Monday, 14 July 2014

Jokes!!!

Einstein and a Punjabi sitting next to each other on a long flight..

Einstein says,"Let's play a game.. I will ask you a question, if you don't know the answer, you pay me only $5 and if I don't know the answer, I will pay you $500.."

Einstein asks the first question: What's the distance from the Earth to the Moon..?

Punjabi doesn't say a word, reaches his pocket, pulls out a $5..

Now, it's the Punjabi's, turn..

He asks Einstein: What goes up a hill with 3 legs and comes down on 4 legs..?

Einstein searches the net and asks all his smart friends. After an hour he gives Punjabi $500..

Einstein going nuts and asks: Well, so what goes up a hill with three legs and comes down with four?

Punjabi reaches his pocket and gives Einstein $5.


+++++   




A sardarji walks into a bank in New York City and asks for the loan officer. He says he is going to Europe on business for two weeks andneeds to borrow $5,000.

The bank officer says the bank will need some kind of security for such a loan, so the man hands over the keys to a new Rolls Royce parked on the street in front of the bank. Everything checks out, and the bank agrees to accept the car as collateral for the loan. An employee drives the Rolls into the bank's underground garage and parks it there.

Two weeks later, the man returns, repays the $5,000 and the interest, which comes to $15.41. The loan officer says, "We are very happy to have had your business, and this transaction has worked out very nicely, but we are a little puzzled. While you were away, we checked you out and found that you are a multimillionaire. What puzzles us is why would you bother to borrow $5,000?"

Sardarji replied, "Where else in New York can I park my car for two weeks for 15 bucks?"

Sunday, 13 July 2014

உப்பு உருண்டை!!!




உப்பு உருண்டை - Uppu Urundai Recipe- Steamed Rice Balls

..எளிதில் செய்ய கூடிய சத்தான Snack இது...இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  புழுங்கல் அரிசி - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் -  2 மேஜை கரண்டி
  .  கடுகு - 1/4 தே.கரண்டி
  .  கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
  .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  காய்ந்தமிளகாய் - 3 (இரண்டாக உடைத்து கொள்ளவும்)
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக



செய்முறை :
  .  புழுங்கல் அரிசியினை தண்ணீரில் சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  .  அரிசியினை கழுவி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.



 .  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இதில் அரைத்த மாவினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொள்ளவும்.



  .  மாவு கெட்டியாக உருண்டையாக உருட்டும் பதம் வரும் வரை கிளறி கொள்ளவும். (சுமார் 3 - 5 நிமிடங்கள் )



  .  மாவு கிளறிய பிறகு அதனை 3 - 5 நிமிடங்கள் ஆறவிடவும்.மாவு ஆறிய பிறகு அதனை Medium Size உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். (கவனிக்க: அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற போல் உருண்டைகளின் அளவினை பார்த்து கொள்ளவும்.)

  .  உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.



 .  சுவையான சத்தான மாலை நேர சிற்றுண்டி ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

முத்திரை!!!


முத்திரை

முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
முத்திரை
முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.
1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.
2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.
3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.
5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.
6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.
7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.
11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.
இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.


Friday, 11 July 2014

பாட்டி வைத்திய குறிப்பு !!!



படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.
பட்டு பாதங்களின் பாதுகாப்பு
வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.
எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...
சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.
கால் ஆணி நீங்க ...
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
உடல் சூட்டை தணிக்க...
சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். வற்றல், ஊறுகாய், நெய், இறைச்சி,
முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் பாலில் 25 கிராம் பூண்டுகளை தட்டிப் போட்டு, வேக வைத்து, ஆற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
செம்பருத்திப் பூவில் கஷாயம் செய்து இத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.
சேற்றுப்புண் குணமாக...
சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.
சமையலறையில் சூடுபட்டு கொள்ளும் போது...
சமையல் வேலை செய்யும் போது சில சமயம் கவனக் குறைவால் சூடுபட்டுக் கொள்ள நேரிடும். இதற்கு பர்னால், அது, இது என்று தேடி ஓட வேண்டியதில்லை. கைக்கு அருகிலேயே இருக்கும் பொடி (தூள்) உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.
ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேன் மிக நல்ல மருந்து
ஆடாதொடை இலை ஐந்தை, 10 மிளகுடன் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம்.
கண்
தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
ஈறுகள் பலம்
சிறிது உப்புத் தூளில் எலுமிச்சை சாறு கலந்து, கைவிரலால் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து விட்டால் ஈறுகள் பலம் பெறும்.
இரத்த இருமல்
தூதுவளை இலை, ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல் (புட்டு மாவு அவிப்பது போல்) செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கேரிஷ்டம் 2 கிராம், திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.
இதய தமனி அடைப்பு
இதய தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 1 தேக்கரண்டி வெங்காயச்சாற்றை 4 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இமை முடி, புருவம்
இமை முடி மற்றும் புருவங்கள் அடர்த்தியாக இல்லாவிட்டால், இரவு படுக்கச் செல்லும் முன் சிறிதளவு விளக்கெண்ணெய்யை இமையில் மற்றும் புருவங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வறட்டு இருமல்
வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அமைத்தையும் ரணமாக்கிவிடும். 2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஜலதோஷம்
வெதுவெதுப்பான பீட்ரூட் சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகி விடும்.
தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.
கல்லீரல்
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தேனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம்.
கல்லீரலில் ஏற்படும் எல்லாவித நோய்களையும் தேன் குணப்படுத்தும்.
காமாலை
கீழாநெல்லி இலையை சுத்தம் செய்து, அரைத்து தினமும் காலையில் 1 நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் காமாலை குணமாகும்.
மஞ்சள் கரிசிலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு 2 முறைகள் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய்கள் வராது.
தினமும் 2 வேளை தேன் குடித்தால் எல்லாவிதமான காமாலை நோய்களும் குணமாகும்.
பற்களில் கறை
சிறிது எலுமிச்சைச் சாறுடன் உப்புத்தூள் கலந்து கறை உள்ள இடங்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை நீங்கி விடும்.
காதுவலி
காதில் ஏற்படும் வலிக்கு காற்றொட்டிக் கொழுந்து, பூண்டு, வசம்பு ஆகியவற்றைசம எடை எடுத்து, அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் போதிய அளவு ஊற்றி, காய்ச்சி இறக்கி ஆறிய பிறகு இளஞ்சூட்டுடன் காதில் ஒரு துளி விட்டால் காதுவலி நாளடைவில் நீங்கும்.

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!!!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது.
மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது. மலச்சிக்கல் : மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் : உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.
H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

  
                                                                                  









Monday, 7 July 2014

சமையல் பழகுவோமா!!!

மகளின் திருமணத்தை நடத்துவதில் தந்தைக்குச் சுமை இருக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கு நிச்சயம் ஒரு கவலை இருக்கும். அது மகள் தனிக் குடித்தனம் போய் என்ன செய்யப் போகிறாளோ என்பதுதான். ஏனென்றால் இன்றைய பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்து வேலைக்குப் போன பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர். கல்லூரி, அதன்பின் அலுவலகம் என்று அலைந்து திரிந்ததால் அம்மாவிடம் நிச்சயம் சமையலைப் படித்த பெண்கள் நூற்றுக்கு ஓரிருவர் தான் இருப்பார்கள். இவர்களுக்கு இந்தக் காலத்தில் இன்டர்நெட் நல்ல துணையாய் இருக்கிறது. பல இணைய தளங்கள் அனைத்து உணவுகளையும் தயாரிக்கும் முறைகளை மிக விவரமாகப் பட்டியலிடுகின்றன. என்ன என்ன பொருட்கள் தேவை, அவற்றை என்ன செய்திட வேண்டும் என்று விபரங்களுடன் போட்டுள்ளனர். சில இணைய தளங்களில் வீடியோ மூலம் சமைத்தே காட்டுகின்றனர். இவற்றில் சில தளங்களை இங்கு பார்க்கலாம்.
1.http://www.indobase.com/recipes/: இந்த தளம் மிகவும் விரிவாகத் தொடங்கி ஏறத்தாழ நாம் நினைக்கும் அனைத்து உணவு தயாரிக்கும் முறைகளையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமின்றி என்ன என்ன உணவு மற்றும் உணவுப் பண்டங்கள் எந்த பண்டிகையின்போது செய்திட வேண்டும் எனவும் காட்டுகிறது. அத்துடன் ஒவ்வொரு பிரதேசமாக அங்கு உண்ணப்படும் வகையினைத் தருகிறது.இந்த தளம் இருந்தால் எந்தக் கவலையுமின்றி உணவினைத் தயாரிக்கலாம். மனைவியைப் புதிதாக மணம் முடித்த மகளுக்குத் துணையாக அனுப்பிய பின், தந்தைகளும் இதனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
2. http://www.manjulaskitchen.com/: இது ஓர் அருமையான சமையல் தளம் . உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்களைக் கொண்டு பிரிவுகள் இருக்கின்றன. உணவுப் பதார்த்தங்கள் வகையிலும் பிரிவுகள் உள்ளன. இதன் சிறப்பு இங்கே தரப்படும் வீடியோ விளக்கப்படங்கள். நமக்குத் தேவையானதை டவுண்லோட் செய்து கூட பின் பயன்படுத்தி சமைத்துக் கொள்ளலாம். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகள் தரப்படுகின்றன.
3.http://www.ifood.tv/ : இந்த தளமும் நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ கிளிப்களைத் தருகிறது. ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் தரும் வீடியோ காட்சிகளும் உள்ளன. தயிர் சாதம் தயாரிப்பது எப்படி என்ற வீடியோ கூட இதில் உள்ளது.
தேவையான உணவினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து பழகிக் கொள்ளும் வகையில் மேலே சொல்லப்பட்ட அனைத்து தளங்களும் உள்ளன. இனி என்ன கவலை! இந்த முகவரிகளிலிருந்து முக்கிய உணவு தயாரிக்கும் வீடியோக்களை டவுண்லோட் செய்து சிடியில் காப்பி செய்து மகளுக்கான சீர் செய்திடுகையில் சேர்த்துக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

விண்டோஸ் வேகம் பெற இனியவை இருபது!!!

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.
1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெற http://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.
2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினைப் பெறhttp://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். இதனைப் பெற http://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்றமுகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.
4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.
5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.
6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.
7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.
8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.
10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.
11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.
12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனைhttp://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.
13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.
14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.
15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.
16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.
18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.
19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.
20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.