இணையத்தில் உலாவும்போது யூடியூபில் வீடியோ பார்ப்பது உங்களுக்கு பிடித்தமானது என்றால் சைடுபிளேயர் (http://sideplayer.com) - இணையதளத்தை நீங்கள் நிச்சயம் விரும்பாலாம்.
இந்த இணையதளம், இணையத்தில் உலாவியபடியே யூடியூப் வீடியோவை பார்த்து ரசிக்க வழி செய்கிறது. அதாவது எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்தியபடியே அதன் பக்கவாட்டில் ஒரு மூலையில் யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.
குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக செயல்படும் இந்தச் சேவை யூடியூப் வீடியோவை பிரவுசரின் ஒரு மூலையில் சின்ன பெட்டியாக தோன்றச்செய்கிறது. ஆக, பார்த்துக்கொண்டிருக்கும் இணையதளத்தில் ஒரு கண் வைத்தபடி வீடியோவை ரசிக்கலாம். வீடியோ தோன்றும் பெட்டியையை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம். அதன் அளவையும் மாற்றிக்கொள்ளலாம்.
வேறு கட்டுப்பாட்டு வசதிகளும் இருக்கின்றன. ஒரு இணையதளத்தில் இருந்து வேறு ஒரு இணையதளத்திற்கு தாவினாலும் பிரச்சினையில்லை. அந்த தளத்தின் மூலையிலும் வீடியோ தோன்றும்.
காட்சி விளக்க வீடியோக்களைப் பார்க்கும் போது அந்த இணையதளத்தில் இருந்தபடியே வீடியோவைப் பார்க்க முடிவது பயன் தரக்கூடியதாக இருக்கும். உதாரணத்திற்கு வேர்ட்பிரஸ் வலைப்பதிவின் பயன்பாட்டை விளக்கும் வீடியோவை பார்த்தபடியே வலைப்பதிவில் அந்த வழிகாட்டுதலை பின்பற்றலாம்.
இணையதள முகவரி:http://sideplayer.com/
No comments:
Post a Comment