Wednesday, 16 September 2015
அகத்தி அகத்தீஸ்வரனின் மறுவடிவம்!
அத்தனை நோய்களுக்கும் அருமருந்து!
அந்த சிவனே முதல் சித்தன். அவனே குரு. அவனே ஆதிபகவன். அவனே மூலம். அவனே எல்லாம். மானுட ஜீவன்களை அல்லல்களிலிருந்து மீட்க, எம்பெருமான் சிவனே முதல் சித்தனாய் வீற்றிருந்து, தாவர, ஜீவ, தாது வர்க்கங் களின் தன்மைகளை உணர்ந்து, தன்னால் படைக்கப்பட்ட மானுட மேன்மைக்காக, பதினெட்டு சித்தர்களின் சிந்தனைக்குள் புகுந்து, அவனே பதினெட்டு சித்தர் களையும் இயக்கினான்.
மானுடனை நோயிலிருந்து மீட்டெடுக்க, சித்தர் களைக் கொண்டு மருந்து களைக் கண்டறிந்தான். மருந்துகளைக் கொண்டு மானுடனின் ஆயுளை நீட்டிப்பு செய்தான். மருந்து களால் ஆயுளை நீட்டிக்கச் செய்ய மட்டுமே இயலும். ஆனால் முக்தி பெற அல்லது உடலை அழியாத் தன்மைக்குக் (கற்பநிலை) கொண்டு செல்ல இயலாது.
இந்த உலகம் உனக்கோ எனக்கோ யாருக்கும் சொந்த மில்லை. நம்மை சுற்றி இருப் பவர்களைப் -பண்படுத்தவே நாம் இங்கு வந்திருக்கிறோம். நமது இருப்பு எப்பொழுது வேண்டுமானாலும் இங்கிருந்து காலி செய்யப்படலாம்.
உன் மனமே அகம் காட்டும் கண்ணாடி. மனம் அது செம்மையாகும் பட்சத்தில் உன்னி டம் அகங்காரம் இருக்காது. உன்னிடம் அகங் காரம் இல்லையென்றால், நீ நிலவின் குளுமை யும், தென்றலின் இதமும், மலரின் மனமும், மாறாத புன்னகையும் பெற்றிருப்பாய்.
உன் அகம் சீராகும். உன் அகத்துள் உஷ்ணம் என்னும் நெருப்பு ஒரு கட்டுக்குள் இருக்கும். அகத்தியை ஸ்தல விருட்சமாய் கொண்டு, அருள்பாலித்துவரும் எம்பெருமான் அகத்தீஸ்வரனை வேண்டி, வணங்கி, அகத்தி யால் அகத்தீயைச் சுட்டறுத்து நோய் நீங்க வல்லமை பெறுவோம் வாருங்கள்.
குடற்புண் குணமாக:
அகத்திக்கீரை 2 கைப்பிடி அளவு, வெங்காயம் 50 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தேவையான அளவில் எடுத்து தட்டி, கீரையுடன் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பாதியாகச் சுண்டச் செய்து இறக்கிவிடலாம். இந்த அகத்திக்கீரைச் சூப்பை வாரம் மூன்று நாள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, எப்பேர்ப் பட்ட குடற்புண்ணும் குணமாகும்.
கண்ணோய்கள் விலக:
கண்ணைப் பற்றிய அத்தனை நோய்களுக் கும் அகத்தியே நன்மருந்தென்றால் மிகையல்ல. இன்றும் கிராமங்களில் "மெட்ராஸ் ஐ' என நாம் குறிப்பிடும் கண்ணோய் வந்தால், அகத்தியே மருந்தாய் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு உடம்பில் உண்டாகும் அதி உஷ்ணமும் அதனைச் சார்ந்து உண்டா கும் தொற்றே (ஒய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) காரணமாகிறது. கண் சிவந்து, வீங்கி, நீர்வழிந்து, வலியை உண்டாக் கும். இத்தகைய கண்ணோய்க்கு அகத்தி இலையை கண்களில் இரண்டு, மூன்று மணி நேரம் வரை ஒற்றியெடுத்து வர கண் சிவப்பு மாறி, வீக்கம் குறைந்து, வலி மறைந்து கண்ணோய் விலகும்.
கால்வெடிப்புகள் மறைய:
அகத்திக்கீரையையும், மருதாணி இலை யையும் சமஅளவில் எடுத்து விழுதாய் அரைத்து கால்வெடிப்புகளில் பற்றுப்போட வெடிப்புகள் மறையும். இதேபோல் அகத்திக்கீரைச் சாற்றை சேற்றுப்புண்களில் தடவி வர புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாய் அரைத்துப் பூசி வர தேமல் முற்றிலுமாய் மறையும்.
சோரியாஸிஸ் குணமாக:
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.
சிறுநீர் பிரிய:
கிராமப்புறத்தில் அகத்திக்கீரைக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருப்பதை இன்றும் காணலாம். உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகும் நீர்ச்சுருக்கு, மாரடைப்பு, நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற குறைபாடுகளுக்கு மிக எளிய மருத்துவ முறையை கிராம மக்கள் கையாளுகின்றனர்.
அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் கணிசமாய் ஊற்றி அவித்து, நீரை வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து, அத்துடன் பழைய சாதத்துடன் கலந்த நீர் ஆகாரத்தையும் எடுத்து ஒன்றாய்க் கலந்து அருந்துகிறார்கள். மேற்சொன்ன நோய்கள் எல்லாம் உடனே சரியாகி விடுகிறது.
தலைவலி தீர
அகத்தி இலைச்சாற்றை மூக்கில் ஓரிரு துளிவிட, தலைவலி உடனே தீரும். அகத்திக்கீரையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து தலை உச்சியில் இருபது நிமிட நேரம் வைத்துவர, தலைவலி, தலைபாரம் போன்ற குறைபாடுகளும் விலகும்.
அகத்திப் பூவை மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து கசாயமிட்டுச் சாப்பிட்டால் மூக்கிலிருந்து உண்டாகும் ரத்த ஒழுக்கு உடனே விலகும்.
அத்திமரப்பட்டையை முறைப்படி கஷாய மிட்டுச் சாப்பிட்டுவர, அம்மைக் காய்ச்சல், விஷக்காய்ச்சல், பெரியம்மை போன்றவை குணமாகும். மேலும் தண்ணீர் தாகம், கை, கால், உடல் எரிச்சல், ஆண் உறுப்பு வேக்காடு, தொடை இடுக்குகளில் உண்டாகும் வேக்காடு போன்றவை விலகும்.
மருந்தை முறிக்கும் அகத்தி
அகத்திக்கீரைக்கு மருந்தை முறிக்கும் தன்மை உள்ளதாக சித்தர்கள் குறிப்பிடு கின்றனர். எனவே நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் இதனைச் சமைத்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் பாதிக்கப்பட்ட வர்கள், வயிற்று நோய் உள்ளவர்கள் இதனை மிகக் கவனமாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். தத்தமது செரிப்புத் திறனுக்கு ஏற்ற வகையில் அகத்திக்கீரையைச் சாப்பிடலாம்.
அடிக்கடி இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தைக் கேடுறச் செய்து, உடலில் சொறி, சிரங்கு நமைச்சலை உண்டாக்கிவிடும். வயிற்றுக்கடுப்பு, பேதியும் உண்டாகலாம். அகத்திக்கீரை உள்மருந்தாய் உபயோகிப்பதைவிட வெளிமருந்தாய் உபயோகிக்கும் பொழுது வியத்தகு பலனைத் தருகிறது.
அகத்தியை அகத்தீஸ்வரனாகவே காணுங் கள். கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வரன் மற்றும் அமுதவல்லித் தாயாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்.
800 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் நாகர்கோவிலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து எம்பெருமானைத் தரிசித்து பாக்கியம் பெற்றதை புராணங்கள் கூறுகின்றன
-சித்த மருத்துவ நிபுணர் டாக்டர். அருண்சின்னையா
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5749
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment