கண் நலம் காக்கும் ஹோமியோபதி[2]
இமைக் கட்டிகள் - STYES ;
இமைகளின் அடியில் ஏற்படும் சுரப்பிகளின் வேக்காடு,ஒவ்வாம
ை,ஸ்டாபிலோகாக்கஸ் எனும் பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாக இவை தோன்றுகின்றன.
கண்கட்டிகள் சீழுடன், வலியுடன் அல்லது வலியின்றி, மேலிமை அல்லது கீழிமையில் ஏற்படலாம்.
** மேலிமைக் கட்டியைக் குணப்படுத்த....
பல்சடில்ல, மெர்க் சால்
** கீழிமைக் கட்டியைக் குணப்படுத்த .....
கிராபைட்டிஸ், ரஸ்டாக்ஸ்
** விழி மூலையில் வரும் கட்டிக்கு ....
[குறிப்பு; மேலிமை வீக்கத்திற்கு ’காலிகார்ப்’ எனும் மருந்தும் கீழிமை வீக்கத்திற்கு ‘அபிஸ் மெல்’ எனும் மருந்தும், கண்களைச் சுற்றிலும் ஏற்படும் நீர்வீக்கத்திற்கு ‘ஆர்சனிகம் ஆல்பம்’ என்ற மருந்தும் நல்ல பலனைத் தரும் என்பது நினைவிற் கொள்ள வேண்டியவை]
இமை வாதம்-PTOSIS ;
’பாதிக் கண்கள் மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து’
என்பது திரைக் கவி வரிகள்.
சிலருக்கு முழுமையாகவோ, பாதியாகவோ இமைகள் தொங்கிக் கிடக்கும்.வினாட
ிக்கு வினாடி மூடித் திறக்க வேண்டிய இமைகள் கனத்து, சோர்ந்து, தொங்கிக் கிடக்கும் நிலையே இமை வாதம்.
**இமை வாதத்திற்கு ...... காஸ்டிகம்,காலிபாஸ், ஜெல்சிமியம், கோனியம், ரஸ்டாக்ஸ், செபியா, சிபிலினம் எனப் பல மருந்துகள் இருப்பினும் ஜெல்சிமியம் மருந்து மட்டுமே பெரும்பாலோருக்க
ு நலமளிக்கிறது.
[குறிப்பு; பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாகவும்,பகுதி நேர கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணியாற்றி வரும் ஒரு பெண். திருமணம் ஆகாதவர்.இவருக்க
ு இமைவாதம்.பெரும்பாலான நேரங்களில் முக்கால் பகுதி இமைகளை மூடியபடியே பார்க்க, படிக்க வேண்டிய நிலை.
இரண்டு ஆண்டுகளாக கண் சிறப்பு நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்று வந்த.. அவர் ஹோமியோபதி சிகிச்சைக்கு அரை குறை மனதோடு வந்தார். ஜெல்சிமியம் மருந்தளிக்கப்பட
்டு இரண்டு மாதங்களில் முழு நலம் பெற்றார்.]
No comments:
Post a Comment