Sunday, 27 December 2015

To Download Books!!!

புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முதன்மையான ஐந்து தளங்கள!!!


கணினி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. இதுபோன்ற நிலையில் நாம் இதழ்களை படிக்க வேண்டுமெனில் ஒன்று நூலகத்திலோ அல்லது நண்பர்களிடம் கடனாகவோ வாங்கிதான் படிக்க வேண்டும். சில நேரங்களில் இவை சாத்தியமாகும் ஆனால் இவை எப்போதும் நடப்பது சாத்தியமற்றது. இது போன்ற நிலையில் நாம் என்ன செய்யலாம் என்றால் இணையத்தின் உதவியுடன் அனைத்து விதமான மின் புத்தகங்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன.

கணினி துறை சார்ந்த மின்புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான மின்புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் இலவசமாக தரவிறக்கம் செய்வதால் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டி வரும். அதாவது 1 மணி நேரத்திற்கு ஒரு பதிவிறக்கம், வேகம் குறைவான பதிவிறக்கம் போன்று, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமை போன்ற ஒரு சில பிரச்சினைகள் எழுக்கூடும். எனினும் குறிப்பிட்ட சில தொகையை செலுத்தினால் மேலே குறிப்பிட்ட எந்த பிரச்சினையும் இல்லை.

பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்ய முடியாதோர் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சிறந்த முதன்மையான ஐந்து தளங்கள்.

1)PDF giant
இந்த தளத்திலிருந்து ஆங்கிலம், ப்ரென்ஞ், இத்தாலி, ஜெர்மன் போன்ற மின் இதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த தளத்தில் பயனர் வசதிகேற்ப வகைப்படுத்த பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பயனர்கள் இலவசமாக மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://pdf-giant.com/computer/

2)Magazines Download - All in PDF
இந்த தளத்தின் சிறப்பே வகைவாரியாக வரிசைப்படுத்தி உள்ளதுதான், மேலும் புத்தகங்களை அவ்வபோது பதிவேற்றம் செய்து கொண்டே இருப்பர்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://magazinesdownload.com/by_category/computers-tech.aspx

3)Magazine Time
அன்மை மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய உதவுகிறது, மற்ற தளங்களில் உள்ளது போன்றே இந்த தளத்திலும் உள்ளது. வகைகள் மற்றும் பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டிகள் அனைத்தும்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://downmagaz.ws/computer_magazine/

4)WorldMags
சிறப்பான தளம் கணினி மின்புத்தகங்களும் மற்ற மின் புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://worldmags.net/index.php?do=cat&category=computes

5)PremioMag
இலவசமாக மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய மற்றுமொரு தளம், நன்றாக உள்ளது பயன்படுத்தி பார்க்கவும்.

கணினி துறை மின்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://ww1.premiomag.com/

மேலும் இந்த தளங்கள் போன்றே இன்னும் பல்வேறு தளங்கள் உள்ளன. இவையாவும் மின் புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

தமிழ் வார இதழ்கள் மற்றும் நாவல்கள் !!

ஆங்கில மின் புத்தகங்களை மட்டும் தான தமிழ் மின்புத்தகங்கள் இல்லையா என்றால் உண்டு ஆனால், கணினி மின்புத்தகங்கள் இல்லை. வார இதழ்களான குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தமிழ் வார இதழ்களை பதிவிறக்கம் செய்ய சுட்டி

http://www.arrkaay.net/search/label/tamil%20magazines

இந்த தளத்தில் அன்மையில் வெளியாகும், இதழ்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருப்பர் அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் பல நாவல்கள் உள்ளன. அதையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
TEXT TEXT

Tuesday, 3 November 2015

முடி வளர!!!

மீண்டும் முடி வளர சில குறிப்புகள்

ஆண்கள், பெண்களுக்கு வழுக்கை விழுவது ஏன்? மீண்டும் முடி வளர சில குறிப்புகள்
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு.ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விடயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன.
புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.
நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.
ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.
தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.
ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விடயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம்.
பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.
தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு. முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.
இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ). நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும். மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.
தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.
1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
3. அலோபேசியா ஏரியாட்டா.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
* ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
* இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.
* மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
* சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.
* சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.
* நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
* பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.
* பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
* சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.
* ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.
* கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.
அலோபேசியா ஏரியாட்டா:
* வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விடயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
* தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.
* இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு.
* உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை, அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.
தலைமுடி மீண்டும் வளர
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Monday, 2 November 2015

கணித பாடம்!!!


 மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற  சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகது 
இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்
 


உங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு .  கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . 

அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் . ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் . 

லிங்க் :https://www.mathway.com/

Sunday, 1 November 2015

மலர் மருந்து!!!

மலர் மருந்து தேர்வு பேசத்தெரியாத குழந்தைகளுக்கு மருந்து தேர்ந்தெடுப்பது எப்படி?
பேசத்தெரிந்தவர்களிடம் அவர்களின் மனக்கோளாறுகளை, உடல் கோளாறுகளை கேட்டறிந்து விடுகிறோம். ஆனால் பேசத்தெரியாத குழந்தைகளுக்கு எப்படி மருந்து கொடுப்பது? குழந்தைகள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் அவர்களின் நடவடிக்கைகளே , உடல் அசைவுகளே, அவர்களுடைய உண்மையான இயல்புகளை காட்டிவிடும். உதாரணமாக ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டால், அதனிடம் விளையாடினால் பேசாமலிருக்கும். இது சிக்கரி என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையாகும். மற்றொன்று குழந்தை, எதை கண்டாலும் பயந்து வீச்சென்று கத்தும், தன் வீட்டிலுள்ள பூனை, நாய், கன்றுபசு என எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும். யாரேனும் புதிய உறவினர்கள் வந்தாலும் அவர்களைக் கண்டதும் கதறி அழும் . இதற்கு “மிமுலஸ்”இதற்கு எனும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு குழந்தை எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காது. போட்டது போட்டவாக்கில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டேயிருக்கும். பசி எடுக்கும் ஆனால் பால் குடிக்க ஆர்வம் இருக்காது. இப்படிப்பட்ட குழதைக்கு “க்ளமாடிஸ்”என்னும் மருந்து கொடுத்தால்-நல்ல குணமாகும். எனவே இது போன்றே இம்மருந்துகள் ஒவ்வொருவருடைய மனநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது. மனநிலைக்கு மருந்து கொடுப்பதினால் உடல் நலமும் ஏற்படுகிறது.
மனிதரின் மனக்குறிகளுக்கேற்ற மலர் மருந்து
  1. அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
  2. எல்லாவற்றையும் இழந்து, அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கும் உடல் உபாதைகள். அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
  3. அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் . அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
  4. அறிவிருக்கும், அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது. அதனால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
  5. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார். சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார். அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
  6. ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார். இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும். எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
  7. இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி, நாள், வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
  8. ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் . எதற்கும் லாயக்கல்ல. எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
  9. கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார், ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார். உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார். அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார். அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும், உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
  10. எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார். அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு . அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார். அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
  11. இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான். அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர். இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
  12. எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர், இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார். இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம். அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
  13. எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர், அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும். அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
  14. மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார். கவலைப்பட மாட்டார். இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
  15. தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார். அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார். தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.
  16. இவரின் மனநலத்தை , உடல்நலத்தை , இவரால் கட்டுப்படுத்த முடியாது. நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர். இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.
  17. போதுமான வயது இருக்கும், ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது. நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது. அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.
  18. தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர். மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர். அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர். எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும். அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
  19. தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.
  20. தன்னையும், தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
  21. பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.
  22. இயற்கை சீற்றங்களுக்கும், மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் பீதியடைபவர். சின்ன சின்ன விவசாயங்களுக்கெல்லாம் பீதியடைவார். அவரை தேற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“ராக்ரோஸ்”.
  23. தன்னளவில் கடுமையான ஆச்சாரங்களை கடைபிடிப்பவர். கல் மனம் என்பார்களே , அவர் மனமும் அப்படிதான். அவருக்குரிய மலர் மருந்து-“ராக் வாட்டர்”.
  24. தன் துயரம் கண்டுகொள்ளமாட்டார். ஆனால் தம் உற்றார் உறவிர்களின் துன்பம் கண்டு கலங்குபவர். என்னாகுமோ என பயப்படுபவர். இவருக்குரிய மலர் மருந்து “ரெட் செஸ்ட் நட்”.
  25. நோய் எதிப்பு ஆற்றல் அறவே அற்றவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வால் நட்”.
  26. தன்னைவிட யார் உயர்ந்தவர்-தனக்குள் அடக்கம் தான் யாவரும் என்ற எண்ணமுடையவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வாட்டர் வயலட்”.
  27. பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரி. இவருக்கேற்ற மலர் மருது “வைன்”.
  28. கொஞ்சம் கூட சளைக்கமாட்டார். ஓய்வே தேவைப்படாது. அதுவும் அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருப்பார். இவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து ”வெர்கூஷவன்”.
  29. பிறரை குற்றம் சொல்வதே வேலை. ஆனால் தான் கற்றுக் கொள்ளாதவர். தன் தவறுகளை திருத்திக்கொள்ள மறுப்பவர். அவரை நியாயப்படுத்தி பேசுபவர் கொஞ்சம் கூட மாறமாட்டார். ”வில்லே” என்ற மலர் மருந்து கொடுத்தால் இவரை மாற்றி விடும்.
  30. தனக்கு ஏற்படும் சாதாரண தோல்விகளையும், தடைகளையும் கண்டு கலங்கி துவண்டு போய்விடுவார். ” ஜென்சியன்”என்ற மலர் மருந்தை இவருக்கு கொடுத்தால் தேறிவிடுவார்.
  31. கடந்தகால சம்பவங்களை நினைத்து வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து ”ஹனிசக்கிள்’.
  32. ”ஹார்ன்பீம்” என்ற மலர் மருது மிக அதிக அளவில் சக்தியை இழநதவர்களையும், மனச்சோர்வு உடையவர்களையும் தேற்றிவிடும்.
  33. எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர். கொஞ்சம் கசப்பு, வெறுப்புடன் பழகுபவர். இவருக்குரிய மலர் மருந்து”ஹால்லி”.
  34. சாவு இடத்திலே கூட தன்னைப்பற்றியே பேசுவார். ”ஹீதர்”என்ற மலர் மருந்து அவரை அற்புதமாக மாற்றி விடும்.
  35. இரண்டு மனதிற்கு சொந்தக்காரர். குழப்பத்திலே மிதப்பவர். ”ஸ்கிளராந்தஸ்” என்னும் மலர் மருந்து அவரை மாற்றிவிடும்.
  36. அதிர்ச்சிக்குள்ளானவரை “ஸ்டார் ஆப் பெத்லஹேம்” என்ற மலர் மருந்து அற்புதமாக மாற்றிவிடும்.
  37. உதவி செய்யத் தெரியாமல், உதவப்போய் தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்பவர்களை- “பைன்” என்ற மலர் மருந்து தேற்றிவிடும்.
  38. எந்த துயரம் வந்தாலும் யாரையும் அழைக்கமாட்டார். ஏன் இறைவனையும் அழைக்கமாட்டார். “ஸ்வீட் செஸ்ட்நட்”என்னும் மலர் மருந்து அவருக்கு ஆறுதல் சொல்லும்.

வீடியோ வசதி!!!

இணையத்தில் உலாவும்போது யூடியூபில் வீடியோ பார்ப்பது உங்களுக்கு பிடித்தமானது என்றால் சைடுபிளேயர் (http://sideplayer.com) - இணையதளத்தை நீங்கள் நிச்சயம் விரும்பாலாம்.
இந்த இணையதளம், இணையத்தில் உலாவியபடியே யூடியூப் வீடியோவை பார்த்து ரசிக்க வழி செய்கிறது. அதாவது எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்தியபடியே அதன் பக்கவாட்டில் ஒரு மூலையில் யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.
குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக செயல்படும் இந்தச் சேவை யூடியூப் வீடியோவை பிரவுசரின் ஒரு மூலையில் சின்ன பெட்டியாக தோன்றச்செய்கிறது. ஆக, பார்த்துக்கொண்டிருக்கும் இணையதளத்தில் ஒரு கண் வைத்தபடி வீடியோவை ரசிக்கலாம். வீடியோ தோன்றும் பெட்டியையை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம். அதன் அளவையும் மாற்றிக்கொள்ளலாம்.
வேறு கட்டுப்பாட்டு வசதிகளும் இருக்கின்றன. ஒரு இணையதளத்தில் இருந்து வேறு ஒரு இணையதளத்திற்கு தாவினாலும் பிரச்சினையில்லை. அந்த தளத்தின் மூலையிலும் வீடியோ தோன்றும்.
காட்சி விளக்க வீடியோக்களைப் பார்க்கும் போது அந்த இணையதளத்தில் இருந்தபடியே வீடியோவைப் பார்க்க முடிவது பயன் தரக்கூடியதாக இருக்கும். உதாரணத்திற்கு வேர்ட்பிரஸ் வலைப்பதிவின் பயன்பாட்டை விளக்கும் வீடியோவை பார்த்தபடியே வலைப்பதிவில் அந்த வழிகாட்டுதலை பின்பற்றலாம்.
இணையதள முகவரி:http://sideplayer.com/

வரைபடத்தில் ஒளிப்படங்கள்!!!

ஒளிப்படப் பகிர்வு சேவைகளில் 'இன்ஸ்டாகிராம்' கொடி கட்டி பறப்பது தெரிந்த விஷயம்தான். இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒளிப்படங்களைப் பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்போது இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியாக, வரைபடம் மீது புதிய இன்ஸ்டாகிராம் படங்களைக் கண்டு ரசிக்க வழி செய்கிறது இன்ஸ்டாமேப் இணையதளம்.
இந்த இணையதளம் இன்ஸ்டாகிராம் ஒளிப்படங்களை, அவை எடுத்து வெளியிடப்பட்ட இடங்களின் அடிப்படையில் உலக வரைபடம் மீது சுட்டிக்காட்டுகிறது. ஆக இந்தத் தளத்தில் உங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்து அருகாமையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்வு செய்து, அங்கு எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இடத்தைத் தேர்வு செய்த பின் அதில் உள்ள கேமரா ஐகானை கிளிக் செய்தால் சரசரவென்று ஒளிப்படங்கள் 'தம்ப்நெய்ல்' காட்சிகளாக வரைபடம் மீது தோன்றுகின்றன. இன்ஸ்டாகிராம் படங்களை ரசிக்க அருமையான வழி! அதோடு பார்த்து ரசித்த படங்களைச் சமூக ஊடகங்களில் பகிரவும் செய்யலாம்.
இணையதள முகவரி: https://instmap.com/

விசைப்பலகை(keyboard)குறுக்கு வழிகள்!!!


எல்லாப் பிரவுசர்களிலும் விசைப்பலகை பயன்பாட்டுக்கான குறுக்கு வழிகள் உண்டு. இந்தக் குறுக்கு வழிகளில் சில பரவலாக அறியப்பட்டவை. இவை பலரால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பல அருமையான குறுக்கு வழிகள் இன்னமும் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வராமல் இணைய ரகசியங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் 'ஷிப்ட் கீ' சார்ந்த சில முக்கியப் பயன்பாட்டை 'மேக்யூஸ்ஆப்' இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. உங்கள் மவுசில் 'ஸ்க்ரோல் வீல்' எனும் சிறிய சக்கரம் இருப்பதைக் கவனித்திருக்கலாம். இணையப் பக்கங்களை மேலும் கீழுமாக நகர்த்த இந்தச் சக்கரத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் சில இணையப் பக்கங்களில் பக்கவாட்டில் நகர்த்தும் தேவை ஏற்படலாம். இது போன்ற இணையப் பக்கங்களில் உலாவும் போது ஷிப்ட் கீயைப் பிடித்தபடி மவுஸ் சக்கரத்தை நகர்த்தினால் போதும்; இணையப் பக்கத்தின் உள்ளடக்கம் பக்கவாட்டில் நகரும்.
அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களைப் பயன்படுத்தும் பழக்கம், உங்களில் பலருக்கு இருக்கலாம். இப்படிப் பல இணையதளங்களைப் பயன்படுத்தும்போது தற்செயலாக ஒரு இணையதளத்தை மூடிவிடும் நிலை உண்டாகலாம். 'அடடா பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தை மூடிவிட்டோமே' என்று கவலைகொள்ள வேண்டாம். இப்போதும் ஷிப்ட் கீ கைகொடுக்கும்.
ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயைப் பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்தினால் சற்று முன் மூடப்பட்ட இணையதளம் மீண்டும் தோன்றும். அப்படியே பிடித்தபடி ‘டி’ எழுத்தை அழுத்திக்கொண்டிருந்தால் வரிசையாக மூடப்பட்ட தளங்கள் தலைகீழ் வரிசையில் தோன்றும்.
எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களைத் திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு, இந்தக் குறுக்கு வழி உற்சாகத்தைக் கொடுக்கும்.
தற்செயலாக 'ஸ்பேஸ் பாரை' அழுத்தும்போது இணையப் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்கு போய்விடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதையே ஷிப்ட் கீயை அழுத்தியபடி செய்தால், மீண்டும் இணையப் பக்கத்தின் மேலேறி வந்துவிடலாம்.
சற்றே நீளமான கட்டுரையைப் படித்ததும், ஒரே தாவலில் மேலே வர இந்த வசதி கைகொடுக்கும்.

-------------

பல காரணங்களினால் இணையதளங்களின் உள்ளடக்கத்தின் சில பகுதிகளை காப்பி, பேஸ்ட் செய்யும் அவசியம் ஏற்படலாம். நல்ல தகவல்களை மேற்கோள் காட்டவும், மெயிலிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளவும் இந்தத் தேவை ஏற்படலாம்.
இதற்கு முதலில் மேற்கோள் காட்ட வேண்டிய பகுதியை மவுஸ் கொண்டு செலக்ட் செய்ய வேண்டும்.
இப்படி வரிகளை மவுஸ் கொண்டு செலக்ட் செய்யும்போது சில நேரங்களில் முதல் எழுத்தை அல்லது கடைசி சில எழுத்துக்களை தவறவிடலாம். பின்னர் மீண்டும் ஒரு முறை கவனமாக செலக்ட் செய்ய வேண்டும்.
இதைவிட ஓர் எளிய வழி இருக்கிறது. செலக்ட் செய்ய வேண்டிய வார்த்தை மீது மவுசால் டபுள் கிளிக் செய்தால் அந்த வார்த்தை செலக்ட்டாகிவிடும். நீளமான பத்தியை செலக்ட் செய்ய வேண்டி இருந்தால், பத்தியின் தொட‌க்கத்தில் உள்ள வார்த்தை மீது இரட்டை கிளிக் செய்து விட்டு, பின்னர் ஷிப்ட் கீயை அழுத்திய படி, பத்தி முடியும் வார்த்தையில் டபுள் கிளிக் செய்தால் போதும். பத்தி என்ற‌ல்ல.. பல பக்கங்களை காப்பி செய்யவும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
இதேபோல தேர்வு செய்த பத்தியின் நடுவில் சில வரிகள் இல்லாமல் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் செலக்ட் ஆக, கண்ட்ரோல் கீயை அழுத்திய படி செலக்ட் செய்து கொள்ளலாம்.


Friday, 30 October 2015

ராவணன் ஏன் கொல்லப்பட்டான் மறைக்கப்பட்ட உண்மை




இலங்கையின் அரசன் ராவணன் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டான் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் ராவணன் செய்த கர்ம வினைகளும் சாபங்களுமே அவனின் மரணத்திற்கு காரணங்களாய் திகழ்ந்தது.
ராவணன் ஒரு சிறந்த சிவ பக்தன். இருப்பினும் அவன் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டதன் காரணம் அவன் செய்த பாவங்களால் ஏற்பட்ட சாபங்கள். யாரெல்லாம் ராவணனை சபித்தார்கள் என்பதனைப் பார்ப்போம் ;

ராவணனின் தங்கை சூற்பனகையின் கணவன் வித்யுத்ஜின், கால்கை நாட்டின் சேனாதிபதியாக இருந்தான். ராவணன் உலகை வெல்லும் நோக்கத்தோடு போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றினான். கால்கை நாட்டுடனும் போர் புரிந்தான். அப்போரில் தன் தங்கை கணவனான வித்யுத்ஜினை வதம் செய்தான். இதனால் கோபம் கொண்ட சூர்பனகை, ராவணனைப் பார்த்து "ராவணா உண் மரணத்திற்கு நானே காரணமாவேன்" என சபித்தாள்.

சூற்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அருத்ததே ராவணன் சீதையை கவரக்காரணம்.
ஒரு சமயம் இலங்கேஸ்வரன் ராவணன் சிவபெருமானை தரிசிக்க கைலாய மலைக்கு சென்றான். அங்கே நந்தி பகவானை கேலி செய்து நகைத்தலானான். கோபம் கொண்ட நந்தி, ராவணனின் அழிவிற்க்கு ஒரு குரங்கே காரணமாகுமென சபித்தார்.
குரங்கு உருவங்கொண்ட ஸ்ரீ ஹனுமான், சீதா பிராட்டியைக் காண  இலங்கை சென்றதும், ராவணன் ஹனுமானின் வாளிற்க்கு நெருப்பை மூட்டி பெரும் தவறைச் செய்தான். இதனால் ஸ்ரீ ராமனின் கடும் கோபத்திற்கு ஆளானான்.
சிறந்த சிவ பக்த்தரான ராவணன், சிவ பெருமானை கவரும் பொருட்டு கைலாய மலையை தூக்கினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, ஒரு பெண்ணால் ராவணன் மடிவான் என சபித்தாள்.
சொர்கத்தை கைப்பற்ற நினைத்த ராவணன், சொர்கத்தை நோக்கி படை எடுத்தான். அப்சரஸ்களில் பேரழிகியான ரம்பையை கண்டதும் மோகம் கொண்ட ராவணன் ரம்பையை கவர்ந்து செல்ல எண்ணினான்.

ராவணனின் சகோதரன் குபேரனின் மகனான நளகுபேரனை திருமணம் செய்யப்போகும் ரம்பை ராவணனுக்கு மருமகளாவாள். அப்படியிருக்க ரம்பையை கவர்ந்த ராவணனை சபித்தான் நளகுபேரன்.


இப்படியாக பல பாவங்களை செய்து பெரும் சாபங்களிற்க்கு ஆளான ராவணன் இறுதியில் ஸ்ரீ ராமரால் வதைக்கப்பட்டு, மாபெரும் பெயரைப்பெற்றான்.