Tuesday 19 May 2015

Letter Writing!!!

ஆங்கிலத்தில் கடிதம் எழுத..நாமும் ஆங்கிலக் கடிதங்களை எழுதி அசத்தலாம்.its simple & easy
என்னதான் ஆங்கிலம் படித்திருந்தாலும் தாய்மொழியில் கடிதம் எழுதுவதைப் போல் ஆங்கிலத்தில் சரியான கடிதத்தை எழுத முடியவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக் கின்றனர்.
தாங்கள் எழுதும் ஆங்கிலக் கடிதங்களில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை என்று ஏதாவது தவறு வந்து விடுமோ? இதன் மூலம் நம்முடைய கருத்தில் பெரும் தவறு நேர்ந்துவிடுமோ? என்னும் அச்சம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த அச்சத்தைப் போக்கிட, ஆங்கிலத்தில் பல்வேறு வகையான கடிதங்களைக் கொண்டு ஒரு இணையதளம் செயல்பட்டுவருகிறது.
கடித தளம்
இந்த இணையதளத்தில் ஒப்புதல் (Acceptance), ஒப்புகை (Acknowledgement), உடன்படிக்கை (Agreement), அறிவிப்பு (Announcement), மன்னிப்பு (Apology), மேல் முறையீடு (Appeal), விண்ணப்பம் (Application), நியமனம் (Appointment), மதிப்புயர்வு (Appreciation), அதிகாரமளிப்பு (Authorization), பிறந்தநாள் (Birthday), வணிகம் (Business), நீக்கம் (Cancellation), சான்றளித்தல் (Certification), முறையீடு (Complaint), இரங்கல் (Condolence), உறுதி செய்தல் (Confirmation), வாழ்த்துகள் Congratulations), திறனாய்வு (Criticism), பணி நீக்கம் (Dismissal), நன்கொடை (Donation), ஏற்பிசைவு (Endorsement), வழியனுப்புரை (Farewell), பின் தொடர் (Follow Up), முறைப்படியான (Formal), நட்பு (Friendship), நிதி திரட்டுதல் (Fundraising), பிரியாவிடை (Goodbye), புகார் (Grievance), விசாரணை (Inquiry), நேர்காணல் (Interview), அறிமுகம் (Introduction), அழைப்பிதழ் (Invitation), விடுப்பு (Leave), காதல் (Love), சந்தைப்படுத்தல் (Marketing), ஒழுங்கு (Order), அனுமதி (Permission), வசமாக்குதல் (Persuasive), பணி உயர்வு (Promotion), பரிந்துரை (Recommendation), மேற்கோள் (Reference), வேண்டுகோள் (Request), பணித் துறப்பு (Resignation), பணி ஓய்வு (Retirement), காதல் நயம் (Romantic), நன்றி (Thank You), இடமாற்றம் (Transfer), எச்சரிக்கை (Warning), வரவேற்பு (Welcome) என்பன உள்ளிட்ட 69 வகையான கடிதங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மாற்றி யோசி!
ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கினால், அத்தலைப்புடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட கடித மாதிரிகள் தரப்பட்டிருக் கின்றன. இத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் 1350க்கும் அதிகமான மாதிரிக் கடிதங்களிலிருந்து நமக்குத் தேவையான மாதிரிக் கடிதத்தை எடுத்து, நமக்கேற்றவாறு சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து புதிய கடிதங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
அப்புறமென்ன, ஆங்கிலக் கடிதம் எழுத இனிச் சிறிதும் அச்சப்பட வேண்டாம். http://www.letters.org/ எனும் இணைய முகவரிக்குச் சென்று நாமும் ஆங்கிலக் கடிதங்களை எழுதி அசத்தலாம்.
 சத்துணவு பொடி இதோ !!!
நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,போர்ன்விட்டா,காம்ப்ளான்,பீடியாசுயர் போன்றவற்றில்தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.
இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.
இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;
சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேழ்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.
புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். இவை அனைத்துமே எல்லா இடத்திலும் கிடைக்கும். ஒரு வேளை கம்பு, கேழ்வரகு இவை கிடைக்கவில்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம். அதே போல் இந்த கஞ்சியை பாலோடு சேர்த்து வேக வைத்து கொடுத்தால், உடம்பில் பால் சத்தும் இதனுடன் சேரும்.
இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?
(பின்குறிப்பு :- இத்துடன் குழந்தைகளுக்குப் பொருந்தக் கூடிய மூலிகைப்பொடி (தூதுவேளை,துளசி, ஓமவல்லி போன்று...)சேர்த்துக்
கொள்ளலாம்.

Monday 18 May 2015

Become rich in 10 minutes

கிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு!!!



கிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு!
பிறந்த நாள் அல்லது முக்கியமான ஏதாவதொரு நாளைக் குறிப்பிட்டுச் சொன்னால், நீங்கள் அந்த நாளுக்கான கிழமையைக் கணக்கிட்டுக் கூற முடியும். எப்படி என்கிறீர்களா?
ஜனவரி - 0
பிப்ரவரி - 3
மார்ச் - 3
ஏப்ரல் - 6
மே - 1
ஜூன் - 4...
ஜூலை - 6
ஆகஸ்ட் - 2
செப்டம்பர் - 5
அக்டோபர் - 0
நவம்பர் - 3
டிசம்பர் - 5
இதை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்கள் மனதினில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் யாரிடமாவது அவர்களுடைய பிறந்த நாள் அல்லது குறிப்பிடத்தக்க ஒரு நாளைக் கேளுங்கள்
அவர் பதில் - மார்ச் 21, 1999
மேலுள்ள மாதங்களுக்கான வரிசையில் அதற்கான எண் - 3
அடுத்துத் தேதியை எடுக்கவும் - 21
வருடத்தின் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எடுக்கவும் - 99
வருடக் கடைசி இலக்கத்தை 4 ஆல் வகுக்கவும் - 99/4 = 24 மீதி 3
அடுத்து அனைத்து எண்களையும் சேர்க்கவும் - 3 + 21 + 99 + 24 = 147
தற்போது கூட்டி வந்த எண்ணை 7 ஆல் வகுக்கவும் - 147/7 = 21 ஆல் வகுத்த பின்பு மீதி 0
மீதியாக வரும் எண்
0 - ஞாயிற்றுக் கிழமை
1 - திங்கள் கிழமை
2 - செவ்வாய்க் கிழமை
3 - புதன் கிழமை
4 - வியாழக் கிழமை
5 - வெள்ளிக் கிழமை
6 - சனிக் கிழமை.
இங்கு நாம் கணக்கிட்ட நாளுக்கான கிழமை 0 என்பதால் ஞாயிற்றுக் கிழமை

நோய்களின் தன்மை அறிந்திட!!!

நோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ‌ பரிசோதனைகள்!- ஆச்சரியமான‌ அரிய தகவல்
உங்கள் உடலில் உண்டான நோய்களின் அவற்றின் தாக்க‍ம் அதிகமாக இருக்கிறதா? அல்ல‍து குறைவாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும்
பரிசோதனைமுறை வருமாறு.
காலையிலேயே சிறுநீரை கண்ணாடி பாத்திர த்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன்பின் அது எப்படி செயல்படுகிறது என்று கவனியுங்கள்.
எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது.
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது.
எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் கால தாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குண மாகாது.
எண்ணெய்த்துளி சிதறினாலோ அல்லது அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.
இப்பரிசோதனை எளிமையான சித்த மருத்துவ மாகும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்க ளாகும்