Wednesday, 17 December 2014

தேங்க்யூவும் சொல்லலாம்!!!

தேங்க்யூவும் சொல்லலாம்.........
பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ள பேஸ்புக் இந்த நட்பை கொண்டாட உதவும் புதிய வழிகளை உருவாக்கித்தர முயன்று வருவதாகவு குறிப்பிட்டுள்ளது . இப்படி உருவாகி இருக்கும் சமீபத்திய வசதி தான் சே தேங்ஸ்.
இதன் மூலம் நண்பர்களுக்கோ சக ஊழியருக்கோ பேஸ்புக் மூலம் ஒரு தேங்யூ வீடியோவை அனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கலாம். ஒருவர் முக்கியமாக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீடியோவை உருவாக்கி அனுப்பலாம்.
இந்த வீடியோவை எப்படி உருவாக்க,
பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நன்றி சொல்ல உள்ள பேஸ்புக் நண்பரை தேர்வு செய்தால் உடனே பேஸ்புக்கே உங்கள் டைம்லைனில் இருந்து ஒரு வீடியோவை உருவாக்கித்தரும். அந்த வீடியோவில் உங்கள் நட்பை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் பதிவுகளும் இருக்கும். பேஸ்புக் பரிந்துரைக்கும் வீடியோவை உங்கள் விருப்பம் போல திருத்தி அமைக்கலாம். பொருத்தமான தீமை தேர்வு செய்து அதில் இடம் பெறும் புகைப்ப்டங்களையும் பதிவுகளையும் எடிட் செய்யலாம். எல்லாம் தயாரான பிறகு அதனுடன் நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதி தனிப்பட்ட டச்சுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த வீடியோ உங்கள் டைம்லைனில் தோன்றும் .அதில் உங்கள் நண்பரும் டேக் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் டைம்லைனிலும் தோன்றும். அடிப்படையில் , இந்த தேங்க்யூ வீடியோ வசதி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட லுக் பேக் வீடியோ தொகுப்பு வசதியின் இன்னொரு வடிவம் தான் என்று ஒரு கருத்து இருக்கிறது.
டைம்லைனில் தோன்றும் வீடியோ பொதுப்பார்வைக்கு வரும் போது எப்படி தனிப்படதாக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதோடு தேங்க்யூ வீடியோ பெற்றவர்கள் பதிலும் தேங்க்யூ வீடியோ அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவார்களா? என்றும் கேட்கப்படுகிறது.
பயனாளிகளுக்கு எப்படியோ பேஸ்புக்கிற்கு இந்த சேவை முக்கியம். சமீபத்தில் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்புடன் பேஸ்புக் போட்டி போடக்கூடிய அளவுக்கு அதன் வழியே வீடியோக்கள் பகிரப்படுவதாக செய்தி வெளியானது. பேஸ்புக் இந்த நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம்.
தேங்க்யூ வசதி பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகிறதா என்பதையும் அதைவிட முக்கியமாக பயனுள்ளதாக இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment