உலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்சீரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்சீரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது.
மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்சீரக) எண்ணெய்க்கு உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்சீரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களே - தலை முடி கொட்டுகிறதா? : பெண்களைப் பொருத்தவரை தலைமுடி கொட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆண்களைப் பொருத்தவரை இளவயது நரை மிகப் பெரிய பிரச்சினை. இரண்டுக்கும் பராகா எண்ணெய் உதவும். எலுமிச்சை சாற்றை தலை முழுவதும் (முடியின் வேர்க்கால்களில்) நன்றாகத் தேய்த்து 15 நிமிஷம் காத்திருங்கள். முடி நன்றாக உலர்ந்துவிடும். பின்னர் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரப்பதமின்றி நன்றாகத் துடைத்து விடுங்கள். பின்னர் முடியின் வேர்க்கால்கள் முழுவதும் பரவும் அளவுக்கு பராக்கா எண்ணெய்யை நன்றாகத் தேயுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதம் செய்தால், நீங்கள்தான் முடிசூடா மன்னர்.
:நுனிமுடி பிளவை தவிர்க்க...!!!
நுனி முடி பிளவுபட்டால் மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை வெட்டிவிடுங்கள். ஈரமான முடியை சீப்பால் வாராதீர்கள். தலைக்கு எண்ணெய் தடவும் போது நுனிக்கும் எண்ணெய் தடவுங்கள். கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதை தவிர்க்கலாம். அப்படி முடியாதவர்கள் கீழ்க்கண்ட வழியை பின்பற்றலாம்.
அடுக்கு செம்பருத்திப் பூ மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டையும் தேங்காய் எண்ணெயில் போட்டு பாத்திர வாயை துணியால் மூடி 15 நாட்கள் வெய்யிலில் வைத்து விடுங்கள். பின்பு இதைத் தடவி வர நுனி முடி பிளவு படாது.
இயற்கை ஷாம்புவிற்கான சின்ன ரெசிபி இது. புங்கங்காய் (தனியே நீரில் ஊற வைத்து) தேய்த்தால் ஷாம்பு போல் நுரை வரும். அல்லது சீயக்காய் (75%) தூளும், புங்கங்காய் (25%) தூளும் கலந்து தேய்த்தாலும் இயற்கை ஷாம்பு ரெடி
இள நரையை தடுக்க...!!!
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சரிசமாக கலந்து, துளசி இலை சேர்த்து சூடாக்கி, காய்ச்சி, ஆற வைத்து தினமும் தலையில் தடவ வேண்டும்.
ஒரு பீட்ருட், ஒரு காரட், ஒரு தக்காளி, கொஞ்சம் கரு வேப்பிலை கொஞ்சம் இஞ்சி போட்டு அரைத்து தினமும் ஒரு கப் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.
சுத்தமான நல்லெண்ணையுடன் முழு நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை விழுதினை கொண்டு காய்ச்சி தயாரிக்கும் எண்ணெயைத் தேய்த்து குளிப்பதால் நரையை கட்டுப்படுத்தலாம்.
பேன்களை ஒழிக்க...
கூடல்.காம் - Wednesday, September 10, 2003
சீதாப்பழக் கொட்டைகளைக் காய வைத்து, தூளாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் நல்லெண்ணெயைக் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.
கூடல்.காம் - Wednesday, September 10, 2003
சீதாப்பழக் கொட்டைகளைக் காய வைத்து, தூளாக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் நல்லெண்ணெயைக் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யைத் தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.
துளசி இலைகளை தலையணையின் மேல் போட்டு அதன் மேல் துணி விரித்துப் படுத்தால் பேன்கள் நீங்கி விடும்.
வெங்காயத்தை அரைத்து தலைக்குத் தேய்த்தால் பேன்கள் நீங்கி விடும்.
பொடுகு நீங்க...!!!
விளக்கெண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். பால், மிளகு, வெந்தயம், வேப்பிலை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். துளசி இலையை அரைத்து தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். எலுமிச்சைச் சாற்றை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பொடுகு நீங்கும். ஒருவர் உபயோகித்த சீப்பை அடுத்தவர் உபயோகிக்கக் கூடாது.
3 தேக்கரண்டி கடலைமாவு, 3 தேக்கரண்டி சீகைக்காய் பொடி, 1 தேக்கரண்டி ஊற வைத்த வெந்தயம் இவற்றை சோறு வடித்த கஞ்சியில் கலந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு 2 முறைகள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறியபின், மேற்கூறிய கஞ்சியைத் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் செய்து வந்தால் ஒரு மாதத்தில் பொடுகு நீங்கும்.
துளசியையும், வேப்பிலையையும் சம அளவில் எடுத்து பொடி செய்து, தலைக்கு குளிக்கும் அன்று எண்ணெய்யில் கலந்து நன்கு மண்டையில் தடவி மசாஜ் செய்து பின் குளிக்கவும். பேனின் அளவைப் பொறுத்து வாரம் ஒரு முறையோ இரு முறையோ இப்படி குளித்து வர பேன் போயே போச்சு.
துளசியையும், வேப்பிலையையும் சம அளவில் எடுத்து பொடி செய்து, தலைக்கு குளிக்கும் அன்று எண்ணெய்யில் கலந்து நன்கு மண்டையில் தடவி மசாஜ் செய்து பின் குளிக்கவும். பேனின் அளவைப் பொறுத்து வாரம் ஒரு முறையோ இரு முறையோ இப்படி குளித்து வர பேன் போயே போச்சு.
கூந்தல் வளரும் தைலம்
அரைக்கீரை விதை, வங்காளப்பச்சை, செம்பருத்திப் பூ, மகிழம் பூ, செண்பகப் பூ, வெட்டி வேர், குருவி வேர், விளாமிச்சை வேர், கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக் கிழங்கு, பூலாங் கிழங்கு, ஆலம் விழுது, தவனம், மருது, கதிர் பச்சை ஆகியவை.
தேவையான அளவில் இப்பொருட்களை வாங்கி வந்து வெய்யிலில் நன்றாகக் காயவைத்து எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றில் ஆலம் விழுது இலைகள் ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுதல் வேண்டும். மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கல் உரலில் போட்டு தூள்களாகுமாறு இடித்தல் வேண்டும். நறுக்கி எடுத்த துண்டுகளையும், இடித்த தூள்களையும் கலந்து தேவையான அளவில் தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கொட்டி, அடுப்பிலேற்றிக் காய்ச்சுதல் வேண்டும். அடுப்பில் வைத்துக் காய்ச்சும் பொழுது முதல் இரண்டு மணி நேரம் அடுப்பை சிறு தீயாக எரித்து அடுப்பிலிருந்து இறக்கி விடுதல் வேண்டும். இறக்கி வைத்து தைலத்தைச் சுமார் மூன்று நாட்கள் வரை அப்படியே வைத்திருந்து அதன் பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
No comments:
Post a Comment