Wednesday 21 January 2015

விஞ்ஞான அறிவு!!!

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க...? கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி.? நவ தானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .!!
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். தமிழர் பெருமையை பரப்ப இதை share செய்யுங்கள்..!! 

Monday 19 January 2015

புகைப்படங்கள்!!!

திகைக்க வைக்கும் புகைப்படங்கள்










Friday 16 January 2015

அட்ச ரேகை, தீர்க்க ரேகை!!!

 -------------

 

அட்ச ரேகை, தீர்க்க ரேகை

அன்பு நண்பர்களே,
         ''தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி''வலைப்பதிவிற்கு தங்களை வருக,வருக என அன்புடன் வரவேற்கிறோம். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்ச மற்றும் தீர்க்க ரேகை விபரங்கள் பற்றி தேடும்போது,                  

உலகின் எந்த மூலையிலும் உள்ள ஊர்களின் அப்போதைய நேரம், உலக வரை படத்தில் அதன் இடம், அந்த ஊரின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை, எந்த நாடு என அனைத்து தகவல்களையும் மிகக் குறைந்த நேரத்தில் காட்டும் இணைய தளம் ஒன்றைக் கண்டேன். http://worldtimeengine.com/about என்ற முகவரியில் உள்ள தளம் தரும் தகவல்கள் வியப்பைத் தருகின்றன.
ஒரே நேரத்தில் நீங்கள் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருக்கின்ற ஊரின் நேரத்தை அறியலாம்.எடுத்துக் காட்டாக சென்னை,லண்டன்,மாஸ்கோ (Chennai and London and Moscow) எனக் கொடுத்து நேரம் அறிய எணி என்ற பட்டனை அழுத்த வேண்டியதுதான். உடனே இந்த மூன்று ஊர்களின் சாட்டலைட் படம் மேப்பாகக் காட்டப்படுகிறது. நீங்கள் கேட்கும் ஊரின் மேலாக அடையாளம் காட்டப்படுகிறது. படத்திற்கு மேலாக ஊர் பெயர், ஊர் உள்ள நாடு, அது காலை அல்லது மாலை அல்லது இரவா எனக் காட்டி அப்போதைய நேரம், கிழமை மற்றும் தேதி காட்டப்படுகிறது. கீழாக சாட்டலைட் மேப் தரப்படுகிறது. மேப்பில் அந்த ஊரின் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் சீதோஷ்ண நிலை காட்டப்படுகிறது. வழக்கம்போல் கூகுள் மேப்பில் பெரியது (ZOOM) செய்வது போல இதனையும் பெரியது (ZOOM) செய்து காணலாம். மூன்று வகை மேப்பினையும் காணலாம்.
இது பன்னாட்டளவில் பல ஊர்களுக்கு தொலைபேசி அல்லது இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த ஊர்களின் அப்போதைய நேரத்தைத் தெரிந்து செயல்பட உதவும்.பயன்பெறுங்கள் 

இணையத்தில் வேகமாக உலவ!!!

இணையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்

நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இணையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.

விண்டோஸ்!!!

விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் செயல்பாடு


விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.
டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.
1. Ctrl Shift Esc கீகளை அழுத்துங்கள்.
2. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதில் கிளிக் செய்திடுக.
3. Ctrl Alt Delete கீகளை அழுத்தி பெறுக.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் ஐந்து டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றின் பயன்பாட்டினை இங்கு காணலாம்.
1. அப்ளிகேஷன்கள் (Applications): இதன் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் (பணிகள்) காட்டப்படும். இதில் சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும், ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் காட்டப்பட மாட்டாது. இந்த டேப்பினைப் பயன்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கும் இடைப் பொழுதில், உறைந்து செயலற்று நின்று போன, புரோகிராம்களை மூடலாம். அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, End Task பட்டனை அழுத்தினால் போதும். நம் கட்டளைகளுக்கு எந்தவித செயல்பாடும் காட்டாமல் அப்படியே நின்று போன புரோகிராம்களை மூட இது மிகவும் உதவும். ஆனால், அந்த புரோகிராம் மூலம் சேவ் செய்யப்படாத டேட்டா, பின்னர் நமக்குக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கையில், வேர்ட் இயங்காமல் போனால், அதன் இயக்கத்தினை டாஸ்க் மேனேஜர் மூலமாக முடிவிற்குக் கொண்டு வந்தால், இறுதியாக எப்போது சேவ் செய்தோமோ, அல்லது வேர்ட் செட் செய்தபடி எப்போது சேவ் செய்ததோ, அதுவரை மட்டுமே பைல் கிடைக்கும்.
2. இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் ஒன்றினை முன்னுக்குக் கொண்டு வர, அதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர், Switch To என்பதில் கிளிக் செய்திடவும்.
3. புதிய புரோகிராம் ஒன்றை இயக்க, முதலில் New Task. என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து புரோகிராமிற்கான கட்டளை வரியைத் தரவும். அல்லது Browse பட்டனில் கிளிக் செய்து, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இது ஸ்டார்ட் மெனுவில் ரன் (Run) கட்டம் மூலம் இயக்குவதற்கு இணையானது.
2. ப்ராசெஸ்ஸஸ் (Processes): இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்க பைல்களையும் காணலாம். ஏதேனும் ஒன்றை மூடினால், சேவ் செய்யப்படாத டேட்டா தொலையலாம். உறைந்து போன புரோகிராமின் செயல்பாட்டினையும் இதன் வழியாகவும் நிறுத்தலாம். ஆனால், நாம் எதனை நிறுத்த முயற்சிக்கிறோம் என்பதனைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கோப்பு எது என்று உணர்ந்திருக்க வேண்டும். சில வேளைகளில், இதனைச் சரியாக அறியாதோர், சிஸ்டம் பைல்களில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி விடுவார்கள். இதனால் சிஸ்டம் இயங்கு வதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, இதனைச் சரியாக அணுகுவது எப்படி எனப் பார்க்கலாம்.
1. அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த, அப்ளிகேஷன்ஸ் டேப் கிளிக் செய்து, அதில் அந்த புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் மெனுவில், Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். உடனே Process டேப் திறக்கப்பட்டு, அந்த புரோகிராமிற்கான இயக்க பைல் ஹைலைட் செய்து காட்டப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்த, End Process என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன்ஸ் டேப் அழுத்தி, ஒரு புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த முடியாத போது, இந்த வழியைப் பின்பற்றலாம். Process ஒன்றில் ரைட் கிளிக் செய்து, பின்னர் End Process Tree என்பதில் கிளிக் செய்தால், அந்த இயக்கம் சார்ந்த அனைத்து பைல் இயக்கங்களும் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.
3. சர்வீசஸ் (Services): சர்வீசஸ் என்பவை, பின்னணியில் இயங்கும் சப்போர்ட் புரோகிராம்களாகும். இதில் பெரும் பாலானவை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்கி பின்னணியில் செயல்படும்.
1.ஒரு சர்வீஸ் புரோகிராமினை இயக்க, நிறுத்தப்பட்ட சர்வீஸ் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர், Start Service என்பதில் கிளிக் செய்திடவும்.
2. ஒரு சர்வீஸை நிறுத்திட, இயங்கிக் கொண்டிருக்கும் சர்வீஸில் ரைட் கிளிக் செய்து, Stop Service என்பதில் கிளிக் செய்திடவும்.
3. சர்வீஸ் ஒன்றுடன் சார்ந்த இயக்கங்களைக் காண, அதன் மீது ரைட் கிளிக் செய்து, Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம், ஒரு சர்வீஸ், கம்ப்யூட்டரின் பிற திறன் செயல்களை இயங்கவிடாமல் அழுத்திக் கொண்டுள்ளதா எனத் தெரியவரும்.
4. பெர்பார்மன்ஸ் (Performance): இந்த டேப் சிஸ்டம் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளைக் காட்டும்.
1. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.
2. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.
3. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.
5. நெட்வொர்க்கிங் (Networking): நெட்வொர்க் இயக்கத்திற்கான லைன் கிராப் இதில் காட்டப்படும். வரை வரிகள் கீழாக கூடுதல் புள்ளி விபரங்கள் காட்டப்படும்.
6. யூசர்ஸ் (Users): இந்த டேப்பில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரின் பட்டியல் காட்டப்படும்.
1. இதில் ஒரு யூசரை ஹைலைட் செய்து, Log off என்பதில் கிளிக் செய்தால், அந்த யூசரின் பயன்பாட்டு காலம் முடிக்கப்படும்.
2. ஏதேனும் ஒரு யூசரை கிளிக் செய்து, Disconnect என்பதில் கிளிக் செய்தால், பயனாளரின் பணிக்காலம் முடிக்கப் படும். ஆனால் அது மெமரியில் காத்து வைக்கப்படும். இதனால், பின்னர், அந்த பயனாளர், மீண்டும் லாக் ஆன் செய்து, தான் விட்ட பணியினைத் தொடரலாம்.
7. டாஸ்க் மேனேஜர் டிப்ஸ்: ப்ராசசஸ், சிபியு பயன்பாடு, மெமரி அளவு ஆகிய அனைத்தும் டாஸ்க் மேனேஜரின் கீழாகக் காட்டப்படும் தகவல்களாகும். இந்த மிக அடிப்படையான தகவல்கள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வளவு கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது அல்லது பணியே ஆற்றாமல் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதில் செயல்திறன் சார்ந்த எண்கள் அதிகமாக இருந்தால், பிரச்னைகளை அறியும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
1. கட்டளைக்குச் செயல்படாத அப்ளிகேஷன்களைக் கண்டறிய அப்ளிகேஷன்ஸ் டேப்பினைக் கிளிக் செய்திட வேண்டும்.
2. கம்ப்யூட்டரின் திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறதா என்பதனை அறிய ப்ராசசஸ் டேப்பினை செக் செய்திடலாம். ப்ராசஸ் ஒன்றினை முடிவிற்குக் கொண்டு வரும் முன், அது குறித்துத் தீவிரமாக அறியவும். இந்த வகையில் மெனு பாரில் உள்ள வியூ மெனு மூலமும் தகவல்களை அறியலாம். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது டாஸ்க் மானேஜர் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், டாஸ்க் மேனேஜரைத் திறந்து மெனு பாரில் Help என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் Task Manager HelpTopics என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பிரித்தறிந்து படிக்கவும்.

Friday 9 January 2015

எலி தொல்லை!!!

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் :-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.
பூனை;
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
புதினா ;
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
மனிதனின் முடி;
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.
நாப்தலின் உருண்டை ;
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
அம்மோனியா ;
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
மாட்டு சாணம் ;
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.
ஆந்தை ;
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
மிளகு ;
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
பிரியாணி இலை ;
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.
வெங்காயம் ;
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
பேபி பவுடர் ;
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.

                                         

Tuesday 6 January 2015

உங்கள் இணையத்தள டவுன்லோட் அதிகரிக்க!!!

உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க

இணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா ?? இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .




இதன் சிறப்புகள் .

உங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .

HTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

யு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் 

இந்தப் பதிவினை ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே செல்லவும்


Read more: உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க 

வலையுலகில் பணம் பெறுவது எப்படி!!!

வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?

வணக்கம் நண்பர்களே நீண்ட நாள் கழித்து எழுதும் பதிவு இது . என்னுடைய இந்தப் பதிவைப் ( பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப ) பார்த்து அதன் மூலம் கோப்புகளை பகிர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்ளது என்று கூறினார் . ஆம் ஏன் என்றால் அந்தப் பதிவின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் அது பணம் சம்பந்தமான பதிவு அன்றி உங்கள் கோப்புகளை பகிரும் போது ஓர் சிறிய அளவு பணத்தையும் பார்க்கலாம் . என் இணையம் மூலம் தினமும் பலரும் பல்வேறு விதமான கோப்புகளை பெறுகின்றனர் ஆனால் எனக்கு என்ன லாபம் என்று கேட்டிருந்தார் இன்னோர் நண்பர் . இதே நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது .



குறிப்பு 
இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த அனுபவத்தில் எழுதுவது .கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .



பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com , filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும் filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .


இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை? 
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் ஷேர்காஷ் (sharecash )

சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .


முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் . (www.sharecash.org)



நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )






கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்) 


அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி
உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் .


ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம்


இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .

தளத்தில் இணைய இங்கே செல்லவும் . (www.sharecash.org)

தோழி ஒருவர் பே பால் பற்றி இன்னும் விரிவாக எழுதக் கேட்டிருந்தார் . மிக விரைவில் அது பற்றிய பதிவுடன் சந்திக்கிறேன் நன்றி .


Read more: வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?