Sunday, 26 October 2014

மவுஸ்!!!

மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலை



எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களின் இயக்கத்திலும் மவுஸ் பயன்படுத்திச் சிறப்பான வேலைகளை மேற்கொள்ளலாம். மவுஸினால் மட்டுமே சில வேலைகளை எளிதாகச் செய்ய முடியும் என்ற அளவிற்கு பல பார்மட்டிங் பணிகள், டெக்ஸ்ட் எடிட்டிங் வேலைகள் நிறைய உண்டு.

இங்கு எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் சில மவுஸ் பயன்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை பொதுவாகக் கீ போர்டின் உதவியுடன் பல நிலைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளாகவும் மவுஸ் மூலம் சில கிளிக்குகளில் மேற்கொள்ளக் கூடிய வேலையாகவும் இருப்பதனைக் காணலாம்.

வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் முழுவதையும் ஒரே மவுஸ் கிளிக்கில் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு மவுஸ் பாய்ண்ட்டரை இடது பக்கம் உள்ள மார்ஜின் ஓரத்திற்குக் கொண்டு செல்லவும்.

அது வலது பக்கம் சற்று சாய்ந்த மேல் நோக்கிய அம்புக் குறியாக மாறும். உடன் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொள்ளுங்கள். பின் இடது மவுஸ் பட்டனை அழுத்துங்கள். டாகுமெண்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாக இருந்தாலும் உடனே செலக்ட் செய்யப்படும்.


இதனை இன்னொரு வழியிலும் நிறைவேற்றலாம். அம்புக் குறியை இடது ஓரத்திற்குக் கொண்டு சென்றவுடன் மூன்று முறை இடது மவுஸ் கிளிக் செய்திடவும். டாகுமெண்ட் முழுவதும் செலக்ட் ஆகி நிற்கும்.


வேர்டில் சில வகை டேட்டாக்களை அமைக்கையில் அவற்றில் சிலவற்றை மட்டும் நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக ஐந்து வரிகளில் எட்டாவது கேரக்டரிலிருந்து பன்னிரெண்டாம் கேரக்டர் வரை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.


மற்றவை எல்லாம் நாம் மேற்கொள்ள இருக்கும் வேலைக்குத் தேவையற்றவையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க கீ போர்டு அல்லது மவுஸ் மூலம் மேற்கொள்ள வேர்ட் தொகுப்பில் வசதி உள்ளது.


1. எந்த டேட்டா தொகுப்பினை (Block) ங்கள் தனியே எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறீர்களோ அந்தத் தொகுப்பின் இடது மூலைக்கு மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும்.


2. உடன் Ctrl+Shft+F8 என்ற கீகளை அழுத்தவும்.கீழாக ஸ்டேட்டஸ் பாரில் COL என்ற எழுத்துக்கள் காட்டப்படும்.


இனி மவுஸ் கர்சரை இழுத்து எந்த பிளாக்கினை நீங்கள் தனியே செலக்ட் செய்திட வேண்டுமோ அதனை அமைக்கலாம். நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் செலக்ட் செய்யப்படும். இவ்வாறு செலக்ட் செய்யப் பட்ட டெக்ஸ்ட்டை வழக்கமாக செலக்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் டினை எப்படியெல்லாம் மாற்றுகிறோமோ அதே போல மாற்றலாம்.

டெலீட் கீ அழுத்தினால் அந்த பிளாக் டெக்ஸ்ட் மட்டும் அழிந்து போகும். மேலே சொன்ன வழிக்கு மாற்று வழி ஒன்றும் உள்ளது. ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு மவுஸ் கர்சரை பிளாக் தொடங்கும் இடத்தில் வைத்து தேவையான டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் தேர்ந்தெடுக்கலாம்.

மவுஸ் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும், தொடர்ந்து பல சொற்களைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது. எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அந்த சொல்லில் கர்சரைக் கொண்டு சென்று பின் டபுள் கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும்.

தொடர்ந்து இன்னும் கூடுதலாகச் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் டபுள் கிளிக் செய்தவுடன் அப்படியே தொடர்ந்து மவுஸை இழுத்தால் டெக்ஸ்ட் காப்பி ஆகும்.


ஒரு டெக்ஸ்ட் பகுதியை மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று எப்படி தேர்ந்தெடுப்பது என்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க வேண்டிய இடத்தில் கர்சரை வைத்து இடது மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால் டெக்ஸ்ட் செலக்ட் ஆகும்.


இதைக் காட்டிலும் வேகமாக டெக்ஸ்ட் செலக்ட் ஆகும் வழி ஒன்று உள்ளது. எந்த இடத்திலிருந்து டெக்ஸ்ட் செலக்ஷன் ஆக வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று அமைக்கவும். அதன்பின் எதனையும் அழுத்தாமல் கர்சரை நகர்த்தவும்.

எங்கு இந்த செலக்ஷன் முடிய வேண்டுமோ அங்கு சென்று கர்சரை மீண்டும் அமைக்கவும். பின் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் இடது பட்டனில் கிளிக் செய்திடவும். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.


டாகுமெண்ட் தயார் செய்து பின் எடிட் செய்கையில் குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது வாக்கியங்கள் அதன் இடத்தில் இல்லாமல் இன்னொரு இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோம்.

இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் கட் (இtணூடூ+ஙீ) செய்து அதன்பின் எந்த இடத்தில் அமைய வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை அமைத்து பேஸ்ட் (Ctrl +V) செய்திடலாம். இந்த வேலையினை வேறு எளிதான வழியில் மவுஸ் கர்சரைக் கொண்டு செய்திடலாம்.

முதலில் எந்த சொற்களை எடுத்து அமைக்க வேண்டுமோ அந்த சொற்களை ஹைலைட் செய்திடவும். பின் இவ்வாறு ஹைலைட் செய்து செலக்ட் செய்த டெக்ஸ்ட்டில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று மவுஸ் பட்டனைக் கிளிக் செய்தவாறு பிடித்துக் கொள்ளவும்.

இப்போது புள்ளிகளால் ஆன ஒரு கோடு தெரியும். இதனை இப்போது அப்படியே மவுஸ் கர்சரால் இழுத்துச் சென்று எந்த இடத்தில் செருக வேண்டுமோ அந்த இடத்தில் சென்று மவுஸ் பட்டனை விட்டுவிடவும். ஹைலைட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் நீங்கள் இலக்கு வைத்த இடத்தில் செருகப்பட்டு இடம் பிடித்திருக்கும்.


டாகுமெண்ட் வழக்கமாக 100% அளவில் திரையில் காட்டப்படும். சில காரணங்களுக்காக அதனைச் சுருக்கிப் பார்க்க விரும்புவோம். அப்போது மேலே மெனு பாரில் உள்ள கட்டத்தில் 100% என்பதனை 75% என மாற்றலாம். பெரிதாகத் தெரிய, ஸூம் இன் செய்திட வேண்டும் என்றால் இதனை 100க்கு மேலாக அதிகப்படுத்தலாம்.

இந்த ஸூம் செய்வதற்கு மவுஸ் மூலமாக இன்னொரு வழியும் உள்ளது. கர்சரை டாகுமெண்ட்டில் வைத்துக் கொண்டு கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அதில் உள்ள சிறிய வீலை முன்னே பின்னே நகர்த்தவும். ஒரு சிறிய நகர்த்தலுக்கு அது நகர்த்தப்படும் திசையைப் பொறுத்து 10% அதிகமாகும் அல்லது குறையும்.


டேப்ஸ் டயலாக் பாக்ஸ் வேண்டுமா? மேலே உள்ள ரூலர் அருகே கர்சரைக் கொண்டு சென்று ரூலரின் கீழாக கர்சரை அமைத்து டபுள் கிளிக் செய்தால் டேப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அப்போது ஒரு டேப் மார்க் ஒன்று உண்டாகும். இதனை நீக்க வேண்டும் என எண்ணினால் டேப் டயலாக் பாக்ஸில் அதனைச் செய்யலாம்; அல்லது அதன் மீது கர்சரை வைத்து மேலே இழுத்துச் சென்று விடலாம்.


உடனே இடது பக்கம் ரூலரில் இது போல செய்தால் என்ன நடக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்குமே! இடது பக்கம் ரூலரில் மேலே சுட்டிக் காட்டியது போல் செய்தால் பேஜ் செட் அப் பாக்ஸ் கிடைக்கும்.


மேலே தரப்பட்ட எதனையும் என் மவுஸ் மூலம் செய்ய முடியவில்லையே என்று யாரும் கவலைப் பட வேண்டாம். அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டரில் மவுஸின் இந்த செயல்பாடு செயல்படுத்தப்பட்டிருக்காது.

மவுஸ் மூலம் உங்கள் டெக்ஸ்ட்டை நகர்த்துவது,செலக்ட் செய்வது போன்ற செயல்களுக்கு அதனை அவ்வாறு இயக்கும் வகையில் செட் செய்திட வேண்டும். இதற்கு Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைத் திறக்கும்.

பின் Edit டேப்பில் கிளிக் செய்திடவும்.பின் Drag and Drop Text Editing என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் இந்த டயலாக் பாக்ஸினை மூட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி மவுஸ் டெக்ஸ்ட்டுடன் எளிதாக இயங்கும்.


வேர்ட் டிப்ஸ்


* சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம்.

எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.


*வேர்ட் தொகுப்பில் சொற்கள் எங்குள்ளது என்று கண்டறிய பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) கட்டளை நமக்கு நன்றாக உதவுகிறது. சொல் மட்டுமின்றி எந்த கேரக்டரையும் எங்குள்ளது என்று மிக எளிமையான வழியில் தேடி அதன் இடத்தில் இன்னொன்றை அமைக்கவும் வசதி தருகிறது.

ஆனால் இதில் என்ன பிரச்னை என்றால் இந்த பைண்ட் அன்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட் மேலாக அமர்ந்து கொண்டு நம்மை டாகுமெண்ட்டை முழுமையாகப் பார்க்க விடாமல் தடுக்கிறது. இவ்வாறு டயலாக் பாக்ஸ் நம் டாகுமெண்ட்டை மறைப்பதனை நீக்க ஒரு சுற்று வழி உள்ளது.

1. முதலில் வழக்கம் போல பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸை கண்ட்ரோல்+எப் (Ctrl+F) அழுத்தியோ அல்லது Edit மெனுவில் Find தேர்ந்தெடுத்தோ பெறவும். கண்டறிய வேண்டிய சொல்லை அமைத்து என்டர் தட்டினால் அந்த சொல் இருக்கும் முதல் இடத்தினை டாகுமெண்ட் காட்டும்.

2. இப்போது சொல் இருக்கும் இடத்தைக் காட்டிய பிறகும் அடுத்த இடங்களைக் காட்ட டயலாக் பாக்ஸ் டாகுமெண்ட்டை மறைத்தபடி நிற்கும். இப்போது கேன்சல் பட்டன் அழுத்தி அல்லது எஸ்கேப் பட்டனை அழுத்தி டயலாக் பாக்ஸினை மறையச் செய்திடவும்.

நீங்கள் தேடிய சொல் உள்ள அடுத்த அடுத்த இடத்தினை அறிய ஜஸ்ட் Shft+F4 அழுத்தவும். டயலாக் பாக்ஸ் இல்லாமலேயே நீங்கள் காண விரும்பும் சொல் எங்கிருக்கிறது என்று காட்டப்படும். Find Next அழுத்தினால் என்ன நடக்குமோ அதுவே நடத்தப்படும்.

* வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.


1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.


2.மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.


3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.


* அண்மையில் ஒரு வாசகர் தான் வேர்ட் டாகுமெண்ட்களில் பெயர்களை டைப் செய்து டேபிள் தயாரிப்பதாகவும், அதனை சார்ட் செய்திட அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று,

பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டுவதாகவும் எழுதி உள்ளார். இந்த பழக்கம் தேவையே இல்லை. வேர்ட் தொகுப்பிலேயே இந்த தகவல் வரிசைப்படுத்தும் வசதி உள்ளது.


வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம்.


வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl + U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.

ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl + Shft + W) கண்ட்ரோல்+ஷிப்ட்+டபிள்யு. வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும்.

என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள்.

அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!

Hard Disk!!!

"உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?



"உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது" என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா? அது ஒன்றும் பெரிய பிரச்னையே அல்ல. இதோ  அதற்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

முதலில்,  ஹார்ட் டிஸ்க்கில் உள்ள இடம் குறைந்துவிட்டதாக உங்களுக்கு ஒரு தகவல் வரும். உடனே என்னவோ, ஏதோவென்று பதற வேண்டாம்.

உங்கள் கணினியில் நீங்கள் எப்பொழுதாவது பயன்படுத்தவென பதிந்திருக்கும் மென்பொருள்களை நீக்குங்கள். அடுத்து temp கோப்புகளை நீக்குங்கள்.

அப்படி நீக்கியும் கூட,  உங்களுடைய கணினியில் மீண்டும் 'ஹார்ட் டிஸ்கில் போதுமான இடம் இல்லை. கோப்புகளை நீக்குங்கள்'  என்ற எச்சரிக்கை செய்தியைக் காட்டினால், கீழ்க்கண்ட மென்பொருள்கள் உங்களுக்கு உதவும்.

இம்மென்பொருள் எதற்காக என்றால், உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ட்ரைவ்களில் (அதாவது C:, D:, E:, F:, என ஹார்ட் டிஸ்க் பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கும் இல்லையா? )ஒவ்வொரு டிரைவும் எந்தளவிற்கு கோப்புகளை கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு டிரைவின் கொள்ளவும் எவ்வளவு இருக்கிறது, அந்த டிரைவில் எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்துள்ளன என்பதை நமக்கு சரியாக காட்ட இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.

டிரீ சைஸ் ஃபீரீ மென்பொருள் -(TREE SIZE FREE)

இம்மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் ஒவ்வொன்றும் எவ்வளவு இடத்தை பெற்றுள்ளது? ஒவ்வொரு டிரைவில் எந்த கோப்புகள் அதிகமான இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன என்பதை துல்லியமாக ஒரு சில வினாடிகள் உங்களுக்கு காட்டும்.

கிராஃபிக்ஸ் பார் மூலம் ஒவ்வொரு கோப்பும் அந்த டிரைவில் எடுத்துள்ள இடத்தை காட்டும். இந்த கிராஃபிக்ஸ் பார் மற்றும் வரைபட வடிவில் உள்ள இந்த அளவீடுகளில் உள்ள வண்ணங்களை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம்.

இதன்  அடிப்படையில் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை நீக்குவது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: http://www.jamsoftware.com/treesize_free

இதனை போன்றே ஹார்ட் டிஸ்க்கில் அதிக அளவு இடம்பெற்றுள்ள கோப்புகள் மற்றும் டிரைவ்களை கண்டறிய உதவும் மற்ற மென்பொருள்:

2. WINDIRSTAT
தறவிக்கம் செய்ய: http://windirstat.info/download.html
3.  XINORBIS
தறவிக்கம் செய்ய: http://www.xinorbis.com/
4.  RIDNACS
தறவிக்கம் செய்ய:  http://www.splashsoft.de/Freeware/ridnacs-disk-space-usage-analyzer.html
5. SPACE SNIFFER
தறவிக்கம் செய்ய: http://www.uderzo.it/main_products/space_sniffer/

குறிப்பு: டிஸ்க் ஃபைட்டர் என்ற இந்த மென்பொருளும் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி, உங்கள் Hard Disk -ல் உள்ள இடத்தை மீட்டுக்கொடுக்கிறது.

தரவிறக்கம் செய்ய: http://www.spamfighter.com/FULL-DISKfighter/Functions/Download.asp 

Search Engines!!!

இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)



நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன். 

Google  #1

இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை.
Click Here go to Website





Yahoo!   #4

கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது.
Click Here go to Website





Bing   #25 

பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். .
Click Here go to Website





Baidu #6

சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்..
Click Here go to Website





Yandex #24

இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்..
Click Here go to Website





Go.com #40

Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
Click Here go to Website





Ask #5

இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர்.
Click Here go to Website





Sohu #39

இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும்.
Click Here go to Website





AOL #49

கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்..
Click Here go to Website





Technorati #890

பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும்.
Click Here go to Website





Lycos #1551

Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும்.
Click Here go to Website





AltaVista #3366

யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது.
Click Here go to Website





Dogpile #2891

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





My Excite #3494

மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு அங்கமாகும்.
Click Here go to Website





Infospace #1658

இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த Dogpiple தளமும் இவர்களுடையதே.
Click Here go to Website





All the Web #13653

யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த தளம்.
Click Here go to Website





Kosmix #8,355

இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும்.
Click Here go to Website





DuckDuckGo #10,411

இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது.
Click Here go to Website





Mamma #31,896

தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
Click Here go to Website





blekko #3,013

சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி புரிகிறது.
Click Here go to Website





Yebol #226,115

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





Open Directory Project #483

Netscape தளத்தின் வெளியீடாகும்.
Click Here go to Website





AboutUs #1,456

ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு பெரும் உதவி புரிகிறது.
Click Here go to Website





Business.com #2,478

இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory ஆகவும் பயன்படுகிறது.
Click Here go to Website





Yahoo!Directory #4

யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும்.
Click Here go to Website





Best of the Web #4,531

நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது.
Click Here go to Website

கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய!!!

கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய



உலகில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களுள் இந்திய ரயில்வே துறையும் ஒன்று. சமீப காலமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் மேப் உதவியுடன் இந்திய ரயில்கள் தற்போது பயணித்து கொண்டிருக்கும் வசதியை அளித்துள்ளது.


இதற்க்காக Rail Radar என்ற புதிய தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த தளத்தில் சுமார் 6500 பயணிகள் ரயில்களின் விவரத்தை கண்டறிய முடியும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் இந்த தளம் தானாகவே தகவல்களை புதிப்பித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மொபைல் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம். இந்தியா முழுவதும் அமைத்துள்ள சுமார் 6000 க்கும் அதிகமான ரயில் தகவல் மையங்களில் இருந்து தகவல்களை தானியங்கியாகவே சேகரித்து தகவல்களை தருகிறது.


இந்த தளத்திற்கு Rail Radar சென்று உங்களுக்கு தேவையான ரயிலின் விவரத்தை கண்டறிய Zoom செய்து அந்த ரயில் ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த ரயில் கடைசியாக கடந்த ரயில் நிலையத்தையும் மற்றும் அடுத்து வர இருக்கும் ரயில் நிலையத்தையும் தெரிவிக்கும்.  அல்லது அதில் சைட்பாரில் உள்ள Search என்பதை அழுத்தி குறிப்பிட்ட ரயிலின் பெயரையோ அல்லது ரயில் எண்ணையோ கொடுத்தால் அந்த ரயிலின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். 
இதில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த தளத்தின் மூலம் லோக்கல் ரயில்களின் விவரங்களை கூட அறிய முடிகிறது. 
காலதாமதமான ரயில்களை சிவப்பு நிறத்திலும் சரியான நேரத்தில் செல்லும் ரெயில்களை நீல நிறத்திலும் இந்த தளம் பிரித்து காட்டுகிறது. பயனுள்ள இந்த சேவையை அனைவரும் விரும்புவர் என்பதில் சந்தேகம் இல்லை.

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்!!!

VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்.....!!





கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு குறிப்பிடுகிறேன்.

1. Add Watermarks

குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.

அதற்க்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools - Effects and Filters - Video Effects - Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.

2. Video Converter

நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க

Media - Open File - Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.

அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நான் மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.

3. Free Online Radio

VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும்.

இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.

Android Rooting பற்றி!!!

Android Rooting பற்றி





Android Rooting பற்றி பதில் தளத்தில் நண்பர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். ஏற்கனவே அது குறித்து பதிவு எழுத நினைத்து இருந்தாலும் அதன் பாதுகாப்பு காரணங்கள் கருதி எழுதவில்லை. நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம் :-)
Android Rooting என்றால் என்ன?
Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல. 
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். 
பலன்கள்: 
Custom Software (ROM’s):
ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும். 
Custom Themes:
Android Theme – ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. 
Speed and Battery:
முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும். ஆனால் இரண்டும் சேர்ந்து கிடைக்காது. Speed அதிகம் வேண்டும் என்றால் Battery Life குறையும். Battery life அதிகம் வேண்டும் என்றால் Speed குறையும்.  [தகவலைமின்னஞ்சல் மூலம் சொன்ன நண்பர் விக்னேஷ்க்கு நன்றி]
Android OS Upgrade:
மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும். 
இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும். 
குறைபாடுகள்: 
பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும். 
Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியாது.
Android Phone – ஐ Root செய்வது எப்படி? 
முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். 
1இப்போது SuperOneClick என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் “USB Debugging” என்பதை enable செய்யவும். 
3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும். 
5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.  
Android Phone – இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:  
2. z4root

கணினியின் வேகம் குறைய காரணம்!!!

கணினியின் வேகம் குறைய காரணம்?????????????????
புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்: 
  1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
  3. Data Corruption
  4. அதிக சூடாகுதல்
  5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  6. Hardware Problems
  7. Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :
உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.
Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.
Run ScanDisk - இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.
இதை செய்ய - My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check 
இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.
அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.
Run Defrag - இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>>  Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து,  Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.
தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும். 
கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும்,  இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.
Virus பிரச்சினைகள் 
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.
Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க  வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில்  “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
 
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.
இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.
மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.
கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல் 
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.
RAM Memory Increase செய்தல் 
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.
உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.
 Registry Cleaner பயன்படுத்துதல் 
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில  Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.
குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற  Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.
Operation System இன்ஸ்டால் செய்தல்
மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.
Hardware பிரச்சினைகள் 
மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.
பழைய கணினி 
உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.
அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும்