Thursday, 19 March 2015

இதய தமனி அடைப்பு!!!


இதய தமனி அடைப்பு
இதய தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1 தேக்கரண்டி வெங்காயச்சாற்றை 4 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஈறுகள் பலம்
சிறிது உப்புத் தூளில் எலுமிச்சை சாறு கலந்து, கைவிரலால் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து விட்டால் ஈறுகள் பலம் பெறும்.
இரத்த இருமல்
தூதுவளை இலை, ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல் (புட்டு மாவு அவிப்பது போல்) செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கேரிஷ்டம் 2 கிராம், திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.
இமை முடி, புருவம்
இமை முடி மற்றும் புருவங்கள் அடர்த்தியாக இல்லாவிட்டால், இரவு படுக்கச் செல்லும் முன் சிறிதளவு விளக்கெண்ணெய்யை இமையில் மற்றும் புருவங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வறட்டு இருமல்
வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அமைத்தையும் ரணமாக்கிவிடும். 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஜலதோஷம்
வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகி விடும்.
தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.
கல்லீரல்
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம்.
கல்லீரலில் ஏற்படும் எல்லாவித நோய்களையும் தேன் குணப்படுத்தும்.
காமாலை
கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து, அரைத்து தினமும் காலையில் 1 நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் காமாலை குணமாகும்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு 2 முறைகள் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய்கள் வராது.
தினமும் 2 வேளை தேன் குடித்தால் எல்லாவிதமான காமாலை நோய்களும் குணமாகும்.
பற்களில் கறை
சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கறை உள்ள இடங்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை நீங்கி விடும்.
காதுவலி
காதில் ஏற்படும் வலிக்கு காற்றொட்டிக் கொழுந்து, பூண்டு, வசம்பு ஆகியவற்றைசம எடை எடுத்து, அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் போதிய அளவு ஊற்றி, காய்ச்சி இறக்கி ஆறிய பிறகு இளஞ்சூட்டுடன் காதில் ஒரு துளி விட்டால் காதுவலி நாளடைவில் நீங்கும்
குரல்
நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகம் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
மூக்கிலிருந்து ரத்தம் வருதல்
இரண்டு அவுன்ஸ் ஆடு தீண்டா பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.
நாக்கு
நாக்கில் ஏற்படும் எல்லாவிதமான குறைப்பாடுகளையும் துளசி தீர்த்துவிடும். நாக்கில் சுவையின்மை இருந்தால் அதையும் போக்கவல்லது.
நாக்கு புண்ணாக இருந்தால், 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி இலேசாக கொப்பளித்து விழுங்கவும்.
பல்வலி
பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட வேண்டும்.
திக்கு வாய்
வசம்பை பொடித்து வைத்துக் கொண்டு இத்துடன் தேனைக் கலந்து கொடுத்து வந்தால் திக்குவாய் சரியாகும்.
தொண்டைப்புண்
இதற்கு சுடுநீரில் உப்பு போட்டு 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை கொப்பளிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 தடவை 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தொண்டைப்புண் ஆறும்.
உப்பு, தயிர், வெங்காயக் கலவை தொண்டைப் புண்ணை ஆற்றும்.
தொண்டையில் ஏற்படும் நோய்களை தேன் குணப்படுத்தும். தேன் கிருமிநாசினியாக வேலை செய்யும்.
தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும் சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் கடவ வேண்டும்.
நுரையீரல்
நுரையீரல் நோய்களுக்கு வெற்றிலைச் சாறு நல்லது. நுரையீரல் கப நோய் நீங்க, தேவையான தூதுவளை, முசுமுசுக்கை இலைகளை சுத்தம் செய்து, இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து, சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதயம்
தினமும் காலையில் 5 சின்ன வெங்காயம் 1 பூண்டு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது.
காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதில் பெருமளவு கரோட்டின் உள்ளது.
பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இதயம் மற்றும் மூளை நரம்புகள் வலிமை பெறும் இரத்தம் ஊறும்.
தூக்கம்
இரவு உணவை முடித்தபின் 1 தேக்கரண்டி தேன் அல்லது மிதமான சூட்டில் 1 டம்ளர் பால் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
தினமும் மாலையில் 6 மணிக்குள் வேலையை முடித்து அரை மணிநேரம் நடைப் பயிற்சி செய்து, 7மணிக்குள் சாப்பிட்டு முடித்து, இரவில் குளித்து விட்டுப்படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
தழும்புகள்
முட்டையின் வெள்ளைக்கருவை தழும்புகள் மீது தடவி வந்தால் தழும்புகள் மறையும்.
எலுமிச்சைச்சாறு, தக்காளி சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவ வேண்டும்.
தேமல் மறைய மருத்துவக் குறிப்பு
உடலில் தேமல் வந்தால், தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும். குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
தீக்காயங்கள்
தீக்காயம் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
திராட்சைப் பழத்தை வெது, வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை
அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பாலூட்டும் தாய்மார்கள் வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பகத்தின் மீது வைத்துக் கட்டினால் பால் நன்றாகச் சுரக்கும்.

No comments:

Post a Comment