ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பயன்பாட்டில் இருப்பதால் நாம் அனைவரும் அங்கிலத்தை தெரிந்து வைத்திருப்பது பயனுள்ளதாகும் .....
ஆனால் எங்கே போய் கற்றுகொள்வது என்று நீங்கள் கேட்டால் நான் spoken english class போ என்று நான் சொன்னால் நீங்கள் கடுப்பாகுவீர்கள் என்று எனக்கு தெரியும் ...
அவ்வாறு எதாவது class சென்றாலும் நமக்கு பயன் உண்டுதான் இருந்தாலும் எவன் class க்கு செல்கிறான் என்ற எண்ணம் நம் மனதில் உள்ளது இதற்கு காரணம் பணம் கொஞ்சம் செலவாகும் அதுமட்டுமில்லமால் சனி ,ஞாயிறு என்று விடுமுறை நாட்களை செலவிட வேண்டும் என்பதால் தான் .....
இதுவே இணையத்தில் கற்கலாம்
என்றால் ஆங்கில தளங்கள் நமக்கு உதவினாலும் அவ்வளவாக புரியவில்லை (அதாவது எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன் உங்களில் சிலர் இதற்கு மாறாக இருக்கலாம் அவர்கள் அறிவு ஜீவிகள் )....இதுவே ஆங்கிலத்தை பேச கற்றுக்கொடுக்கும் தளங்கள் தமிழில் அதுவும் சாதாரண தமிழில் எளிமையான தமிழில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா(பணமும் மிச்சம் அல்லவா ) ?
இதையே தான் நானும் நினைத்தேன் அப்பொழுது தான் என் கண்ணில் ஒரு ப்ளாக் பட்டது அதில் நம்மை போன்றவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆங்கில பாடங்கள் இருக்கின்றன நான் சில நாட்களாக அதை படித்து வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது ...
அதனால் தான் உங்களுக்கும் பயன்படுமே என்று நம் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டால் நன்றாக இருக்கும் என்று இட்டுள்ளேன் .......இவ்வலைப்பூ அருண் என்பவரால் நடத்தப்படுகிறது .....
சிலர் அந்த வலைப்பூவை பற்றி ஏற்கனவே அறிந்தும் இருக்கலாம் வாய்ப்பு இருக்கிறது இருந்தாலும் புதியவர்களுக்கு பயன்படும் என்று நினைத்து இங்கு இட்டுள்ளேன் ....
அந்த வலைப்பூவிற்கான சுட்டி இதோ
கஷ்டமாக இருந்தால் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து செல்லவும் ...
No comments:
Post a Comment