Tuesday, 3 December 2013

"Captcha Image Verification " தொல்லையிலிருந்து விடுபட எளிய வழி!!!

"Captcha Image Verification " தொல்லையிலிருந்து விடுபட எளிய வழி

நாம் இணையத்தள பக்கங்களில் நுழையும் போது நமது முழு விவரங்களை அளிக்கும் வகையில் விண்ணப்பம் இருக்கும் அதனை பூர்த்தி செய்த பின்பு கடைசியாக "Captcha Image Verification "என்ற ஒரு பெட்டி தோன்றும் .இதில் உள்ள வார்த்தைகளை சரியாக கொடுத்தால் தான் அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளகூடிய அளவில் அமைத்திருப்பார்கள்.




இவை அந்த தளத்தின் பாதுகாப்பினை கருதியும் மற்றும் தானியங்கி பதிவு முறை என்பதாலும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு முறையினை அமைக்கின்றனர். மேலும் நாம் ஒரு சில தளத்தின் பதிவுகளை படித்த பின்பு அந்த பதிவினை பற்றி கருத்தளிக்கும் போதும் இதுபோன்ற ஒரு "Captcha Image Verification " பெட்டி இருக்கும். இதில் உள்ள வார்த்தையினை சரியாக பூர்த்திசெய்தபின்புதான் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். இவை அவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டாலும், ஒரு சில நேரங்களில் நம்மை வெறுப்பூட்டும்.

இதுமட்டுமல்லாமல் சில பார்வைகுறையுள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் போன்றவர்களால் இந்த வார்த்தையினை எளிதாக காணமுடியாது. சிலநேரங்களில் அனைவருக்குமே இந்த வார்த்தைகள் புரியாது. 

இதற்காக ஏற்படுத்தப்பட்டதே " RUMOLA" என்ற புதிய பிரவுசர் Addon. இது நமக்கு பெரிதும் உதவுகின்றது. இதனை அமைத்துவிட்டால் "Captcha ImageVerification "வரும் இடங்களில் தாமாகவே இவை வார்த்தைகளை பூர்த்தி செய்துகொள்கிறது. 

Rumola Addon- நிறுவுவது எப்படி?

முதலில் இதனை பயன்படுத்த இதில் ஒரு கணக்கினை துவங்கிக்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி நமக்கு எந்த பிரவுசருக்கு (Browser) இந்த Addon வசதி தேவையோ அதற்கு ஏற்ப நுழையுங்கள்.

01 Chrome பிரவுசருக்கான லிங்க் : CHROME LINK

02. Firefox பிரவுசருக்கான லிங்க் : FIREFOX LINK

03. Safari பிரவுசருக்கான லிங்க் : SAFARI LINK

RUMOLA REGISTER -செய்ய 

இதனை நமது பிரவுசரில் நிறுவிய பின்,பிரவுசரை ஒரு முறை Restart செய்யவும். 


இதன் பின் இது ஒவ்வொரு முறையும் நாம் பிரவுசரை திறக்கையில் தாமாகவே செயல்பட துவங்கிவிடும். எங்கே எல்லாம் இது போன்ற "Captcha Image Verification " வருகிறதோ அந்த பெட்டியில் நாம் சொடுக்கினால் இவை தாமாகவே வார்த்தைகளை பூர்த்திசெய்துகொள்ளும்.






இதனால் நமக்கு நேரம் மிச்சமாகிறது மற்றும் இது நிச்சயம் பலருக்கு பயன்படக்கூடியது. இதை பற்றி நிறையபேருக்கு தெரிந்திருக்கும் என எண்ணுகிறேன், தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இப்பதிவினை பதிந்துள்ளேன்.

No comments:

Post a Comment