையாத போதும், உறக்கத்தில் சில அசாதாரணச் செய்கைகள் நிகழும் போதும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் முழுமையாகக் குணமளிக்கமுடியும். 

முதுமையிலும் இனிமை

மானிட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பருவம் முதுமை. எல்லோரும் அதை கடந்தே தீரவேண்டும். கதைகளிலும் காவியங்களிலும் வரும் நாயகர்கள் போல் மரணமும் முதுமையும் வராமலே இருக்க நாம் யாரிடமும் வரம் வாங்கிக் கொள்ள வழியில்லை. முதுமையைத் தள்ளிப் போடலாம்; ஆனால் தவிர்க்க முடியாது.
                முதுமை என்பது நோய்களின் மேய்ச்சல்காடு  என்றோ சுடை என்றோ சாபம் என்றோ கருதி அஞ்சத் தேவையில்லை. எல்லோரும் முதுமை யைச் சந்தித்தே தீர வேண்டும். முதுமை என்பது அனுபவங்களின் விளைநிலம். முதுமையை இயல்பான மனநிலையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். முதுமையைத் திட்டமிட்டு வாழக் கற்றுக் கொண்டால் உடல்நல, மன நலக் கோளாறு களின்றி, பிற ருக்குத் தொந்தர வின்றி மகிழ்ச்சி யோடு இறுதி நிமிடம் வரை வாழமுடியும்.
                உடம்பின் இயக்கம் கெட் டால் முதுமை விரைவில் வந்துவிடும்  என கலிபோர்னியா மருத்துவ நிபுணர் ஹார்டின் ஜோன்ஸ் தெரிவிக்கிறார். நடுத்தர வயதில் ஆற்றலுடன் இயங்கியவர்களால் அறுபதுகளிலும், எழுபது களிலும் அதே வேகத்துடன் இயங்க முடியும். ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில் அசுத்தம் படியாது என்பது போல, இரும்பை உபயோகித்துக் கொண்டே இருந்தால் துருபிடிக்க வாய்ப்பில்லை என்பதுபோல் உழைத்துக் கோண்டே இருந்தால், இயங்கிக் கொண்டே இருந்தால் முதுமையால் துயர்கள் இல்லை.
                அதை பயன்படுத்து அல்லது அதை இழந்துவிடு (USE IT OR LOSE IT) என்று ஆங்கிலே யர்கள் சொல்வதுண்டு. முதுமைக்கும் இது பொருந்தும். தொடர்ந்து உழைப்பு இருந்தால் தசை திசுக்களை, எலும்புகளை இழப்பது மிகவும் தாமதம் ஆகும். உழைப்பில்லாதவர்கள் உடற்பயிற்சி செய்து உடல்திறன் குன்றாமல் பராமரிக்கலாம்.
                முதுமையிலும் தோன்றும் பலவியாதிகள் முதுமையின் காரணமாக வந்தவையல்ல. அதே போல, உள்பலம் (STAMINA), தாங்கும் திறன் போன் றவை வயதாகி விட்டால் குறைந்துவிடுவதில்லை. இவை, இளமையிலும், நடுத்தர வயதிலும் ஏற்பட்ட தவறான பழக்கங்களின் விளைவுகள். ஒழுங்கற்ற உணவுபழக்கம், உடற்பயிற்சியோ, உழைப்போ இல்லாமலிருப்பது. நாள் முழுக்க சோம்பலாகக் கழிப்பது, நீண்டநேரம் டி.வி பார்த்துக் கொண்டே இருப்பது, புகைபழக்கம், மதுபழக்கம் என்று முடங்கிக் கிடந்தவர்களுக்கு முதுமை சுமையாக மாறும். மூட்டுக் கோளாறுகளா லும், ஜீரண, சுவாச, இருதயக் கோளாறுகளா லும், உடல்பரு மனாலும் கடுமை யாகப் பாதிக்கப் படுவார்கள். மகிழ்ச்சியை இழப்பார்கள். உடல் திறனும், பாலுறவுத் திற னும், உற்சாகமும் ஓடிமறையும். மன உளைச்சலும் வேதனைகளும் சூழும்.
             ஹோமியோபதி, அக்குபஞ்சர், மலர் மருந்துகள் போன்ற மாற்றுமுறை மருந்துகள் மட்டுமே மனிதனை முழுமையாக ஆய்வு செய்கின்றன. மனிதனின் புறநோய்க்குறிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல்,  மனநிலை களையும், உணர்வுநிலைகளையும்   கணக்கில் கொண்டு சிகிச்சை அளிக்கின்றன. முதுமையில் ஏற்படும் பல்வேறு உடல், மன உபாதைகளை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் குணப்படுத்த இம்மருத்துவங்களே சாலச்சிறந்தவை.
                முதுமையில் பொதுவான ஒரு பிரச்ச னையாக அமைவது தூக்கமின்மை (INSOMNIA). பின்னிரவுத் தூக்கத்தைப் பெரும்பாலான முதியோர் இழந்துவிடுகின்றனர். மனச்சோர்வு, வலிகள், சிறுநீர்த் தொல்லை மற்றும் பல காரணங்களால் தூக்கமின்மை ஏற்படுகிறது. ஹோமியோ மேதை டாக்டர். கெண்ட் அவர்கள், வயதானவர்களின் தூக்கமின்மைக்கு                               (BARYTA CARB )  “பரிடா கார்ப்”   என்ற மருந்து மிகச்சிறந்த பலன்தரும் எனக் குறிப்பிடுகிறார். இப்பிரச்சனைகளைத் தீர்க்க பல ஹோமியோ மருந்துகளும் மலர் மருந்துகளும் உள்ளன. அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற சீனக் சிகிச்சை முறைகளும் உள்ளன. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தூக்க மாத்திரைகள் சாப்பிடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
                இரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளா றுகளுக்கும் மாற்றுமுறை மருத்துவமே சிறந்தது. இப்பிரச்சனைகள் உள்ள முதியோர் காபி, டீ பழக்கத்தைவிட வேண்டும். மீன் சாப்பிடலாம். இறைச்சியில் கொழுப்பு. அதிக எண்ணெய் இல் லாமல் சாப்பிடலாம். கோழிக்கறி உண்பவர்கள்  இறைச்சியில் கொழுப்பு, அதிக எண்ணெய் இல்லாமல் தோலை உண்ணக்கூடாது. தோலில் கொழுப்புச் சத்துள்ளதால்  அகற்றிவிடுதல் நல்லது  .தானியங்கள்  , காய்கறிகள் , பழங்கள் சேர்ப்பது   அவசியம். ரத்த அழுத்தமுள்ள வர்கள் உப்பைக்குறைத்துக் கொள்வதும், வெங்காயம். பூண்டு போன்றவற்றைச் சேர்ப்பதும், பழவகைகளை உண்பதும் அவசியம். வயிற்றில் இரண்டு பங்கு உணவும் ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு வெற்றிடமும் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
                வலிப்பு, ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தைராய்டு கோளாறுகள் இன்னும் பல வியாதிகளுக்கு ஹோமியோபதியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்தரத்தீர்வு காண முடிகிறது. உயர்ந்த ரத்த அழுத்தம் மற்றும் தாழ்ந்த ரத்த அழுத்தத்திற்கு மிகச்சிறந்த பலனைத் தரும் மருந்துகள் உள்ளன.
                முதுமையில் ஏற்படும் மனத்தளர்ச்சி, உடல் தளர்ச்சிக்கு ஹோமியோ மருந்துகள் பயன்படுகின்றன. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கும், கேட்கும் திறன் குறைவதற்கும், பல ஹோமியோ மருந்துகள் நல்ல நிவாரணம் நல்குகின்றன. முதுமையில் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கத்தை நலப்படுத்த பல ஹோமியோ மருந்துகள் உறுதுணை புரிகின்றன.
                முதியோரின் நடமாட்டம் குறைந்து, உடலியக்கம் தடைப்பட்டு முடங்கிக் கிடக்க வைக்கும் முக்கிய வியாதி வாதரோகம். இன்றைய உலகில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக் கும்கூட வாதவலிகள் வருகின்றன. மூட்டுவலிகள், மூட்டு அழற்சி, வீக்கம் போன்ற வை பொதுவாக குளிர்ச்சியிலும், ஈரத்திலும், மழை, பனிக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் அதிக வேதனை தருகின்றன. இந்தத் துயர் களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முழு நிவாரணம் அளிக்கின்றன. ஹோமியோ மருந் துகள் நல்ல குணமளிக்கின்றன.
                ஆண்டுகள் உருண்டோட முதுமையின் அறிகுறிகள் முகத்திலும், உடலிலும் தெரிய லாம். ஆனால் உள்ளத்திலே தோன்றக்கூடாது. டால்ஸ்டாய் தனது  82ஆவது வயதில்  ‘நான் வெறுமனே இருக்க முடியாது.’ ( I Cannot be silent) என்ற நூலை எழுதினார். மைக்கேல் ஏஞ்சலோ தனது 88வது வயதில் சிஸ்டன் ஆலயக் கூரையில் சித்திரங்கள் வரைந்தார். தாமஸ் ஆல்வா எடிசன் 80ஆம் வயதுகளில் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார்.
                முதுமையில் இனிமை காண, முதுமை யைத் தள்ளிப் போட சிலவற்றைக் கடைபிடிக்க வேணடும். முறையான வேலைத்திட்டம். தினசரி நடத்தல், எளிய உடற்பயிற்சிகளைச் செய்தல், போதுமான உறக்கம், திருப்திகரமான தாம்பத்திய மகிழ்ச்சி, கட்டுப்பாடான, ஒழுக்கமான பழக்கங்கள், நேரந்தவறாத உணவு, அன்புமயமான நண்பர்களை, தோழமையைப் பெறுதல், மனவளத்தை மேம்படுத்தும் நூல்வாசிப்பு போன்றவைகளைப் பின்பற்று வதால் முதுமையில் இனிமை காண முடியும். மேற்குறிப்பிட்டவைகளை அனுசரிப்பதோடு, முதுமையில் அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு உபாதைகளுக்கும் ஹோமியோ மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலமும் தன்னியக்க ஆற்றல் அதிகரிக்க செய்து நலமான உணர்வுகளோடு வாழமுடியும்.
       வாழ்க்கையின் இறுதிப் பகுதியான முதுமை யைத் தொடாமல் எவரும் தப்பித்து விட முடியாது. ஹோமியோபதி மருத்துவம் அறிந்த வராயிருந் தால்,  ஹோமியோபதி மருத்துவத்திலேயே அவ்வப்போது சிகிச்சை பெறுபவராயிருந்தால் எந்த நோய்சூழலிலும் போராடி வெல்ல முடியும். உடல் நலத்தையும் மன நலத்ததையும் நன்கு பேணமுடியும். 
       முதியோர்களுக்கு நிவாரணமளிக்கக் கூடிய முக்கியமான சில மருந்துகளையும் அவற்றின் குறிகளையும் அறிந்துகொள்வோம் :
1.     பரிடாகார்ப்                        -       தூக்கமின்மை , தலைசுற்றல்
2.     வைதானியா சோம்கிபெரா30        -      பலவீனம், சோர்வு                                                                                        (தினம் 1வேளை - 2வாரகாலம்)
3.     லைகோபோடியம் 30/200            -      பசியின்மை, வயிற்று உப்புசம்.
4.     கல்கேரியா பாஸ் 30,                                   -               எலும்புத் தேய்வு காரணமாக அடிக்கடி
(தினம் 1 வேலை -1 மாதம்)               எலும்பு உளைதல், முறிதல்    .
1.     வனாடியம் 6                        -      ரத்தசோகை                            (தினம் 1 வேளை 15- 30 நாள் )
2.     ஏகி போலியா 30                    -      மலச்சிக்கல்                               (தினம் 1 வேளை நிவாரணம் கிடைக்கும் வரை)
3.     காலி பாஸ் 30                      -      மூளை சுருங்குதல்
4.     பாப்டீஸியா 200                     -      முதுமையில் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு
5.     சல்பர் 200                          -   தோல் அரிப்பு, மறதி (பெயர்கூட)
6.     ஆரம் மெட் 200 / `1M                            -    மிகுந்த மனச் சோர்வு
                                                                                  தற்கொலைச் சிந்தனை
11. சபல் செருலேட்டா 30        -         சுக்கிலச்சுரப்பி வீக்கம், அடிக்கடி சீறுநீர் கழிப்பு. தினம் 1வேளை வீதம் 15 நாள்
(மாதம் 1வேளை தூஜா  1M)
 12. பரிடா கார்ப்                     -      இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
13.காலிமூர் 30                      -      வாய்ப்புண்கள்
14.பீட்டா வல் 6 (15 நாள்)                  -    L.D.L எனப்படும் தீய கொலஸ்டிராலைக்   குறைக்க.
15.     ஈக்குசிடம்                  -      தன் உணர்வின்றி சிறுநீர் கழிதல்
16.     சபடில்லா                   -      உட்கார்ந்துள்ள போது சிறுநீர் சொட்டுதல்
17.     மெசிரியம்                  -      கண் ஆப்ரேசனுக்குபின் இமைகளில் நரம்புவலி
18.     அவினாசடீவா                     -      கைகள் நடுக்கம்.
19.     அகாரிகஸ்                 -      தலை முன்னும் பின்னும் ஆட்டம்
20.     டாரண்டுலா ஹிஸ்                 -      தலை பக்கவாட்டில் ஆட்டம்.

அறுவைச் சிகிச்சையும் ஹோமியோபதியும்

அறுவைச் சிகிச்சையை ஹோமியோபதிபதி முற்றிலும் எதிர்க்க வில்லை. பிறவி உடலமைப்புக் கோளா றுகள் (CONGENITAL DEFORMITIES), விபத்துகளால் உடல் உறுப்பு களில் ஏற்பட்ட கடுமையான சேதங்கள், முற்றிய நிலைக் கட்டிகள் போன்ற சூழ்நிலைகளில் அறுவைச் சிகிச்சையின் நியாயமான பயன் பாட்டை அங்கீகரிக் காமல் இருக்க முடியாது.
       ஆனால். மருந்து, மாத்திரை களாலேயே குணப்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள பல்வேறு வியாதிகளை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ வழங்காமல், முயற்சிகள் மேற்கொள்ளா மல் அறுவைச்சிகிச்சை செய்வதைத் தான் ஹோமியோபதி விமர்ச்சிக்கிறது. ‘அறுவைச் சிகிச்சை வெற்றி’ என்று அறிவித்தாலும், பாதிக்கப்பட்ட பாகத் தை அறுவை செய்து நீக்கியதால் மட்டும் முழு குணம் ஏற்பட்டு விடாது என்பதை விரைவிலேயே ஒவ்வொரு நோயாளியும் மறு அனுபவமாகத் (REEXPERIENCE) தெரிந்து கொள்கின்றனர்.
       வியாதிக்குறிகளை அகற்று வதால் மட்டுமே வியாதியின் அடிப்படை நீங்கி விடுவதில்லை. எனவே தான், டான்சில் ஆபரே சன் செய்து கொண்ட குழந்தை களுக்கு, டான்சிலால் ஏற்பட்ட எந்தத் தொந்தரவுகளும் மாறி விடுவதில்லை; வாழ்நாள் முழுதும் தொடர்கின்றன. மூக்கடைப்பிற் காக (NASAL BLOCKAGE) சிகிச்சைக் குச் செல்லும் பெரும்பாலோர்க்கு மூக்கினுள் உள்ள சிறிய சதை வளர்ச்சியைக் (POLYPI) காரணம் காட்டி அறுவைச் சிகிச்சை செய் யப்படுகிறது. இருந்த போதிலும் மூக்கடைப்பு நீங்குவதில்லை; மீண்டும் சதை வளர்ச்சி ஏற்படுவ தைத் தடுக்க முடிவதுமில்லை. அதே போல, மூலச் சதையை வெட்டி எறிவதால் மட்டும் மூலத்தின் மூல காரணம் மறைந்து விடுவதில்லை. மீண்டும் மூல அவஸ்தைக்கு ஆளாகின் றனர். பல முறை மூல அறுவைச் சிகிச் சைக்கு ஆளானவர்கள் இறுதியில் ஹோமியோபதி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வருவதைப் பார்க்கிறோம்.
       தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணிபுரியும் கிறிஸ்துவப் பெண்மணி ஒருவர் கழுத்தின் இடதுபுறம் கட்டி ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அந்தத் தழும்பில் வலி ஏற்பட்டு மீண்டும் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். வலி குறையவில்லை. தழும்பு புண்ணாக மாறியது. நீர் போன்ற சீழ்கசிவு ஏற்பட்டு எரிச்சலும் வலியுமாய் சித்ரவதை செய்த போது என்னை அணுகினார். சில நாட்களில் குணமடைந்தார். சிலகாலம் கழித்து, அவரது கழுத்தின் வலதுபக்கம் முன்பு போலவே ஒரு கட்டி ஏற்பட்டு, ஆங்கில மருத்துவரைச் சந்தித்து “அறுவைச் சிகிச்சை வேண்டாம்! மருந்து மாத்திரை கள் மட்டும் தாருங்கள்” என்று கேட்க அவர் கோபப்பட்டு அனுப்பி விட்டார். மீண்டும் அப்பெண் ஹோமியோ சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு முழுமையாகக் குணமடைந் தார்.
       கல்லூரி மாணவர் ஒருவர் முன் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய மருவை தோல் நிபுணரிடம் காட்டி அறுவை மூலம் அகற்றினார். இரண்டு மாதம் கழித்து, அருகிலேயே புதிய இரண்டு மருக்கள் தோன்றின. அதே நிபுணரிடம் சென்று மறுபடியும் அறுவை செய்து கொண்டதோடு, மீண்டும் வராமலிருக்க மருந்து மாத்திரைகள் கொடுங்கள் என்று கேட்க, டாக்டர் வெறும் ஆறுதல் மட்டுமே கூறி அனுப்பியுள்ளார். சில மாதம் கடந்த பின் அவரது கழுத்துப் பகுதி முழுவதும் ஏராளமான மருக்களும், சில பாலுண்ணிகளும் தோன்றின. அம்மாணவர் ஹோமி யோபதி பற்றிக் கேள்விப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்களில் எல்லா மருக்களும், பாலுண்ணி களும் மாயமாய் மறைந்தன. இது போன்ற அறுவை சிகிச்சையின்றி நலமாக்கிய எண்ணற்ற அனுபவங்கள் ஹோமியோபதியில் மட்டுமே சாத்தியம்.
       (APPENDICITIS) குடல்வால் அழற்சி நோயால் துயருற்ற கல்லூரி ஆசிரியர் ஒருவர் அறுவைச் சிகிச்சைக்குப் பயந்து ஹோமியோபதி சிகிச்சைக்கு வந்தார். இவர் இதற்குமுன் சாதாரணத் தலைவலிக்குக் கூட ஹோமியோபதி பக்கம் தலை காட்டியதில்லை. ஆங்கில வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத கொடூரமான வலியால் துடித்துப் போன அவருக்கு ஹோமியோ மருந்துகள் மிக விரைவான நிவாரணம் அளித்து வலியைக் குறைத்ததோடு, அறுவைச் சிகிச்சைக்கும் அவசிய மில்லாமல் செய்துவிட்டன. மறுபடியும் அப்பிரச் சனை அவருக்கு பல ஆண்டுகளாகியும் வரவே யில்லை.
       “உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்” - என்ற பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பல சந்தர்ப்பங் களில் அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்ற உண்மை ஒருபுறமிருக்க, பல்வேறு நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்குச் சற்று முன்னும் பின்னு மாய் ஹோமியோபதியர்களைச் சந்திக்கின்றனர். தவிர்க்க முடியாமல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதாகக் கூறி அறுவைச் சிகிச்சை காரணமாகப் பாதிப்புகள் நேராமல் இருக்க ஹோமியோ மருந்துகளைக் கோருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹோமியோபதி அருந்துணை புரிந்து காக்கிறது. பொதுவாக அறுவைச் சிகிச்சைக்கு முன்பு எந்தவிதமான உணவும் பானமும் மருந்தும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டாலும் ஹோமியோ மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் அறுவைச் சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் நேர்வதில்லை.
       தேவைப்படும் காரணங்கள், சூழ்நிலைகள், குறிகளுக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கீழ்கண்ட ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
      பlொதுவாக எந்த ஓர் அறுவைச் சிகிச்சைக்கும் இரண்டு நாள் முன்னதாக தினம் 3 வேளை வீதம் ஃபெர்ரம் பாஸ் 6 எடுத்துக் கொள்வதால், அறுவைச் சிகிச்சையால் ஏற்படும் அதிக ரத்த ஒழுக்கையும், தொற்று நோயையும் கட்டுப்படுத்தலாம். (Infection & haemorrhaging)
      அறுவைச் சிகிச்சைக்கு முன் ஆர்னிகா 30 பயன்படுத்தினால் (SURGICAL SHOCK) அதிர்ச்சியைக் குறைக்கும்; ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும்.l
      அறுவைச் சிகிச்சைக்கு முன் பதட்டம்,   நடுக்கம், மனச்சோர்வு ஏற்படும் போது ஜெல்சிமியம் 30 பயன்படும்.l
      அறுவைச்சிகிச்சையின் போது அல்லது சிகிச்சைக்குப் பின்னர் இறந்துபோவோம்      என்ற பயத்துடன் இருப்பவருக்கு அகோனைட் கொடுக்கலாம்.l
      ஜெல்சிமியம், அகோனைட் போன்ற மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்கு முதல்நாள் இரவு 1 வேளையும், அறுவைச் சிகிச்சை நாளன்று காலை 1 வேளையும், அறுவை முடிந்த பின் பயம், பதட்டம் நீடித்தால் மீண்டும் சில வேளைகளும் தரலாம்.l
      முழங்கை, முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யும் முன்னர் ரூட்டா 30 2 வேளையும், பின்னர் சில வேளைகளும் கொடுக்கலாம்.l
      முதுகுத் தண்டில் அறுவைச் சிகிச்சை எனில் ஹைபரிகம் 30 பயன்படும்.l
      கை, கால் பாகம் நீக்கிய பின்.... ஏற்படும் நரம்பு வலிக்கு அல்லியம் சீபா சிறந்தது.l
      சுன்னத் (CIRCUMCISION) அறுவைக்கு முன் ஆர்னிகா 30 அல்லது ஹைபரிகம் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30 கொடுக்கலாம். அறுவை     முடிந்த பின்னர் மேலும் 2 நாள் 4 மணி நேரத்திற்கு ஒரு வேளை வீதம் இம்மருந்துகளைத் தரலாம்.l
      கருச்சிதைவு (Dilatationl& Curatage) சிகிச்சைக்குப் பின் பெல்லடோனா 30, ஆர்னிகா 30, சபீனா 30 (குறிகளுக்கேற்ப) 4 மணி நேரத்திற்கு ஒரு வேளை வீதம் சில நாள் தேவைப்படும்.
 மூலம் அறுவைச் சிகிச்சைக்கு முன்னும், செய்த பின்னும் ஸ்டாபிசாக்ரியா 30 அல்லது ஏஸ்குலஸ் 30 பயன்படும்.l
      பௌந்திரம் அறுவைக்குப் பின்னர் காலிபாஸ் 30 பயன்படும்.l
      அறுவைச்சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின் (HYSTERECTOMY) காஸ்டிகம் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30தினம் 4 வேளை வீதம் சில தினங்கள் கொடுக்கவேண்டும்.l
      அசுத்த ரத்தக் குழாய் புடைப்பைச் சீர்படுத்தும் (VARICOSE VEINS) அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் லேடம்பால் 30 பயன்படும்.l
      மார்பகக் கவர்ச்சிக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பெண்களுக்கு சிகிச்சைக்குப் பின் பெல்லிஸ் பெரன்னிஸ் 30 தினம் 3 வேளை சில தினங்கள் கொடுக்கலாம்.l
      பொதுவாக பிளாஸ்டிக் சர்ஜரிக்கு வெளி உபயோகமாக காலண்டுலா தாய்த் திரவத்தையும், உள் உபயோகமாக ஆர்னிகாவும் பயன்படுத்தலம்.l
      கருக் கலைப்பைத் தொடர்ந்து இக்னேஷியா பயன்படும்.l
      கண் அறுவைச் சிகிச்சைக்குப் பின் லேடம்பால் 30 4 மணி நேரத்திற்கு 1 வேளை வீதம் 3 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.l
      சுக்கிலச் சுரப்பியில் (PROSTATE GLAND)அறுவைச் சிகிச்சை நடைபெற்ற பின்      ஸ்டாபிசாக்ரியா 30 பயன்படுத்தலாம்.l
       அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஸ்டாபிசாக்ரியா 30 அல்லது லேடம்பால் 30 தினம் 4 வேளை கொடுக்கலாம்.
      அறுவைச் சிகிச்சைக்குப் பின் சில காலம் கழித்துத் தழும்புள்ள இடத்தில் வலி ஏற்பட்டால் ஸ்டாபிசாக்ரியா பயன்படும்.l
      அறுவைச் சிகிச்சையால் ஏற்பட்ட தழும்பு(SCARRINGl& ADHESIONS) மறைய தயோசினமினம் தாய்த் திரவத்தையும் காலண்டுலா தாய்த் திரவத்தையும் வெளிப்பூச்சாக தினம் 1 வேளை சிலவாரம் அல்லது சில மாதம் பயன்படுத்த வேண்டியிருக்கும். கிராபைட்டிஸ் 30 வாரம் 1 வேளை மட்டும் சாப்பிட      வேண்டும்.
      அறுவைச் சிகிச்சைக்குப் பின் சீழ்கட்டிக் கொண்டு வலியும் சுரமும் ஏற்பட்டால் பைரோஜின், பாப்டீசியா, ரஸ்டாக்ஸ் ஆகிய மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.l
      அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய மயக்க மருந்தின் விளைவுகளைப் போக்க அசிடிக் ஆசிட், மயக்க மருந்தினால் ஏற்படும்l
       வாந்தியைக் கட்டுப்படுத்த சாமோமில்லா போன்ற மருந்துகள் பயன்படும்.
     பித்தப்பையில் நடைபெற்ற அறுவைச்  சிகிச்சைக்குப் பின் லைகோபோடியம் 30 பயன்படும்.l
      அடிவயிற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் உப்புசம் (FLATULANCE) ஏற்பட்டால் சைனா அல்லது லைகோபோடியம் முழு நிவாரணமளிக்கும். l
      தையல் போட்ட இடம் நோக்கி சுற்றியுள்ள தோல் இழுக்கப்பட்டிருந்தால் காலிபாஸ் கொடுக்கலாம்.l
       அப்பெண்டிசிடிஸ் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ரஸ்டாக்ஸ் 30 தினம் 3 வேளை தரலாம்.
      அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் நடந்த பிறகு அல்லதுlகுழந்தை பிறக்கும் வழியை இலகுவாக்க செய்யப்படும் சிறிய அறுவைக்குப் பிறகு பெல்லிஸ் பெரனிஸ் 30 அல்லது ஸ்டாபிசாக்ரியா 30 தினம் 4 வேளை சில நாள் கொடுக்கலாம்.
 துப்பாக்கி ரவைகள் துளைத்த பின் அல்லது கத்திக்குத்து ஏற்பட்ட பின் நடைபெறும்
      தையல் பிரித்தபின் கருநிறம் தெரிந்தால், சதைகளில் வலி, பலவீனம் காணப்பட்டால் சல்ப்யூரிக் ஆசிட் கொடுக்கலாம்.l
      அறுவை மருத்துவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியுடன், நெற்றியில் குளிர்ந்த வியர்வை, வாந்தி, வெளுத்த முகம், கை கால்களில், பிடிப்பு வலி போன்ற குறிகள் இருப்பின் வெராட்ரம் ஆல்பம் பயன்படும்.l
      அறுவைச் சிகிச்சை முடிந்த பின் இரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டு, உடல் வெப்பமும் குறைந்தால் காம்போரா குணப்படுத்தும்.l
அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுநீர் தடைபட்டால் காஸ்டிகம் கொடுக்கலாம்.
      அறுவைச் சிகிச்சை மூலம் பற்களை அகற்றுவதற்கு முன் ஆர்னிகா பயன்படுத்தலாம். பற்களை அகற்றிய பின்னர் அதிர்ச்சிமற்றும் ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த ஆர்னிகா, பெர்ரம் பாஸ், ஹைபரிகம், பாஸ்பரஸ் பயன்படும். ஆனால், தாடை வலி, நரம்பு வலி ஏற்பட்டு நீடிக்குமானால் ‘ஹெக்லலாவா’ அல்லது ‘ஹைபரிகம் 200’ நல்ல பலனளிக்கும்.l
      டான்சில் மற்றும் அடினாய்டு அறுவைச் சிகிச்சையைத் (TONSILLECTOMYl& ADENOIDECTOMY) தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு 1 வேளை வீதம் ரஸ்டாக்ஸ் 30 சில நாட்கள் சாப்பிடுவது நல்லது.
      அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்து அடிக்கடி வாயு உற்பத்தியாவதும் வெளியேறாமல் இருப்பதும், வயிற்றுத் தொந்தரவுடன் மலச்சிக்கலும் ஏற்படுமாயின் ‘ரபேனஸ்’ நன்மை செய்யும்.l
      அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து கடுமையான வாந்தி, குமட்டல் ஏற்படக்கூடும். குளிர்நீர், பானம் அருந்த வேண்டும்     என்ற விருப்பமிருக்கும். ‘பாஸ்பரஸ்’ அளித்தால் நலம் கிடைக்கும். தவிரவும் நக்ஸ்வாமிகா, இபிகாக், ஆர்சனிகம் ஆல்பம் போன்ற      மருந்துகளும் குறிகளுக்கேற்பப் பயன்படும். பொதுவாக, வயிற்றுப் பகுதி அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக பாஸ்பரஸ் கொடுத்தால், வாந்தி மற்றும் இதர பின் விளைவுகள் ஏற்படாது.l
 அறுவைச்சிகிச்சைக்குப் பின் குடல் அடைப்பு ஏற்பட்டால் ஓபியம் பயன்படும்.l
      அறுவைச் சிகிச்சை செய்த இடத்திலுள்ள காயத்திற்கு (SURGICAL WOUND) வெளிப் பூச்சாக காலண்டுலா தாய்த் திரவமும், ஹைபரிகம் தாய்த் திரவமும் உபயோகிக்கலாம். அந்தக் காயத்தில் சீழ் ஏற்பட்டால் ஹீப்பர்சல்ப் சீழை அகற்றிக் காயத்தை விரைவில் குணமாக்கும்.l
       (குறிப்பு : சதைக்குள் சென்ற துரும்பு, கண்ணா டித்துண்டு,வேறு பொருட்களை வெளியேற்றும் சக்தி ஹீப்பர்சல்ப் மருந்துக்கு உண்டு. அதே போல (SURGICAL STITCHES) அறுவைச் சிகிச்சைத் தையலையும் வெளித்தள்ளும் என்பதால் தையல் பிரிக்கும் வரை ஹீப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்)
      அறுவைச்சிகிச்சைக் காயம் நீலம் பாரித்திருந்தால் லாச்சஸிஸ் அல்லது கன் பவுடர் பயனளிக்கும். அக்காயத்தில் அதிக எரிச்சல் ஏற்படுமாயின் சல்பர் குணமளிக்கும்.l
      கண்பொறை (CATARACT) அறுவைச் சிகிச்சைக்குப் பின் பார்வை மங்கல் ஏற்பட்டால் செனேகா பயன்படும்.  l

சிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி

நெருப்பெனப் பரவும் நோய்:
இன்றைய உலகில் அதிவேகமாகப் பரவுவது தகவல் துறை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல....நோய்களும்தான். மனித குலம் சந்தித்த எண்ணற்ற இயற்கைச் சீற்றங்கள், நோய் தாக்குதகள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் சிக்குன்குனியா சுரம்.
பொதுவாக காய்ச்சலை நோயாகக் கருத வேண்டியது இல்லை. உடலின் உள்ளிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற நோயெதிர்ப்பு ஆற்றல் நடத்தும் போராட்டத்தின் வெளிப்பாடே உஷ்ண அதிகரிப்பு. காய்ச்சல் நமது நண்பனைப் போன்றது. சாதாரண சுர நிலைகளில் மருந்தில்லாமலேயே நலம் பெறலாம். அல்லது நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு ஆதரவான எளிய ஹோமியோ சிகிச்சை மூலம் நலம் பெறலாம்.
சிக்குன் குனியா சுரம் போன்ற தொற்று நோய்சுரங்களில் மருந்தின்றி நலம் பெற வாய்ப்பில்லை. இந்நோயில் அலட்சியம் காரணமாக அல்லது ஆங்கில மருத்துவம் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளம்.
சிக்குன் குனியாவின் சரித்திரம்:
1952, 1953ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள டான்சானியாவில் சிக்குன்குனியா முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. டான்சானியா மொழியில் முன் வளையச் செய்யக்கூடிய, முடக்கிப் போடக் கூடிய என்ற பொருளில் இந்நோய் பேசப்பட்டு, இன்றைய மனிதனை குரங்கிலிருந்து தோன்றிய ஆதிமனிதன் போலக் கூனி நடக்கச் செய்கிற அல்லது நடக்கக் கூட முடியாமல் முடக்கிப் போடுகிற காய்ச்சல் என்பதால் இதனை முடக்குக் காய்ச்சல் எனலாம்.
1963ல் முதன் முதலில் இந்தியாவில், கல்கத்தாவில் சிக்குன் குனியா பரவியது. பின்னர் 121 மாவட்டங்களில் பரவி பல லட்சம் மக்களைத் தாக்கியது. 1964ல் சென்னையில் பரவிய போது சுமார் 4,00,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1971ல் இந்தியாவில் மீண்டும் இந்நோய் வலம் வந்தது. 1973ல் மகாராஷ்டிர மாநிலத்தைக் கடுமையாகத் தாக்கியது. 2005ஆம் ஆண்டின் இறுதி மாதங்களிலும், 2006ம் ஆண்டு துவக்க மாதங்களிலும் இந்தியா முழுவதும் சிக்குன்குனியா ஆக்ரமித்தது. 2007-ல் வடக்கு இத்தாலி, சிங்கப்பூர், இந்தோனேசியா, தைவான் போன்ற நாடுகளில் சிக்குன் குனியாவின் தீவிரத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
சிக்குன்குனியா இன்றைய முக்கியப் பொதுப் பிரச்சனை :
அரசியல் காரணங்களால் ஒரு கட்டம் வரை இது சிக்குன் குனியா இல்லை என்றும் சாதாரண பருவ மழைக்கால வைரஸ் சுரம் என்றும் கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகின்றன அரசுகள். சாதாரண ஏழை எளிய மக்கள், சிக்குன்குனியா நோயின் அனைத்துக் குறிகளோடு பாதிக்கப் பட்டிருந்தாலும் அவரவர் சொந்தச் செலவில் இந்நோயினை உறுதி செய்து கொள்ளும் பரிசோதனை செய்து கொள்ள வசதியும்,வழியுமில்லை. மேலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் பலன் இருக்கிறதோ இல்லையோ, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முடக்குக் காய்ச்சல் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கடந்த 2006ம் ஆண்டு சிக்குன் குனியாவிற்கு ஆங்கிலச் சிகிச்சை பார்த்து.....,அரைகுறையாய் நிவாரணம் பெற்று இப்போது மீண்டும் நோய் தொற்றி வேதனையோடு வருபவர்களும் இக் கூட்டத்தில் அடங்குவர்.
சிக்குன்குனியாவுக்கு காரணங்கள் என்ன?
இது ஒருவகை வைரஸ் சுரம் குறிப்பிட்ட காலம் இருந்த பின் தானாகவே குறைந்து மறைந்து விடும் நோய். மரணத்தை ஏற்படுத்தாது என்று இந்நோய் பற்றி விவரிக்கப்படுகிறது. இந்நோய் உண்டாக்கும் கிருமி ஆல்பா வைரஸ் அல்லது சிக் வைரஸ் என்றும் இதனைப் பரப்புவது இருவிதக் கொசுக்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அவை 1. ஏடியஸ் ஏஜிப்டி ,2. ஏடியஸ்ஆல்போபிக்டி. இந்தக் கொசுக்களே, சிக்குன்குனியா மற்றும் டெங்கு, மஞ்சள் சுரம் போன்ற நோய்கள் பரவுவற்கு முக்கியக் கடத்திகளாகப் பணியாற்றுகின்றன.
கொசு ஒழிப்பின் பெயரால் நடந்தவை என்ன?
1950களில் நம் நாட்டில் மலேரியாக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி ஏராளமானோர் பலியானபோது கொசு ஒழிப்பு ஒன்றுதான் இறுதித் தீர்வாகக் கருதியது அரசு. தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அது கொசுக்களுக்கு எதிரான யுத்தமாக பிரகடனப்படுத்தப்பட்டது.1953ல் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரே மருந்து டி.டி.டி. இம்மருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்ட பின்னரும் முழுமை யான வெற்றி பெறமுடியவில்லை.
கொசுக்களின் மரபணு மாற்றம் காரணமாக டிடிடிக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பெருகி இம்மருந்து வீரியமற்றதாகி விட்டது. பின்பு 1958, 1977ம் ஆண்டுகளில் தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. லிண்டேன், மாலத்தியான் எனும் மருந்துகள் தெளிக்கப்பட்டன. அதுவும் தோல்வியைத் தழுவின. மேலும் பைரத்தின் என்ற புகை மருந்து, கொசு லார்வாக்களை அழிக்கும் அபேட் என்ற நுண்ணுயிரி மருந்தும் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கு குறைவான நிதி ஒதுக்கீடு, ஊராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்கள் போன்ற பல காரணங்களோடு இம்மருந்துகளின் பயனற்ற தன்மையும் இணைந்து கொசு ஒழிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.
சுற்றுச் சூழல் சீர்குலைவு:
கொசு ஒழிப்பிற்கான முயற்சிகளும், கருவிகளும், மருந்துகளும் மாறிக் கொண்டே வந்தாலும் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை. மாறாக இதற்கான அனைத்து மருந்துகளும் நீர், நிலம், காற்று, சூழல் அனைத்தையும் நச்சுப்படுத்துகின்றன. இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்த்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசு ஒழிப்பு மருந்துகள் தான் காரணம் என ஓர் ஆய்வு தரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. எனவே சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் உலகளவில் பயன்படுத்தப்படும் வேறு கருவிகள் மற்றும் நடைமுறைகளை அறிந்து இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.
கொசு கடித்த பின் தோன்றும் முக்கிய அறிகுறிகள் சில:
ஏடியஸ் கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் சில பல நோய்க்குறிகள் தோன்றுகின்றன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் போன்றோரை இந்நோய் தாக்கினால் அதிகளவு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக சிக்குன் குனியா சுரத்தில் காணப்படும் முக்கியக் குறிகள்:
1. கடுமையான காய்ச்சல். உடல் உஷ்ணம் திடீரென 102 -104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கிறது, இரண்டு முதல் ஏழு நாட்கள் நீடிக்கிறது.
2. கடுமையான தலைவலியும், உடல்வலியும் ஏற்படுகின்றன. உடல் வலிகள் தசைவலிகளாகவும், முதுகுவலிகளாகவும், மூட்டு வலிகளாகவும் அமைகின்றன.
3. அரிப்பும், எரிச்சலும், கொண்ட தோல் சினைப்புகள், நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூக்கில் சிவப்புத் திட்டுகளும், உதட்டில் கருநிற புள்ளிகளும், முகம் மற்றும் வயிறு, கை கால்களில் கருநிறத் திட்டுகளும் ரத்தத் திட்டுகளும், சிறு பொருக்குகளும் தோன்றுகின்றன.
4. கண்படல அழற்சியும், சிறிது ஒளிக் கூச்சமும் ஏற்படுகின்றன.
5. குமட்டல், வாந்தி சில சமயம் சிலருக்கு வயிற்றுப் போக்கு
6. தூக்கமின்மை, அமைதியின்மை
7. சிலருக்கு இரத்தக் கசிவு அறிகுறிகள், குறிப்பாக மூக்கிலிருந்து, ஈறுகளில் இருந்து கசிவு. தொற்று காரணமாக (பிளாட்டிலெட்ஸ்) தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைவதால் இந்நிலை ஏற்படுகிறது.
8. தற்காலிக ஞாபக மறதி
9. கடும் சோர்வு, பலவீனம், களைப்பு
10. இந்நோயால் நேரடியான மரண பாதிப்பு இல்லை எனினும் ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்புள்ளவர்களுக்கு சிக்குன்குனியா தாக்கினால் மரண ஆபத்து உண்டு. மேலும் இச்சுரத்தில் திடீர் உஷ்ண அதிகரிப்பில் நீரிழப்பு ஏற்பட்டு சிறுநீரகக் கோளாறுகளும், சீரண மண்டலக் கோளாறுகளும் ஏற்பட்டு மிகவும் ஆபத்தாக முடிகிறது. காய்ச்சலில் உடலின் நீர்ச்சத்து ஆவியாகி இழக்கப்படுவதால் சோடியம்,பொட்டாசியம் இன்னும் பிற உப்பு அளவுகளிலும் மாறுபாடு ஏற்பட்டு உப்புச் சமன்பாடு சீர்குலைகிறது. இப்படி வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சிக்கல்கள் (செகண்டரி காம்ப்ளிகேஷன்) ஏற்படுகிறது.
ஆங்கில மருத்துவத்தில் ஒருமுறை சிக்குன்குனியா தாக்கினால் உடலுக்குள் நோயெதிர்ப்பு பொருள் உண்டாகி, மீண்டும் அவருக்கு சிக்குன்குனியா வராது என்று விளக்கமளிக்கிறது. ஆனால் நடைமுறையில் கடந்த 2006ல் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட பலர் அந்நோய் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மீண்டும் தாக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இதனால் நோயெதிர்ப்பு பொருளான இம்மியுனோகுளோபிலின்-ஜி என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.
சிக்குன்குனியாவிற்கு ஹோமியோபதியில் தீர்வு:
ஆங்கில மருத்துவத்தில் உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் கடுமையான உடலியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. இது விவாதத்திற்கு உரியது.
ஹோமியோபதிக் கோட்பாட்டின்படி எந்த ஒரு நோய் அல்லது தொற்று நோய்க்கும் கிருமிகள் காரணம் என்று கூறுவதில்லை. அதனால் கிருமி ஒழிப்பு மட்டுமே பணியாகக் கொண்டவையல்ல ஹோமியோபதி மருந்துகள். ஹோமியோபதி தத்துவத்தின்படி தொற்றுநோய் பரவும் சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த நோய் தொற்றாத மக்களுக்கும், நோய் பாதிப்பு அடைந்தவர்களின் ஒரேமாதிரி அறிகுறிகளையும்,ஒரே தனித்துவக் குறிகளையும், மேலோங்கிய குறிகளின் அடிப்படையிலும் மருந்து தேர்வு செய்து, அது தடுப்பு மருந்தாக அளிக்கப்படுகிறது.
வரலாறு நெடுகிலும், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ஹோமியோபதி வெற்றிகரமாக உதவியுள்ளன. தற்போது தமிழகத்தில் பரவிவரும் சிக்குன்குனியாவிற்கும் ஹோமியோ மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த தடுப்பாற்றலைப் பெற முடியும்.
ஆர்ஸ்.ஆல்ப்., ரஸ்டாக்ஸ்., யூப.பெர்ப்., ஜெல்சி., ஆர்னிகா., ரூடா., கோல்சிகம்., பெல்., பிரையோ., சைனா., பாப்டீ., பைரோ., நக்ஸ்., லேடம்.,பாலிபோரஸ்பினிகோலா., காலிமூர்., லெசிதின்., சீட்ரான்., இன்புளூய., அக்டியா ஸ்பிகேட்டா போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் மூலமாக மட்டுமே சிக்குன்குனியாவை முற்றிலும் முறியடித்து ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த முடியும்.
(ஹோமியோமுரசு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

ஹோமியோபதி ஒருபோதும் தோற்பதில்லை

இந்தியாவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. இந்தியாவுடன் உலகளவில் பெரிய போட்டி நாடாகத் திகழ்வது சீனா. ஆனால் இந்த ஹோமியோபதி முறை சீனாவில் இல்லை. அதனால், போட்டியற்ற வெற்றியோட்டமாக இந்தியா இதில் முன்னேற வாய்ப்பு உள்ளது. 10 ஆண்டுகளில் ஹோமியோ மருத்துவத்தில் உலகின் ஆராய்ச்சி மையமாக இந்தியா திகழப் போகிறது என உலக மருத்துவ நிபுணர்கள் கணிக் கின்றனர் என்றொரு செய்திக் குறிப்பு இதழொன் றில் வெளியாகியுள்ளது.
                ஹோமியோபதி தோன்றிய காலம் முதல் இன்றுவரை சந்தித்த தடைகளும், அவதூறுகளும்,  எதிர்பிரச்சாரங்களும் வேறு எந்த மருத்துவ முறைகளும் சந்திக் காதவை. இன்றளவிலும் ஹோமியோபதி மீதான பொய்களும் கற்பனைக் குற்றச்சாட்டுகளும் எதிர் முகாமிலிருந்து (அலோ பதி துறையினரிடமிருந்து) அள்ளி வீசப்படுகின்றன. இத்தகைய தரங்குறைந்த, கீழ்த்தரமான முயற்சிகள் மூலம் ஹோமியோபதியை நோக்கி வந்து கொண்டிருக்கும் உலக மக்களைத் தடுத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். தடைகளை கடந்து பீடுநடைபோடுகிறது ஹோமியோபதி மருத்துவம். இந்த நூற்றாண்டு மாற்று மருத்துவங்களின் மறுமலர்ச்சி நூற்றாண்டாக அமையப் போகிறது; மாற்று மருத்துவங்களில் முதன்மை மருத்துவமாகத் திகழும் ஹோமியோபதி மருத்துவத்தின் மறுமலர்ச்சி நூற்றாண்டாக அமையப் போகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், மருத்துவமனைகளுக்கும் அவசரச் சிகிச்சை தேவைப்படுகிறது. கால்நூற்றாண்டாக முன்பு வரை குடும்பத்திற்கு நெருக்கமான வர்களைப் போல இருந்தவர்கள் மருத்துவர்கள். நோயாளியையும் அவரது குடும்பத்தின் பொருளா தாரத்தையும், உறவுச்சிக்கல்களையும் உணவுப் பழக்கங்களையும் தெரிந்திருந்தவர் இன்று மருத்து வம் என்பது சூழ்ச்சிகளும் விபரீதங்களும் மலிந்த வணிகமாக மாற்றப்பட்டுள்ளது. சேவை, கருணை, மனிதநேயம் மருத்துவத் துறையின் எந்த மூலை முடுக்கிலும் கூட காணப்படவில்லை. முறையான, மனசாட்சியுள்ள மருத்துவர்களும், ஆசியர்களும் இல்லாத ஒரு சமுதாயம் எத்தனை வளங்கள் குவிந்திருந்தாலும் நிலைத்து நிற்க முடியுமா?
       இந்தப் பின்னணியில் ஹோமியோபதியர் கள் முன் மகத்தான மக்கள்நலக் கடமைகள் காத்தி ருக்கின்றன. நோயை அறிவது மட்டுமல்ல: நோயுற்ற மனிதனைப் புரிந்து கொள்வதே மருத்துவத்தின் மையப் பணி. நோயாளரின் வாழ்க்கை, இருப்பு, தேவை, சூழல்... என எல்லாவற்றையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் போது தான் மருத்துவம் முழுமை பெறுகிறது. இத்தகுதிகள் ஹோமியோ பதி மருத்துவத்திற்கு நூறுசதம் உள்ளது.
‘மருத்துவம்’, ‘மருத்துவன்’, ‘மருந்து’, ‘நோய்’, ‘நோயாளி’, ‘நலம்’ போன்ற சொற்களின் உண்மை யான பொருள் அறிந்து, உலகுக்கு உணர்த்தி, நடைமுறைப்படுத்திய மருத்துவம் ஹோமியோபதி.                                                                                                    ஹோமியோபதி மருந்துகளில் என்ன உள்ளது என்பதை ஹோமியோ சிகிச்சை பெறு வோரில் பலரும் கூட அறியாமல் இருக்கின் றனர். அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக் குமே இது தெரியப்படுத்த பெருமுயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். வீரியப்படுத்துதல் என்ற முறையில் மூலம் தாவரங்கள், கனிமங்கள் உட்பட எண்ணற்ற பொருள்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றல் ஹோமியோபதி மருந்துகளுக்கு மாற்றப் பட்டுள்ளது. நோயுற்ற நபருக்கு எந்த வகை ஆற்றல் தேவை என்பதை அவரது தனித்தன்மை களிலிருந்தும், நோய்க்குறிகளிலிருந்தும் அறிந்து ஹோமியோபதி மருந்துகள் மூலம் அது தரப்படு கிறது. மருந்தினுள் பொதிந்துள்ள ஆற்றல் நோயுற்ற நபரின் ஜீவ ஆற்றலை மெருகேற்றி, நோயுடன் புதிய எழுச்சியுடன் போர்நடத்தி நலம் அளிக்கிறது.
       ஹோமியோபதி மருத்துவம் முழுமை யானது; ஹோமியோபதியர் குறையுள்ளவர். ஹோமியோபதி ஒருபோதும் தோற்பதில்லை ; ஆனால் ஹோமியோபதி மருத்துவர் தோற்கக் கூடும். இது ஒன்றும் புரியாத புதிரல்ல. அனுமா னங்கள் அடிப் படையிலோ, ஆங்கில மருத்துவ பாணியிலோ, மேலோட்டமான ஆய்வு அடிப் படையிலோ ஹோமியோபதி மருந்து தருபவர்கள் ‘முழுநலம்’ மீட்பது சிரமம். ஆழ்ந்த படிப்பும், பயிற்சியும், ஹோமியோ மேதைகளின் அனுபவ ஒளியைப் பருகி வழிநடப்பதும் வெற்றிக்கு ஆதாரங்கள்.

No comments:

Post a Comment