Friday 26 December 2014

கொஞ்சம்கடி – கொஞ்சம் சிரி!!!


கணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everthing)

மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)
கணவன் : தேவைதான்டி எனக்கு !

==========================================

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தா ஒரு நாள் மிருகமா மாறிடுவேன் ஜாக்கிரதை !
மனைவி: அட நீங்க வேற எலியைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்!

==========================================

மனைவி : என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”
கணவன் : ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!

==========================================

“தரகரே… நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க.”
“என்ன சொல்றீங்க?”
“பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே…”

==========================================

“டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!”
“கனவு தானே வருது… அதனாலென்ன?”
“இல்ல டாக்டர். இடை இடையே இந்தக் கனவை உங்களுக்காக வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே!”

==========================================

“பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”

==========================================

“ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல…?”
“சார்… எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு”

==========================================

1. ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி நான் பேசாதிருக்கும் வரை..
2. வீட்டை சுத்தப் படுத்துவதற்காகவே பண்டிகைகளை கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
3. வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
# போதி தர்மனின் முந்தைய வாரிசு

==========================================

போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

==========================================

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

==========================================

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…
காதலி : !!!!
==========================================
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

==========================================

இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா
தேவலை…!
-
ஏன் முதலாளி, அப்படிச் சொல்றீங்க?
-
தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள்
வேண்டியிருக்கே…!

==========================================

அப்போ…எப்ப பெண் பார்க்க வரட்டும்..?
-
நாங்க கூடிப்பேசிட்டு, பஞ்சாயத்துல ‘மின்சார நேரம்’
பார்த்துச் சொல்றோம், வந்துட்டுப் போங்க…!

==========================================

தோனி: நீங்க இன்னும் முன்னாடியே அதாவது ஒரு 5, 6 வயசுலயே சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்திருக்கலாம்?
சச்சின்: என்னை ரொம்பப் புகழாதீங்க…!
தோனி: அதுக்கு சொல்லல்ல 16 வயசுல ஆட ஆரம்பிச்சதுனால இப்ப வரைக்கும் இருக்கீங்க, இன்னும் 10 வருஷம் முன்னாடி ஆரம்பிச்சிருந்தீங்கன்னா இப்ப ரிட்டையர் ஆகியிருப்பீங்கல்ல!
==========================================
லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!
பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.
==========================================
ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: ஐ லவ் யூ டூ!
இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ!
அம்மா: என் கிட்ட காசு இல்லை. ஒழுங்கா கிளம்பு.
==========================================
எம்.டி. எதுக்கு அடுத்த வாரம் லீவு வேணும் உனக்கு?
ஊழியர்: எனக்கு கல்யாணம் சார்!
எம்.டி.: உனக்கு எந்த முட்டாப்பய பொண்ணு கொடுக்கறான்
ஊழியர்: என்ன சார் மறந்துட்டீங்களா? உங்கப் பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப்போறேன்!
==========================================
கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.
==========================================
இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
==========================================
ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு.
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு.
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்!
==========================================
“எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”
“அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”
==========================================
“டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?”
“ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்.”
==========================================
“தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்…”
“அடேங்கப்பா … அப்படி என்ன பேசினாரு?” “பேசலைய்யா… குறட்டை விட்டாரு!”
==========================================
“பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க…?”
“குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!”
==========================================
“அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?”
“எப்போ கேட்டாலும், “தலைக்கு மேல வேலை இருக்கு”ன்னு சொல்றாரே!”
==========================================
“என்னப்பா காபியில ‘ஈ’ செத்துக்கிடக்குது…?”
“ஸ்பெஷல் காபியிலதான் சார் ‘ஈ’ உயிரோட இருக்கும்”
==========================================
“ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?”
“ஏன்னா.. அது வாயில்லா பிராணி சார்!”
==========================================
பயணி: தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர்: இன்னொரு டிக்கெட் யாருக்கு?
பயணி: ரெண்டுமே எனக்குத்தான். ஒண்ணு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர்: அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
பயணி: ஒண்ணும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.
==========================================
“உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது.”
“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?”
==========================================
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
==========================================
நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்
நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.
நபர் – 1:  ஐய்யைய்யோ….! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.
==========================================
புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே… ஏன்…?” அதுவா…
அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்…”
==========================================
“ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (students ) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions papers ) கொடுக்குறாங்க…”
“எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்(answer papers ) கொடுக்குறாங்க…”
“என்ன கொடும சார் இது?….”
==========================================
நகைச்சுவை; இரசித்தவை 18 : வாங்க சிரிக்கலாம்…
1. “உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?”
“எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!”
==========================================
2. “அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?”
“அங்கே ‘துயர் மட்டக் குழு கூட்டம்’ நடக்குதாம்”
==========================================
3. “இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”
“அவ்வளவு பிசி ஒர்க்கா?”
“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”
=========================================
4. “தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?”
“பாய் வியாபாரம்!”
=========================================
5. டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”
நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”
===========================================
6. ஒருவர்: “தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?”
மற்றவர்: “வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்”
==========================================
7. நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?”
திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க”
==========================================
8. தொண்டர் 1 : “தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?”
தொண்டர் 2 : ” சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
‘எந்த வட்டத்தின் சார்பில போடுறே’ன்னு கேட்கிறாரு”
==========================================
9. “வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?”
“ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க”
“ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்”
“ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்”
“அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”
==============================================
10. “இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?”
“பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்”
===============================================
11. “டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை”
“அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?”
“காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!”
===============================================
12. தொண்டர் 1: “தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?”
தொண்டர் 2: “போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!”
==============================================
13. “சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”
“என்ன செய்தே?”
” ‘சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”
=============================================
14. ஆசிரியை : “ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?”
மாணவன்: “ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்”
=============================================
15. “ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?”
” ‘உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார் சார்”
=============================================
16. “இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?”
“இது விவாக மேடை இல்லை தலைவரே; ‘விவாத மேடை’ !
=============================================
****************மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில்
ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து
கூண்டில் இருந்த எலி கேட்டது. எதுக்கு அவனைக் கொன்னேனு…
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப்
பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனை”ன்னு.
************
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…
தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….
************
அம்மா: என்னடா… இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?
பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.
அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க?
பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.
************
மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.
************
கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு! கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது…
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?…..
************
திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாகும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!
————————————————————————————-
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
————————————————————————————-
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடு‌க்கணு‌ம்..
அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்.. முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க…
எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்.. ‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர் ‌கி‌ட்ட பேச‌ச் சொ‌ல்‌றீ‌ங்க?
அவரோட பைய‌ன‌க் காணோ‌ம்னு இ‌ப்போ‌த்தா‌ன் புகா‌ர் கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன்.
————————————————————————————-
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
————————————————————————————-
ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு ….
ஆனா….
ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!
————————————————————————————-
அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
ஏன் ?
எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !
————————————————————————————-
என்னங்க… செருப்பு காலை கடிக்குது!
அப்ப மாலைல போட்டுக்கங்க!
————————————————————————————-
சார்… ஆறு வருஷத்துல ‌நீ‌ங்க போ‌ட்ட பண‌ம் இர‌ட்டி‌ப்பாகு‌ம்னு சொன்னீங்களே… என்ன ஆச்சு?
நி‌தி ‌நிறுவன‌ம் : இர‌ட்டி‌ப்பாகு‌ம்னு தானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!
————————————————————————————-
எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
————————————————————————————-
தலைவர் எதுக்காக எடை பார்க்கும் மிஷினை பக்கத்துலயே வச்சிருக்காரு?’’

‘‘அவரைத் தேடி வர்றவங்க கிட்டே அவரோட ‘வெயிட்’டை காண்பிக்கவாம்!

-------------------------------------------------------------------------------------

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை,
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...

-------------------------------------------------------------------------------------
டிராபிக் கான்ஸ்டபிள்:
யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.
குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி.
————————————————————————————–
“நான் ஒரு முட்டாள். உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே?” “அது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்… அதனால தான் சம்மதிச்சேன்…!”
————————————————————————————–
“டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?” “அதை அடமானம் வைக்க முடியாதே”
————————————————————————————–
“வெளிநாட்டிலிருந்து உன் பையன் என்ன வாங்கி வந்தான்” “நாலு செண்ட் தான்” “ஏன்..ஒரு ஏக்கர் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கலாமே…”
————————————————————————————–
கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால்
டக் அவுட்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால்
வித் அவுட்

வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு
ஆல் அவுட்நீங்க இதை படிச்சிட்டு லைக் / கமெண்ட்  கொடுக்காம போன
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
————————————————————————————–
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two Side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
————————————————————————————-
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
————————————————————————————-
“டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே…
இதையேன் பெரிசா சொல்றீங்க…?”
“அட! நீங்க ஒன்னு கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க.!”
————————————————————————————
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
————————————————————————————
“சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?”
ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!”
———————————————————————————–
Bank லோன் கிண்டல்..!
“ஹலோ! நாங்க பேங்க்லேர்ந்து பேசறோம், உங்க அக்கவுண்டை பேஸ் பண்ணி உங்களுக்கு 10 லட்ச ரூபாய் வரைக்கும் லோன் சாங்ஷன் ஆகியிருக்கு சார்…
அப்படியா! உடனே அந்தப் பணத்தை என்னோட சேவிங்ஸ் அக்கவுண்ட்லயே போட்டுருங்க!
?!?!?!
————————————————————————————-
இஞ்ஜினியரிங் Class Room-ல்..
ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்”
மாணவர்: என்ன கடனா?
————————————————————————————-
“தேள் கொட்டினால் பயங்கரமா வலி இருக்கும்னு சொல்வாங்க…
நீங்க இப்படி சிரிக்கிறீங்களே…?”
“தேள் கொட்டினது என்னோட மனைவிக்கு…!”
————————————————————————————
திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே…..
திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல… அப்ப பார்த்துக்கலாம்.
————————————————————————————
“என் உயிரைக் காப்பற்றிய நர்சையே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“எப்படிக் காப்பாத்தினா?”
“ஆபரேசன் ரூமிலேயிருந்து பின்வழியா என்னைத் தப்பிச்சிப் போக வச்சது அவதான்!”
———————————————————————————-
———————————————————————————

———————————————————————————-

காமெடி பீஸ்

தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: “வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!”
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
——————————————————————————
வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்… எதிர்முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு… இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற…
வடிவேலு: மனதிற்குள்.. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ…
———————————————————————————-
நண்பன் 1: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
நண்பன் 2: விட்றா. ஃபீல் பண்ணாத
நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது. நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
————————————————————————————-
வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது… அடிவாங்க இங்க வா, அங்க வா…ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க… நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது…
சிங்கமுத்து: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு… போடி மாப்ள… வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு…
“சாதாரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்… கைப்புள்ள… நீ கதறப் போற கைப்புள்ள..!” “மாப்பு… மாப்பு… அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!”

வாய்க்கால் சண்டை

கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்… இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்…..!
சுப்பையா: ஒண்ணுமில்லங்க… ‘வாய்க்-கால்’ சண்டைதான்!
——————————————————————————————–
இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ… உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
சிறுவன்: அதுவா….? ‘உ’-வும் ‘எ’-வும்தான் வித்தியாசம்!

Nurse மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை

புதிதாகப் பிறந்த குழந்தை Nurse ஐ பார்த்துக் கேட்டது
கரண்ட் இருக்கா?
Nurse: இல்லை.
குழந்தை: அடக் கடவுளே, நான்
மறுபடியும் தமிழ்நாட்டிலே பிறந்துவிட்டேனா.

எதிர் வீடு

பையன்: அம்மா நம்ம எதிர் வீட்டு Aunty பேரு என்ன?
அம்மா: ராதா டா.
பையன்: அப்பாவுக்கு அது கூட தெரியல அம்மா, டார்லிங்’னு கூப்பிடுறாரு.

உரையாடல்

ஆள் 1 : நான் பிறந்தது சென்னையில்
ஆனால் படிச்சது மும்பையில்.
ஆள் 2 : அப்போ ஸ்கூல்’ க்கு போக
ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?