இன்றைய காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடலைத் தாங்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நகரவோ, அசையவோ முடியாமல் பெரும் பிரச்சனையை அனுபவிக்கக்கூடும்.
அதிலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உராய்வு நீக்கிப் பொருளின் உற்பத்தி குறைந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள தசைநார்களில் உட்காயங்கள் ஏற்பட்டு, வலிமையை இழக்கின்றன.
இப்படி வலிமையிழந்துள்ள எலும்புகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்துவதில் உணவுகளும் பானங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
உராய்வு நீக்கி
நேச்சுரல் ஸ்மூத்தி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூத்தி மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இந்த ஸ்மூத்தியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள், அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் உள்ள உட்காயங்கள் குணமாகி, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சத்துக்கள்
முக்கியமாக இந்த ஸ்மூத்தியில் வைட்டமின் சி, புரோமிலைன், சிலிகான் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலிமையை வழங்கி, உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்யும். சரி, இப்போது அந்த ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
பட்டை – 1/2 டீஸ்பூன்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
ஓட்ஸ் – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடித்து வந்தால், மூட்டு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதைக் காண்பீர்கள்.

இயற்கையாக எலும்பு மூட்டுகளில் உராய்வு நீக்கிப் பொருள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வயது அதிகரிக்கும் போது அது குறையும். எனவே ஒருவருக்கு வயது அதிகமாகும் போது, எலும்புகளின் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும். இதனால் வயதான காலத்தில் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நேச்சுரல் ஸ்மூத்தி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூத்தி மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இந்த ஸ்மூத்தியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள், அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் உள்ள உட்காயங்கள் குணமாகி, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சத்துக்கள்
முக்கியமாக இந்த ஸ்மூத்தியில் வைட்டமின் சி, புரோமிலைன், சிலிகான் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலிமையை வழங்கி, உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்யும். சரி, இப்போது அந்த ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
பட்டை – 1/2 டீஸ்பூன்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
ஓட்ஸ் – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடித்து வந்தால், மூட்டு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதைக் காண்பீர்கள்.
No comments:
Post a Comment