பூண்டு இயற்கையாக இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், பூண்டை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
பீட்ரூட் பீட்ரூட் சிவப்பு நிற காய்கறிகளில் ஒன்று என்பதால், இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது இரத்த சிவப்பணுக்களின் அளவையும் அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு சிறிது பீட்ரூட், கேரட் போன்றவற்றை எடுத்து வந்தால், உடலில் இரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கலாம்.
ஈரல் இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டு ஈரல். ஆகவே இதனை வாரம் ஒருமுறை எடுத்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை உலர் திராட்சையில் 30 சதவீதம் இரும்புச்சத்து உள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், இரத்தத் தட்டுக்களின் அளவு மட்டுமின்றி, இரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்
ஆப்ரிக்காட் ஆப்ரிக்காட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த பழத்தில் அத்தனை சத்துக்களானது நிறைந்துள்ளது.
No comments:
Post a Comment