ஒரே பக்கத்தில் பல இணையதளங்களை காண எளிய வழி இணையத்தில் நுழைந்த்துமே வரிசையாக பல இனையதளங்களை திறந்து வைத்து கொண்டு அவற்றில் உலாவுவது தான் பலருக்கு வழக்கமாக இருக்கிறது.இப்படி ஒரே நேரத்தில் பல் இணையதளங்களை பார்ப்பதை எளிதாக்கும் வசதிகளும் அறிமுகமாகி கொண்டேயிருக்கின்றன. சில காலங்களுக்கு முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனி தனி விண்டோவை திறந்து கொள்ள வேண்டும்.ஒரு தளத்தில் இருந்து இன்னொரு மற்றொரு தளத்திற்கு செல்ல ஒவ்வொரு விண்டோவாக தாவிக்கொண்டிருக்க வேண்டும். இதற்கு பதிலாக விண்டோவை விட்டு வெளியேறாமலேயே அதிலேயே ஒவ்வொரு பத்தியாக புதிய தளங்களை திறந்து கொள்ளும் வசதி அறிமுகமானது. இப்படி பத்தி பத்தியாக தளங்களை பார்ப்பதை விட எளிய வழி தேவைப்பட்டால் ஒரே பக்கத்தினை பல்வேரு கட்டங்களாக பிரித்து கொண்டு ஒவ்வொரு கட்டதிலும் ஒரு இணையதளத்தை திறந்து கொள்ளும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. இந்த மூறையில் உள்ள ஒரே சங்கடம் இணையதளங்களுக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கும் என்பது தான்.இந்த குறை இல்லாமல் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களை சுலபமாக காண விரும்பினால் சைட்பவுச் இணையதளம் அதற்கான வழி காட்டுகிறது. இந்த தளம் இணையவாசிகள் பார்க்க விரும்பும் இணையதளங்களை அப்படியே ஒரு கட்டாக கட்டி ஒரே இணையமுகவரியாக மாற்றித்தருகிறது.இந்த இணையகட்டில் உள்ள இணையதளங்களை இணையவாசிகள் சுலபமாக பார்வையிடலாம். இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள எந்த எந்த இனையதளங்களை பார்வையிட விரும்புகின்றனறோ அவற்றின் முகவரியை இந்த தளத்தில் சமர்பிக்க வேன்டும்.இவ்வாறு மூன்று முகவரிகளை சமர்பிப்தற்கான 3 கட்டங்கள் தான் இருந்தாலும் ,தேவை என்றால் மேலு கட்டங்களை கூட்டி கொண்டு மேலும் முகவரிகளை சமர்பிக்கலாம். முகவரிகளை சமர்பித்த பின் அவற்றை பார்வையிடுவதற்கான முகவரியை உருவாகி தருகிறது.அந்த முகவரியில் வரிசையாக சம்ர்பிக்கப்பட்ட தளங்கலின் முகவரி இருக்கும்.எந்த தளம் தேவையோ அதனை கிளிக் செய்தால் அந்த தளம் திரையில் தோன்றும்.அடுத்த தளத்தை பார்க்க வேண்டும் என்றால் அந்த தலத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும்.அடுத்த தளத்தை பார்க்க அதன் முகவரியை கிளிக் செய்ய வேண்டும். மீண்டும் முதல் தளத்தையே காண விரும்பினால் மீண்டும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.எந்த தளத்தை கிளிக் செய்கிறோமோ அது மட்டும் தோன்றும் மற தளங்களுக்கான இணைப்பு அதே பக்கத்தில் மேல் பக்கதிலோ அல்லது கிழ் பக்கத்திலோ இருந்து கொண்டு இருக்கும். ஆக, இணையவாசிகள் தாங்கள் இருக்கும் இணைய பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே விரும்பும் இணையதளங்களை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம். தினமும் பல்வேறு தளங்களில் உலா வருபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். இந்த தளம் உருவாகி தரும் முகவரியை அப்படியே நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள்லாம்.இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்களும் அதே இணையதளங்களை பார்க்க முடியும்.புதிய தளங்களை பகிர்ந்து கொள்ளவோ இணைய தளங்கள் சார்ந்த உரையாடலில் ஈடுபடவோ இது உதவியாக இருக்கும். இணையதள முகவரி;http://www.sitepouch.com/
No comments:
Post a Comment