மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam
- மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam
வல்லாரை மூலிகை
சிறு செருப்படை மூலிகை
வெள்ளை கரிசலாங்கண்ணி மூலிகை
மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam
பஞ்சபூத சக்திகளின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் மனித உடலில் நரை, திரை, மூப்புஎன்னும் முப்பெரும் பிணிகளை அணுக விடாமல் காத்து என்றும் இளமையாய் வாழ வைக்கும் அதிசய மருந்துகள் தான்காயகற்ப மருந்துகள் ஆகும்.
இவற்றில் மூலிகைகளைக்கொண்டு மிக எளிய முறையில்செய்து உண்ணக் கூடிய ஒரு காயகற்ப மருந்தைப் பற்றி அகத்தியர் பெருமான் தனது நூலில் விளக்கமளிக்கின்றார்.
போனபின்பு யின்னுமொரு கற்பங் கேளு
புகழான திருமேனி சிறுசெருப் படையும்
மானகருங் கரிசாலை மூன்றும் வேறாய்
அடைவாகச் சூரணித்துச் சமனாய் சேர்த்து
கானில் வாழ் கற்கண்டு நாலத் தொன்று
கலந்து வெருகடி தேனில் நெய்யிற் கொள்ளு
மானமுட னிருகாலு மண்டலந்தான் கொள்ள
மந்தமதி மந்தபுத்தி மயக்கம் போமே
மயக்கம் போம் லோகமெல்லாம் வசியமாகும்
மனமுண்டாங் குணமுண்டா மயக்கம் போகும்
மயக்கபித்தம் சோகை யெரி பித்த நீர்க்கட்டு
மலபந்தம் யாவற்றும் நீங்கிப் போகும்
மயக்கு பித்த வெறிமூர்ச்சை மாறுமாறும்
மூதறிவா மேனிகண்கள் சிவப்பு மாகும்
தியக்கம்போம் காமப்பால் மிகவுண்டாகும்
ஸ்திரீகளுட வாசனையில் சேராமல் நில்லே
மேற்கண்ட பாடல் விளக்கம் :
வல்லாரை, சிறுசெருப்படை, வெள்ளை கரிசலாங்கண்ணி இம் மூன்றும் வெவ்வேறாய் தேவையான அளவு சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து மூன்றும் சம அளவில்ஒன்று சேர்த்து கலந்து இந்த எடையில் கால் பங்கு கல்கண்டு பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
காலை உணவிற்கு பின்பு இந்த மூன்றுமூலிகை சூரணம் வெருகடிஅளவு எடுத்து தேனில் குழைத்துஉண்ணவும்.இதே போல் இரவு உணவிற்கு பின்பு இதே போல் தேனில் குழைத்து உண்ணவும்.இந்த முறையில் 12 - நாட்கள் உண்ணவும்.
இதன் பின்பு 12 - நாட்களுக்கு இதே மூன்று மூலிகை சூரணத்தை காலை - மாலை நெய்யில் குழைத்துஉண்ணவும்.
[வெருகடி என்பது - ஐந்து விரல் கூட்டி எடுப்பது - பூனையின் பாதம் அளவு ]
இதனால் தீரும் நோய்கள் விபரம் :
அறிவு மந்தம், ஞாபக சக்தி குறைவு, பித்த மயக்கம், இரத்த சோகை, கைகால் எரிச்சல், நீர்க்கட்டு, மலச்சிக்கல்,பித்தவெறி, மூர்ச்சை இவைகள் நீங்கும்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N
cell : 9865430235 - 8695455549
No comments:
Post a Comment