வாங்கிபாத் - Vangi Bath Recipe - Brinjal Rice
- No onion No Garlic Recipe
இதில் வெங்காயம் , தக்காளி சேர்க்க தேவையில்லை. இது No onion No Garlic Recipe.
இதற்கு பச்சை கத்திரிக்காயினை
பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி பச்சை கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகும் மசிந்துவிடாமல் இருப்பதால் சாதத்தினை கலந்த பிறகு நன்றாக இருக்கும்.
இதில் புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கத்திரிகாயுடன் சேர்த்து வேகவிடவேண்டும்.முதலில் கத்திரிக்காயினை கண்டிப்பாக 1 - 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு புளி தண்ணீர் சேர்க்கவும்.
நீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. பச்சை கத்திரிக்காய் - 1/4 கிலோ
. வேகவைத்த சாதம் - 3 கப்
. புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
. கருவேப்பிலை - 10 இலை
. மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
. உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடித்து கொள்ள :
. கடலைப்பருப்பு - 1 மேஜை கரண்டி
. உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
. காய்ந்த மிளகாய் - 2 , தனியா - 1 தே.கரண்டி
. வேர்க்கடலை - 1 மேஜை கரண்டி
தாளிக்க :
. எண்ணெய் - 1 மேஜை கரண்டி
. கடுகு, கடலைப்பருப்பு - தாளிக்க
செய்முறை :
. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு வறுத்து ,சிறிது நேரம் ஆறவைத்த பிறகு பொடித்து கொள்ளவும்.
. கத்திரிகாயினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புளியினை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைப்பருப்பு தாளித்து அத்துடன் நறுக்கிய கத்திரிக்காயினை போட்டு 1 நிமிடம் நன்றாக வதக்கவும்.
. இத்துடன் மஞ்சள் தூள் + சிறிது உப்பு சேர்த்து மேலும் 1 - 2 நிமிடங்கள் வதக்கவும்.
. பிறகு இதில் கரைத்து வைத்து இருக்கும் புளி கரைசலினை ஊற்றி நன்றாக தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
. கத்திரிகாயில் தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு, அதில் பொடித்து வைத்துள்ள பொடி + கருவேப்பிலை சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.
. இதில், வேகவைத்த சாதத்தினை சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். ( அவரவர் காரத்திற்கு ஏற்ப பொடியினை சேர்த்து கொள்ளவும். )
. சுவையான சத்தான வாங்கிபாத் ரெடி. இதனை வறுவல், சிப்ஸுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment