திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும்
சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம்.
இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து
வயதினருக்கும் சட்டைகள் தயார் செய்யப்படுகின்றது.
ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று
விலை மலிவாகவும் அதேசமயம்
தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும், அனைவருக்கும்
ஒரே 'சாய்ஸ்’ நத்தம்தான்.
இங்குள்ள சென்ட்ரல் சினிமா வீதியில் இருபதுக்கும்
மேற்பட்ட கடைகள் மொத்தமாக சட்டைகளை தயாரித்து
விற்கின்றன. நத்தம் முழுவதும் ஆங்காங்கே குடிசைத்
தொழிலாகச் செய்யப்பட்டு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட
சிறிய, பெரிய கடைகள் இருக்கின்றன. குறைந்தபட்சம்
ரூபாய் 65-ல் தொடங்கி பையில் இருக்கும் பணத்திற்கு
ஏற்ப சட்டைகள் இங்கு கிடைக்கின்றன. இதுபற்றி தனியார்
கடை உரிமையாளர் அஜ்மலிடம் பேசினோம்.
'இங்கு விலை மலிவாக கிடைக்க காரணம், எங்களிடம்
உற்பத்தி அதிகம். மும்பை, சூரத் மதுரை போன்ற ஊர்கள்ல
இருந்து துணிகளை வாங்குறோம். அப்புறம் டெய்லர் முதல்
அயர்னிங் வரை எல்லாத்திற்கும் ஆட்கள் போட்டு வேலை
செய்றோம்.
பெரிய ஊர்களில் உள்ள கடைகள், துணிகளை வாங்கி எங்களை
மாதிரி உள்ளவங்ககிட்ட தைக்க ஆர்டர் கொடுப்பாங்க. அதுக்குன்னு
தனியா அமவுன்ட் கொடுக்கணும். அப்புறம் டிரான்ஸ்போர்ட்,
ஏஜென்ட்ஸ், விளம்பரங்கள் தாண்டி சேல்ஸ் வரும்போது எல்லாச் செலவையும்
ஈடுசெய்ய அதை துணிகளோட விலையில்
சேத்துருவாங்க. ஆனா, நாங்க விளம்பரம், ஏஜென்டுகளுக்குப்
பணம் செலவு செய்றதில்லை. அதனாலதான் நாங்க விலை
கம்மியா குடுக்க முடியுது' என்று தொழில்நுணுக்கம் சொல்லித்
தந்தார்.
இங்கு டெய்லராக இருக்கும் முருகனிடம் பேசினோம். 'இந்த
தொழிலுக்குன்னு தனியா சங்கமோ, தலைவர்களோ கிடையாது 80% கூலியாட்கள்தான்
வேலை பார்த்துகிட்டுவர்றாங்க, இங்குள்ள கடை முதலாளிகள்கூட
50% உழைப்பாளிகள்தான். பாம்பே காட்டன்,
செஞ்சூரி, நெப்சி கதர், பிளைன் அய்டம்ஸ், ஈரோடு காட்டன்,
மெஜுராகோட்ஸ், டி.சி. கிளாத் துணிகள்னு நிறைய வெரைட்டியான
துணிகளை இறக்குமதி செய்யுறாங்க. அப்புறம் சில்ட்ரன்ஸ் ஷர்ட்,
ஷார்ட் ஷர்ட், பார்மல்ஸ், ஒய்ட் ஷர்ட், பேட்டர்ன் ஷர்ட்னு தைத்து
தமிழ்நாடு முழுக்க ஏற்றுமதி பண்றோம். அப்பப்ப வர்ற
'டிரண்ட்’டுக்கு ஏத்த மாதிரி பல சட்டைகளையும் இங்கே
தைக்கிறோம்'என்றார் அவர்.
இங்கிருந்து வெளியூர்களுக்கு வாங்கிச் செல்லும் சட்டைகள் 40% லாபம்
வைத்து விற்கப்படுகிறதாம்.
தயாராக இருக்கும் சட்டைகளை வாங்கிச் செல்வதோடு,
சட்டைகளை ஆர்டர் தந்தும் வாங்கிச் செல்லலாம்.
நீங்கள் விரும்பிய டிசைன்களையும், கலர்களையும்,
துணியின் தரத்தையும் நீங்களே தேர்வு செய்வதற்கான
வசதியும் இங்கே இருக்கிறது.
பிரபலமான பிராண்ட் தயாரிப்புகளுக்கு நிகராக, ஆனால்
குறைவான விலையில் தருவதே இந்த ஊரின் தனிச் சிறப்பு.
இனி மதுரை, திண்டுக்கல் பக்கம் போனால்,
நத்தத்துக்கும் போய் வரலாமே!
க.அருண்குமார்,
|
Saturday, 29 March 2014
விலை மலிவாகவும் அதேசமயம் தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும்!!!
Labels:
Info
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment