Tuesday 13 August 2013

கணினியில் நிறுவிய மென்பொருள்களை அகற்ற!!!


நம்முடைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணினியில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். நாளடைவில்  குறிப்பிட்ட சில மென்பொருள்களை பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம். அவ்வாறு கணினியில் அதிகமான மென்பொருள்கள் இருக்கும். மேலும் ஒரே பயன்பாட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். அவ்வாறு இருக்கும் மென்பொருள்களால் கணினியின் இயக்கத்தில் தடைப்படும். இவ்வாறு கணினியில் தேவையில்லாமல் இருக்கும் மென்பொருள்களை கணினியை விட்டு நீக்குவதற்கு விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அது ஒரு சில மென்பொருள்களை சரியாக கணினியை விட்டு நீக்கம் செய்யாது. இவ்வாறு கணினியை விட்டு நீக்க முடியாத மென்பொருள்களை கணினியை விட்டு நீக்கம் செய்ய மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் Ainvo Uninstall Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Find Programs என்னும் சுட்டியை அழுத்தி கணினியில் நிறுவப்பட்ட மென்பொருள்களை ஆராயவும். Remove Programs என்னும் சுட்டியை அழுத்தவும். 


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் தேவையில்லாத அப்ளிகேஷன்களை தேர்வு செய்து, பின் Uninstall என்னும் சுட்டியை அழுத்தி கணினியை விட்டு அப்ளிகேஷனை நீக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தால் நீக்க முடியாத மென்பொருள்களையும் இந்த மென்பொருள் மூலமாக நீக்கம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment