இணையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இணையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.
No comments:
Post a Comment