ஒரு நாள் ஒரு பூ சாப்பிடுங்க... டாக்டருக்கு பை பை சொல்லுங்க...! இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!பப்பாளி இலை ஒருமுறையாவது பழம் வந்த பப்பாளி மரத்தின் இலையை எடுத்து, அதனை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டி குளிர வைத்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்தத் தட்டுக்களின் அளவு தானாக அதிகரிக்கும்.
பப்பாளி இலை ஒருமுறையாவது பழம் வந்த பப்பாளி மரத்தின் இலையை எடுத்து, அதனை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை வடிகட்டி குளிர வைத்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்தத் தட்டுக்களின் அளவு தானாக அதிகரிக்கும்.
மாதுளை சிவப்பாக இருக்கும் அனைத்து பழங்களிலும் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதில் முக்கியமான ஒரு பழம் தான் மாதுளை. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி, வைட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், இதனை தவறாமல் உட்கொண்டு வாருங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளதால், இதனை உட்கொண்டு வந்தாலும், இரத்தத் தட்டுக்களின் அளவு அதிகரிக்கும். அதிலும் பசலைக்கீரை, கேல் போன்றவற்றை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.
No comments:
Post a Comment