கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க
நீங்கள் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கி இருப்பிர்கள் . அதில் உள்ள பாடல்கள் சிலவட்றை கணினியில் ஒரு Folderல் Copy செய்து வைத்து இருப்பிர்கள் . இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய MP3 DVD கிடைக்கும். மீண்டும் Copy வேறு ஒரு Folderல். இப்படியே சில பாடல்கள் இரண்டு முறை Copy செய்யப்பட்டிருக்கும். அதே போல தான் சில புகைப்படங்களும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட டூப்ளிகட் கோப்புகளை கண்டுறிந்து அழிக்க ஏதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இது போல உங்கள் கணினியிலும் கண்டிப்பாக நூற்றுக்கணக்கான ஏன் சில கணினிகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கூட இருக்கலாம்.தற்செயலாக கண்ணில் சிக்கியதுதான் இந்த Duplicate Cleaner மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள் என்பது மேலும் சிறப்பு. இதில் நீங்கள் எந்த கோப்புகளை மட்டும் தேட வேண்டும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக Image File மட்டும் தேட வேண்டும் என்றாலோ அல்லது ஆடியோ கோப்புகளை மட்டும் தேட்ட வேண்டும் என்றாலோ அதற்கு தனியாக Options உள்ளன. இது கண்டுபிடித்து கொடுக்கும் Duplicate புகைப்பட கோப்புகளை அழிப்பதற்கு முன்னால் அதை Preview பார்க்கும் வசதி உள்ளது.
No comments:
Post a Comment