Sunday, 21 July 2013

: இருதய மாற்றுப் பாதை சிகிச்சை!!!

இம்முறையின் இன்னும் சில சிறப்பம்சங்கள் என்னவென்றால்,


- மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டியதில்லை,
- வேலையிலிருந்து விடுப்புகள்/ஓய்வு பெற வேண்டியதில்லை.
- உடலில் அறுவை செய்ய வேண்டியதில்லை.
- சிகிச்சையின் செலவும் மிகவும் குறைவு.

- அதோடு அறுவை சிகிச்சையின் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் ஏதுமில்லை.

இந்தக் கருவி எவ்வாறு செயல் படுகிறது என்பதை அறியுமுன் நுண்ணறிவாளனான இறைவன் இதயத்தை எவ்வாறு செயல்படுமாறு படைத்துள்ளான் என்பதை சுருக்கமாக விளங்கிக் கொள்வோம்.



நமது இதயம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் வலப்புற மேற்பகுதி வலது ஆரிக்கிள் (right auricle) அல்லது வலது ஏற்றியம் (right atrium) என்றும் வலப்புற கீழ்ப்பகுதி வலது வென்ட்ரிக்கிள் (right ventricle) என்றும் இதயத்தின் இடப்புற மேற்பகுதி இடது ஆரிக்கிள் (left auricle) அல்லது இடது ஏற்றியம் (left atrium) என்றும் இடப்புற கீழ்ப்பகுதி இடது வென்ட்ரிக்கிள் (left ventricle) என்றும் அழைக்கப்படுகின்றன.







உடலெங்கும் தந்துகிகளாகப் பரவியுள்ள சிரைகள் (veins) மூலம் அசுத்த இரத்தம் இதயத்தின் சுருங்கி விரிதலால் பெருஞ்சிரை வழியாக வலது ஆரிக்கிளில் நுழைகிறது. இந்த அசுத்த இரத்தம் மூவிதழ் வால்வு (tricuspid) வழியாக வலது வென்ட்ரிக்கிளை அடைகிறது. மீண்டும் இதயத்தின் சுருங்கிவிரிதலால் நுரையீரல் தமனி மூலம் அசுத்த இரத்தம் நுரையீரலுக்குச் செலுத்தப்படுகிறது. நுரையீரலை அடைந்த அசுத்த இரத்தம் வாயுப்பரிமாற்றம் (Gas Exchange) நடைபெற்று உயிர்வளி நிறைந்த சுத்த இரத்தமாக மாறி நுரையீரல் சிரையின் வழியே இதயத்தின் இடது ஆரிக்கிளுக்குள் நுழைகிறது. பின்னர் ஈரிதழ் வால்வின் மூலம் (bicuspid) இடது வெண்ட்ரிக்கிளை அடைந்த சுத்த இரத்தம் அங்கிருந்து பெருந்தமனி மூலம் உடலின் பல பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது.



இருதயத் தசைகள் தொடர்ந்து சுருங்கியும் விரிந்தும் இயங்குவதை மேலே கண்டோம். இத்தசைகள் குறுகிய பின்னர் விரிவடையும் நிலைக்கு டைஸ்டோல் (diastole) என்று கூறப்படும். இந்த நிலையில்தான் இதயத்தின் அழுத்தம் குறைந்து இரத்தம் நிரம்புகிறது. இருதயம் சுருங்கும் நிலையாகிய ஸிஸ்டோல் (systole) எனும் நிலையில் தமனிக் குழாய்களுக்கு இரத்தம் செல்வது சாத்தியமில்லை.

இந்தக் கருவியின் மூலம் இருதய நரம்பின் தளர்ச்சி நிலையின் போது அவற்றிற்கு அதிகமான அளவில் இரத்தம் செலுத்தப் படுகிறது. உடலின் அதிக இரத்த ஓட்டமுள்ள பகுதியில் இக்கருவியின் துணைச் சாதனங்களை சுழற்றுவதன் மூலம் செயற்கையாக, சற்று அதிக அழுத்தம் ஏற்படுத்தி அதன் மூலம் தமனிகளின் அடிப்பகுதிகள்இருதயம் சுருங்கி-விரிந்து தளர்ச்சி அடையும் நிலையில் அதிகமான அளவிலும் அதிமான அழுத்தத்துடனும் இரத்தம் பெறும் விதமாகத் தொடர்ந்து இக்கருவி இயக்கப்படுகிறது. இவ்வாறு இந்தத் தமனிக் குழாய்கள் அதிகமான இரத்தத்தைப் பெற்று நிரம்பிவிடுகிறது. மேலும் அதிக அழுத்தத்துடன் இதிலிருந்து பீறிட்டு வெளிப்படும் இரத்தம் தந்துகிகளுக்குள் இரத்தத்தை நிரப்பி அவற்றை விரிவாக்கி விடுகின்றது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் விளையாட்டு வீரர்கள் 30 ஆண்டுகள் செலவழித்துச் செய்த பயிற்சிகளின் பலனை இந்தக் கருவி முப்பது மணி நேரத்தில் செய்து, மாற்றுக் குழாய்களை விரிவாக்கி, செயல் படவைத்து விடுகிறது. இந்தப் புதிய முறை சிகிச்சை, பிரபலமாகப் பேசப் படும் பை-பாஸ் (Bypass Surgery/Angioplasty) எனும் அறுவை சிகிச்சை முறையை விடச் சிறந்தது.

இந்த இயற்கை மாற்று வழிச் (Natural Bypass) சிகிச்சை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளதா?

ஆம். கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கருவி மிகவும் புகழ் பெற்று விட்டது. அமெரிக்காவில் சுமார் 200 மருத்துவ மையங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இது ஏறக்குறைய (Bypass Surgery/Angioplasty) அறுவை பைபாஸ் சிகிச்சைக்கு முற்றான மாற்றுச் சிகிச்சையாகவே இடம் பிடித்து விட்டது. சீனாவில் சுமார் 10,000 மையங்ங்களில் இருதய நோயாளிகளுக்கு இந்தப் புதிய முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்தக்கருவியின் சிகிச்சை Escorts heart Institute, New Delhi, Metro Heart Institute போன்ற பெரிய மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால், இந்தப் புதிய சிகிச்சையை இலாப நோக்கில் ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை முறையைவிடக் குறைந்த இலாபமே பெற்றுத் தரக் கூடியது என்பதால், பெரும்பாலான இந்திய மருத்துவமனைகள் அதிக இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அறுவை பை-பாஸ் (Angioplasty and Bypass Surgery) சிகிச்சை முறையையே தேர்ந்தெடுக்கின்றன. 

No comments:

Post a Comment