Sunday, 24 August 2014

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி!!!

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

தூத்துக்குடி பாலு


இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?

1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2. கணப் பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)

பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.

பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.



6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி ---> பிள்ளை ராசி

மேஷம் ---> கன்னி
தனுசு ---> ரிஷபம்
துலாம் ---> மீனம்
கும்பம் ---> கடகம்
சிம்மம் ---> மகரம்
மிதுனம் --->விருச்சிகம்
-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.



7. ராசி அதிபதி

ஒன்பது கிரகங்களுக்கும் பிற கிரகங்களுக்கிடையிலான நட்பு, சமம், பகை போன்றவை உள்ளன.

சூரியன் - சந்திரன், செவ்வாய், குரு (நட்பு) - புதன் (சமம்) - சுக்கிரன், சனி, ராகு, கேது (பகை)

சந்திரன் - சூரியன், புதன் (நட்பு) - செவ்வாய், குரு, சுக்கிரன், சனி (சமம்) - ராகு, கேது (பகை)

செவ்வாய் - சூரியன், சந்திரன், குரு (நட்பு) - சுக்கிரன், சனி (சமம்) - புதன், ராகு, கேது (பகை)

புதன் - சூரியன், சுக்கிரன் (நட்பு) - செவ்வாய், குரு, சனி, ராகு, கேது (சமம்) - சந்திரன் (பகை)

குரு - சூரியன், சந்திரன், செவ்வாய் (நட்பு) - சனி, ராகு, கேது (சமம்) - புதன், சுக்கிரன் (பகை)

சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது (நட்பு) - செவ்வாய், குரு (சமம்) - சூரியன், சந்திரன் (பகை)

சனி - புதன், சுக்கிரன், ராகு, கேது (நட்பு) - குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)

ராகு, கேது - சனி, சுக்கிரன் (நட்பு) - புதன், குரு (சமம்) - சூரியன், சந்திரன், செவ்வாய் (பகை)

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்

ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை

இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

8. வசியப் பொருத்தம்

பெண் ராசி --->பையன் ராசி

மேஷம் ---> சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் ---> கடகம், துலாம்
மிதுனம் ---> கன்னி
கடகம் ---> விருச்சிகம், தனுசு
சிம்மம் ---> மகரம்
கன்னி ---> ரிஷபம், மீனம்
துலாம் ---> மகரம்
விருச்சிகம் ---> கடகம், கன்னி
தனுசு ---> மீனம்
மகரம்---> கும்பம்
கும்பம் ---> மீனம்
மீனம் ---> மகரம்
- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜீ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்.

10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்


11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இல்லாதது

கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது

அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.

சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர்.


No comments:

Post a Comment