Sunday, 26 October 2014

மவுஸ்!!!

மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலை



எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களின் இயக்கத்திலும் மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலைகளை மேற்கொள்ளலாம். மவுஸினால் மட்டுமே சில வேலைகளை எளிதாகச் செய்ய முடியும் என்ற அளவிற்கு பல பார்மட்டிங் பணிகள், டெக்ஸ்ட் எடிட்டிங் வேலைகள் நிறைய உண்டு.

இங்கு எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் சில மவுஸ் பயன்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை பொதுவாகக் கீ போர்டின் உதவியுடன் பல நிலைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளாகவும் மவுஸ் மூலம் சில கிளிக்குகளில் மேற்கொள்ளக் கூடிய வேலையாகவும் இருப்பதனைக் காணலாம்.

வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும்.

அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.


இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.


வேர்டில் சில வகை டேட்டாக்களை அமைக்கையில் அவற்றில் சிலவற்றை மட்டும் நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஐந்து வரிகளில் எட்டாவது கேரக்டரிலிருந்து பன்னிரெண்டாம் கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.


மற்றவை எல்லாம் நாம் மேற்கொள்ள இருக்கும் வேலைக்குத் தேவையற்றவையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க கீ போர்டு அல்லது மவுஸ் மூலம் மேற்கொள்ள வேர்ட் தொகுப்பில் வசதி உள்ளது.


1. எந்த டேட்டா தொகுப்பினை (Block) ங்கள் தனியே எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறீர்களோ அந்தத் தொகுப்பின் இடது மூலைக்கு மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும்.


2. உடன் Ctrl+Shft+F8 என்ற கீகளை அழுத்தவும்.கீழாக ஸ்டேட்டஸ் பாரில் COL என்ற எழுத்துக்கள் காட்டப்படும்.


இனி மவுஸ் கர்சரை இழுத்து எந்த பிளாக்கினை நீங்கள் தனியே செலக்ட் செய்திட வேண்டுமோ அதனை அமைக்கலாம். நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் செலக்ட் செய்யப்படும். இவ்வாறு செலக்ட் செய்யப் பட்ட டெக்ஸ்ட்டை வழக்கமாக செலக்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் டினை எப்படியெல்லாம் மாற்றுகிறோமோ அதே போல மாற்றலாம்.

டெலீட் கீ அழுத்தினால் அந்த பிளாக் டெக்ஸ்ட் மட்டும் அழிந்து போகும். மேலே சொன்ன வழிக்கு மாற்று வழி ஒன்றும் உள்ளது. ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு மவுஸ் கர்சரை பிளாக் தொடங்கும் இடத்தில் வைத்து தேவையான டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்கலாம்.

மவுஸ் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும், தொடர்ந்து பல சொற்களைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த சொல்லில் கர்சரைக் கொண்டு சென்று பின் டபுள் கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்.

தொடர்ந்து இன்னும் கூடுதலாகச் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் டபுள் கிளிக் செய்தவுடன் அப்படியே தொடர்ந்து மவுஸை இழுத்தால் டெக்ஸ்ட் காப்பி ஆகும்.


ஒரு டெக்ஸ்ட் பகுதியை மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று எப்படி தேர்ந்தெடுப்பது என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து இடது மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் டெக்ஸ்ட் செலக்ட் ஆகும்.


இதைக் காட்டிலும் வேகமாக டெக்ஸ்ட் செலக்ட் ஆகும் வழி ஒன்று உள்ளது. எந்த இடத்திலிருந்து டெக்ஸ்ட் செலக்ஷன் ஆக வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று அமைக்கவும். அதன்பின் எதனையும் அழுத்தாமல் கர்சரை நகர்த்தவும்.

எங்கு இந்த செலக்ஷன் முடிய வேண்டுமோ அங்கு சென்று கர்சரை மீண்டும் அமைக்கவும். பின் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் இடது பட்டனில் கிளிக் செய்திடவும். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.


டாகுமெண்ட் தயார் செய்து பின் எடிட் செய்கையில் குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது வாக்கியங்கள் அதன் இடத்தில் இல்லாமல் இன்னொரு இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம்.

இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் கட் (இtணூடூ+ஙீ) செய்து அதன்பின் எந்த இடத்தில் அமைய வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை அமைத்து பேஸ்ட் (Ctrl +V) செய்திடலாம். இந்த வேலையினை வேறு எளிதான வழியில் மவுஸ் கர்சரைக் கொண்டு செய்திடலாம்.

முதலில் எந்த சொற்களை எடுத்து அமைக்க வேண்டுமோ அந்த சொற்களை ஹைலைட் செய்திடவும். பின் இவ்வாறு ஹைலைட் செய்து செலக்ட் செய்த டெக்ஸ்ட்டில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று மவுஸ் பட்டனைக் கிளிக் செய்தவாறு பிடித்துக் கொள்ளவும்.

இப்போது புள்ளிகளால் ஆன ஒரு கோடு தெரியும். இதனை இப்போது அப்படியே மவுஸ் கர்சரால் இழுத்துச் சென்று எந்த இடத்தில் செருக வேண்டுமோ அந்த இடத்தில் சென்று மவுஸ் பட்டனை விட்டுவிடவும். ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் நீங்கள் இலக்கு வைத்த இடத்தில் செருகப்பட்டு இடம் பிடித்திருக்கும்.


டாகுமெண்ட் வழக்கமாக 100% அளவில் திரையில் காட்டப்படும். சில காரணங்களுக்காக அதனைச் சுருக்கிப் பார்க்க விரும்புவோம். அப்போது மேலே மெனு பாரில் உள்ள கட்டத்தில் 100% என்பதனை 75% என மாற்றலாம். பெரிதாகத் தெரிய, ஸூம் இன் செய்திட வேண்டும் என்றால் இதனை 100க்கு மேலாக அதிகப்படுத்தலாம்.

இந்த ஸூம் செய்வதற்கு மவுஸ் மூலமாக இன்னொரு வழியும் உள்ளது. கர்சரை டாகுமெண்ட்டில் வைத்துக் கொண்டு கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அதில் உள்ள சிறிய வீலை முன்னே பின்னே நகர்த்தவும். ஒரு சிறிய நகர்த்தலுக்கு அது நகர்த்தப்படும் திசையைப் பொறுத்து 10% அதிகமாகும் அல்லது குறையும்.


டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம்.


உடனே இடது பக்கம் ரூலரில் இது போல செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்குமே! இடது பக்கம் ரூலரில் மேலே சுட்டிக் காட்டியது போல் செய்தால் பேஜ் செட் அப் பாக்ஸ் கிடைக்கும்.


மேலே தரப்பட்ட எதனையும் என் மவுஸ் மூலம் செய்ய முடியவில்லையே என்று யாரும் கவலைப் பட வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டரில் மவுஸின் இந்த செயல்பாடு செயல்படுத்தப்பட்டிருக்காது.

மவுஸ் மூலம் உங்கள் டெக்ஸ்ட்டை நகர்த்துவது,செலக்ட் செய்வது போன்ற செயல்களுக்கு அதனை அவ்வாறு இயக்கும் வகையில் செட் செய்திட வேண்டும். இதற்கு Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்.

பின் Edit டேப்பில் கிளிக் செய்திடவும்.பின் Drag and Drop Text Editing என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் இந்த டயலாக் பாக்ஸினை மூட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மவுஸ் டெக்ஸ்ட்டுடன் எளிதாக இயங்கும்.


வேர்ட் டிப்ஸ்


* சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம்.

எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.


*வேர்ட் தொகுப்பில் சொற்கள் எங்குள்ளது என்று கண்டறிய பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) கட்டளை நமக்கு நன்றாக உதவுகிறது. சொல் மட்டுமின்றி எந்த கேரக்டரையும் எங்குள்ளது என்று மிக எளிமையான வழியில் தேடி அதன் இடத்தில் இன்னொன்றை அமைக்கவும் வசதி தருகிறது.

ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால் இந்த பைண்ட் அன்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட் மேலாக அமர்ந்து கொண்டு நம்மை டாகுமெண்ட்டை முழுமையாகப் பார்க்க விடாமல் தடுக்கிறது. இவ்வாறு டயலாக் பாக்ஸ் நம் டாகுமெண்ட்டை மறைப்பதனை நீக்க ஒரு சுற்று வழி உள்ளது.

1. முதலில் வழக்கம் போல பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸை கண்ட்ரோல்+எப் (Ctrl+F) அழுத்தியோ அல்லது Edit மெனுவில் Find தேர்ந்தெடுத்தோ பெறவும். கண்டறிய வேண்டிய சொல்லை அமைத்து என்டர் தட்டினால் அந்த சொல் இருக்கும் முதல் இடத்தினை டாகுமெண்ட் காட்டும்.

2. இப்போது சொல் இருக்கும் இடத்தைக் காட்டிய பிறகும் அடுத்த இடங்களைக் காட்ட டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட்டை மறைத்தபடி நிற்கும். இப்போது கேன்சல் பட்டன் அழுத்தி அல்லது எஸ்கேப் பட்டனை அழுத்தி டயலாக் பாக்ஸினை மறையச் செய்திடவும்.

நீங்கள் தேடிய சொல் உள்ள அடுத்த அடுத்த இடத்தினை அறிய ஜஸ்ட் Shft+F4 அழுத்தவும். டயலாக் பாக்ஸ் இல்லாமலேயே நீங்கள் காண விரும்பும் சொல் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். Find Next அழுத்தினால் என்ன நடக்குமோ அதுவே நடத்தப்படும்.

* வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.


1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.


2.மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.


3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.


* அண்மையில் ஒரு வாசகர் தான் வேர்ட் டாகுமெண்ட்களில் பெயர்களை டைப் செய்து டேபிள் தயாரிப்பதாகவும், அதனை சார்ட் செய்திட அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று,

பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டுவதாகவும் எழுதி உள்ளார். இந்த பழக்கம் தேவையே இல்லை. வேர்ட் தொகுப்பிலேயே இந்த தகவல் வரிசைப்படுத்தும் வசதி உள்ளது.


வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம்.


வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl + U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.

ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl + Shft + W) கண்ட்ரோல்+ஷிப்ட்+டபிள்யு. வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும்.

என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள்.

அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

No comments:

Post a Comment