சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை
சப்பாத்தி/ வெரைட்டி ரைஸ்-க்கு தொட்டு கொள்ள சீக்கிரமாய் சமைக்க கூடியது. வெங்காயம், தக்காளி எதுவும் நறுக்க தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் வெட்டினால் போதும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - கால் கிலோ (உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி கொள்ளவும் )
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் : மல்லி தூள் (1 : 1 1 /2 ) (அல்லது) மிளகு தூள் - உங்கள் கார விருப்ப அளவை பொருத்து. நான் மிளகு தூள் சேர்த்துள்ளேன்.
உப்பு, மல்லி இலை - தேவைக்கேற்ப
தேங்காய் பவுடர் (optional ) - 1 ஸ்பூன்
செய்முறை:
·
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதன் மேல் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அ) மிளகு தூள் , உப்பு சேர்த்து கிளறவும். தேவைபட்டால் கால் டம்ளர் நீர் விட்டு கிளறினால் உப்பு, காரம் சீராக இருக்கும்.
குறைந்த தணலில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். (உருளை கிழங்கை பெரிதாக நறுக்கி இருந்தால் வேக சற்று நேரம் பிடிக்கும்).
மல்லி தலை, தேங்காய் பவுடர் சேர்த்து இறக்கி விடலாம்.
No comments:
Post a Comment