பிறந்தநாள் ,திருமணம் , போன்ற நிகழ்வுகளுக்கு நம்முடைய உறவினர்கள் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பிவைத்திட விரும்புவோம் அதிலும் குறிப்பிட்டநபரின் பெயர் போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் வாழ்த்து அட்டை இருந்தால் பெறுபவர் அதிகமகிழ்ச்சி அடைவார் அதனால் இதனை நாமே முயன்றுhttp://www.canva.com எனும் இணைய பயன்பாட்டின் வாயிலாக வடிவமைத்து அச்சிட்டு அனுப்பிடமுடியும் இதற்காக முதலில் நம்முடைய கணினியில் இணையஉலாவியை திறந்து கொள்க அதனுடைய முகவரிபட்டையில்www.canva.com என்ற இணைய முகவரியிட்டு இந்த இணைய பக்கத்திற்கு உள்நுழைவுசெய்திடுக அதில் பயனாளர் பெயர் கடவுச்சொற்களுடன் தனியாக நமக்கென கணக்கு ஒன்றினை துவங்கி உள்நுழைவு செய்திடுக திரையின் தலைப்பில் மேலே வலதுபுறமூலையில் உள்ள moreஎனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் Events என்ற தலைப்பின்கீழுள்ள Card என்பதை தெரிவுசெய்து சொடுக்குக உடன் புதிய தாவியின் திரையில்காலி பலகமும் இடதுபுற திரையில் birthdays, Valentine’s Day, wedding anniversaries, “thank you teacher”, new year, Christmas என்பனபோன்ற ஏராளமான வடிவமைப்புகளும் திரையில் தோன்றிடும் அவைகளுள் கட்டணமில்லாத நமக்கு விருப்பமானதை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் மாதிரி பலகத்தில் தேவையான விவர உரைகளை உள்ளீடு செய்து கொண்டு தேவையான வண்ணம் எழுத்துரு புறவடிவமைப்புஆகியவற்றை தெரிவுசெய்து வடிவமைத்து கொள்க இறுதியாக அச்சிட வேண்டுமெனில் PDFவடிவமைப்பில் சேமித்துகொண்டபின்னர் பதிவிறக்கம் செய்து இதனை அச்சிட்டு கொள்க மின்னஞ்சல் அல்லது முகநூல் வாயிலாக அனுப்பிட விரும்பினால் PNG or JPG வடிவமைப்பில் சேமித்து கொண்டபின்னர் பதிவிறக்கம் செய்து இதனை அனுப்பி வைத்திடுக
No comments:
Post a Comment